கொரோனா பரவலால் மக்கள் தமது அன்றாட கடமைகளிலிருந்து விலகியிருக்க முடியாது.

பௌதீக வள அபிவிருத்தியுடன் இணைந்ததாக, ஆளணி வள அபிவிருத்தியையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சமூக உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்திக்கான கண்டி மாவட்ட கூட்டம் நேற்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தற்போதைய உட்கட்டமைப்பு வசதிகளையும் அபிவிருத்தி ஆளணி வளத்தையும் அபிவிருத்தி செய்வது அரசாங்கத்தின் அபிலாஷையென அமைச்சர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கொரோனா தொற்றால் மக்கள் தமது அன்றாட கடமைகளிலிருந்து விலகியிருக்க முடியாதென தெரிவித்த நாமல் ராஜபக்ஸ, சுகாதார பரிந்துறைகளுக்கு அமைய, இன்று எம்மால் வாழவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  

கொரோனாவால் இன்று உலகமே பாரிய அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளதால், எமக்கும் இதன் தாக்கம் உள்ளதென்றும், இதற்கமைய அரச பொறிமுறைகள் செயற்படுத்தப்பட வேண்டும் என்றார்.