நாட்டில் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கம்பஹா பொலிஸ் பிரிவுக்கும் , நீர்கொழும்பு, கந்தானை மற்றும் ஜா-எல பொலிஸ் பிரிவுகளுக்கும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த பொலிஸ் ஊரடங்கு கம்பஹா, கிரிந்திவெல, தொம்பே, பூகொட, கனேமுல்ல, வீரகுல, வெலிவேரிய, மல்வத்துஹிருபிட்டிய, நிட்டம்புவ, மீரிகம, பள்ளவெல, யக்கல, ஜா – எல, கந்தானை, வெயாங்கொட ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கே இவ்வாறு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.