இன்றைய தினம் கொவிட் தொற்றுக்குள்ளான 4 பேர் உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கமைய, 2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு 15 ஐ சேந்த 70 வயது பெண் கொழும்பு தேசிய வைத்தியசாயில் அனுமதிக்கப்பட்ட  நிலையில் உயிரிழந்துள்ளார் (கோவிட் + நிமோனியா). இந்த மரணம் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு 12  ஐ சேந்த 53 வயது ஆண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த மரணம் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொரள்ளையை சேர்ந்த  சேந்த 84 வயது பெண் வீட்டில் உயிரிழந்துள்ளார் (கோவிட் + நிமோனியா). இந்த மரணம் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு 10  ஐ சேந்த 75 வயது ஆண் கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாயில் உயிரிழந்துள்ளார் (கோவிட் + நிமோனியா). இந்த மரணம் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.