அரிசிக்கான அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயம்

இன்று நள்ளிரவு (04) முதல் அமுலுக்கு வரும் வகையில் அரிசிக்கான அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதனுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் சற்று முன்னர் வௌியிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, 1 கிலோ சம்பா மற்றும் பச்சை அரிசி சம்பாவுக்கான அதிகபட்ச சில்லரை விலை 94 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டரிசி ஒரு கிலோ 92 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பச்சை அரிசி ஒரு கிலோவின் அதிகபட்ச சில்லறை விலை 89 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது. Ada-Derana