நாட்டில் தற்போது பரவும் கொரோனா வைரஸின் வீரியம் அதிகம் என்பதனால், ஒரு மீற்றர் சமூக இடைவெளியை பேணுவது போதுமானதா? அல்லது அதனை 2 மீற்றராக அதிகரிப்பதா? என்பது தொடர்பில் இன்று தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொழில்நுட்பக் குழு கூடி ஆராயவுள்ளது.

அந்தக் குழுவின் கூட்டத்தின் பின்னர், சமூக இடைவெளியை பேணுவது தொடர்பான அறிவித்தல் விடுக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, Hand Sanitiser எனப்படும் கைகளில் தொற்று நீக்கும் திரவத்தை பயன்படுத்துவது தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் மத்திய குழு உறுப்பினரும், ஊடக குழு உறுப்பினருமான வைத்தியர் வாசன் ரத்னசிங்கம் எமது செய்திச் சேவைக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.