கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் உள்ளிட்டோரின் சடலங்களை வலுக்கட்டாயமாக,  தகனம் செய்வதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று 01.12.2020 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

வழக்கை தொடர்ந்து விசாரிக்கலாம், என்ற நிலைப்பாட்டில் ஒரு நீதியரசர் இருந்துள்ளார். எனினும் 2 நீதியரசர்கள் வழக்கை விசாரணைக்கு ஏற்காமலே தள்ளுபடி செய்ய வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருந்தமையால், வழக்கு அப்படியே விசாரணைக்கு ஏற்கப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.