கொழும்பு – புறக்கோட்டை அரச பேருந்து தரிப்பிடம் மற்றும் பெஸ்டியன் மாவத்தை தனியார் பேருந்து நிலையம் ஆகியன மீள திறக்கப்படவுள்ளன.

மேல் மாகாணத்துக்கான பயணத்தடை இன்று நள்ளிரவு முதல் நீக்கப்படவுள்ள நிலையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த இரு பேருந்து பேருந்து தரிப்பிடங்களும் இன்று நள்ளிரவு 12 மணிமுதல் மீள திறக்கப்படவுள்ளன.

எனினும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து பயணிகளை ஏற்றவோ அல்லது இறக்கவோ பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நாளை முதல் ரயில் சேவைகளும் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கோட்டை ரயில் நிலையம் நோக்கி 80 ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள ரயில் நிலையங்களில் குறித்த ரயில்கள் நிறுத்தப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.