சீதுவைக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு

சீதுவை பொலிஸ் எல்லைப் பகுதிக்கு உடன் அமுலுக்கு வரும் வரையில் மறு அறிவித்தல் வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கம்பஹா பொலிஸ் பிரிவிலும் களனி பொலிஸ் பிரிவில் ஜா-எல மற்றும் கந்தான பொலிஸ் எல்லைப்பகுதிக்குள்ளும் மறு அறிவித்தல் வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் இன்று (07) காலை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

1897 ஆம் ஆண்டு இலக்கம் 03 இன் கீழான தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்புக் கட்டளைச் சட்டத்தின் எற்பாடுகளை நடைமுறைப்படுத்தும் வகையில் (2020.10.07) இன்று முதல் மறு அறிவித்தல் வரையில் கீழ் கண்ட 17 பொலிஸ் எல்லை பகுதிக்குள் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.

கம்பஹா பொலிஸ் பிரிவு

01. கம்பஹா பொலிஸ் எல்லைப் பகுதிக்குள்.
02. கணேமுல்ல பொலிஸ் எல்லைப் பகுதிக்குள்.
03. கிரிந்திவெல பொலிஸ் எல்லைப் பகுதிக்குள்.
04. மல்வத்து ஹிரிபிட்டிய பொலிஸ் எல்லைப் பகுதிக்குள்.
05. மீரிகம பொலிஸ் எல்லைப் பகுதிக்குள்.
06. நிட்டம்புவ பொலிஸ் எல்லைப் பகுதிக்குள்.
07. பூகொடை பொலிஸ் எல்லைப் பகுதிக்குள்.
08. வேயாங்கொடை பொலிஸ் எல்லைப் பகுதிக்குள்.
09. வீரகுல பொலிஸ் எல்லைப் பகுதிக்குள்.
10. வெலிவேரிய பொலிஸ் எல்லைப் பகுதிக்குள்.
11. யக்கல பொலிஸ் எல்லைப் பகுதிக்குள்.
12.தொம்பே பொலிஸ் எல்லைப் பகுதிக்குள்.
13.மினுவங்கொடை பொலிஸ் எல்லைப் பகுதிக்குள்.
14 பல்லேவெல பொலிஸ் எல்லைப் பகுதிக்குள்.

களனி பொலிஸ் பிரிவு

01. ஜா – எல பொலிஸ் எல்லைப் பகுதிக்குள்.
02. கந்தான பொலிஸ் எல்லைப் பகுதிக்குள்.

நீர் கொழும்பு பொலிஸ் பிரிவு

01.திவுலப்பிட்டிய பொலிஸ் எல்லைப் பகுதிக்குள்

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்ட காலப்பகுதியில் அனைவரும் தமது வீடுகளில் இருக்க வேண்டும். இதேபோன்று தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் காலப்பகுதிக்குள் இந்த பிரதேசத்திற்குள் பிரவேசித்தல், அதேபோன்று பிரதேசத்தில் இருந்து வெளியேறுதல் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் தூர இடங்களுக்கான பயணிகள் போக்குவரத்து பஸ்கள் இந்த பிரதேசத்தின் ஊடாக பயணிக்க முடிந்த போதிலும் இந்த பகுதிகளில் உள்ள பஸ் திரிப்பு நிலையங்களில் பஸ்களை நிறுத்துதல் மற்றும் பயணிகளை ஏற்றி இறக்குதல் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களில் உள்ள ரயில் நிலையங்களில் பயணிகளை ஏற்றுவதற்காகவோ அல்லது இறக்குவதற்காகவோ ரயில்கள் நிறுத்தப்படமாட்டாது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page