பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான சிறுமி தற்கொலை முயற்சி ; காதலன் உட்பட மூவர் கைது 

மட்டக்களப்பு  வவுணதீவு பிரதேசத்தில் 17 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி அங்கிருந்து தப்பித்து கல்லடி பாலத்தில் இருந்து வாவியில் குதித்து தற்கொலை செய்ய முற்பட்டபோது இராணுவத்தினரால் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட சிறுமியின் காதலன் மற்றும் காதலனின் நண்பர்கள் உட்பட 3 பேரை இன்று வியாழக்கிழமை  கைது செய்துள்ளதாக வவுணதீவு பொலிசார் தெரிவித்தனர். 

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, 

வவுணதீவு பிரதேசத்தை சேர்ந்த 17 வயது சிறுமி 22 வயதுடைய ஆயித்தியமலை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவதினமான கடந்த 4 ம் திகதி இரவு 11 மணியளவில் காதலன் சிறுமியை கையடக்க  தொலைபேசி ஊடாக வீட்டில் இருந்து வெளியில் வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். 

இதனையடுத்து குறித்த சிறுமி வீட்டின் வெளிப்பகுதில் நின்றிருந்தபோது அங்கு மதுபோதையில் அவளுடைய காதலன் மற்றும் காதலனின் நண்பர்கள் வந்திருந்ததாகவும் அப்போது சிறுமியை வீதிக்கு வருமாறு அழைத்தபோது சிறுமி வரமுடியாது என தெரிவித்த நிலையில் காதலனின் நண்பர்கள் இருவர் சிறுமியின் வாயை பொத்தி அவரை வீட்டின் வேலிப்பகுதியில் இருந்து தூக்கி கொண்டு அருகிலுள்ள காட்டிற்கு கொண்டு சென்றுள்ளனர்  

இந்த நிலையில் சிறுமியின் காதலன் சிறுமியை முதலில் பாலியல் பலத்தாரம் செய்ததுடன் அவரின் நண்ன் ஒருவன் சிறுமியை பலாத்தகாரம் செய்ய முற்பட்டபோது சிறுமி அவனின் கையை கடித்துவிட்டு அங்கிருந்து வீட்டிற்கு தப்பியோடியுள்ளார்.

இதன் பின்னர் 05 ஆம் திகதி திங்கட்கிழமை பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் முறைப்பாடு செய்ததையடுத்து சிறுமியை மட்டு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டதுடன் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான  சிறுமியின் காதலன் மற்றும் அவனது நண்பர்கள் தலைமறைவாகியுள்ளனர். என பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் 

இந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி 06 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்று மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் மேல் இருந்து ஆற்றில் குதித்த போது அங்கு கடமையில் இருந்த இராணுவத்தினர் உடனடியாக செயற்பட்டு அவரை காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்தனர் .

இதேவேளை தலைமறைவாகியிருந்த சிறுமியின் காதலன் மற்றும் அவருடைய நண்பர்கள் இருவர் உட்பட 3 பேரை இன்று வியாழைக்கிழமை கைது செய்துள்ளதாகவும் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வீரகேசரி பத்திரிகை

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page