கொரோனா தொற்று காரணமாக  மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

78 வயதுடைய ஆண் ஒருவரே சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட மாரடைப்பு   இவரது மரணத்திற்கு காரணம் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதனையடுத்து நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை  35 ஆக உயர்வடைந்துள்ளது. 

வீரகேசரி பத்திரிகை