ஊரடங்கு நாளை நீக்கம் – தனிமைப்படுத்தல் தொடரும் பிரதேசங்களின் (முழு விபரம்) இணைப்பு

மேல் மாகாணம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் விதிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நாளை (09) அதிகாலை 5.00 மணிக்கு நீக்கப்படும் என்று இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இருப்பினும், மட்டக்குளி, மோதரை, வாழைத்தோட்டம், கொட்டாஞ்சேனை, வெல்லம்பிட்டி, ஆட்டுப்பட்டித் தெரு, பொரளை, புளுமெண்டல், கரையோர பொலிஸ் பிரிவு, மாளிகாவத்தை, தெமட்டகொட, கிராண்ட்பாஸ் ஆகிய 12 பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக இருக்கும்.

கம்பஹா மாவட்டத்தில் வத்தளை , பேலியகொடை , கடவத்த , ராகம, நீர்கொழும்பு , பமுனுகம , ஜா எல , சப்புகஸ்கந்த பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக இருக்கும்.

களுத்துறை மாவட்டத்தின் ஹொரணை , இங்கிரிய பொலிஸ் பிரிவுகளும், வேக்கட கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக இருக்கும்.

இதேவேளை, குருநாகல் நகரசபைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் குளியாப்பிட்டி பொலிஸ் பகுதிகள் ஆகியவை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கோகலை மாவட்டத்தில் மாவனெல்லை மற்றும் ருவன்வெல்ல பொலிஸ் பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்று இராணுவ தளபதி மேலும் தெரிவித்தார்.

அத்துடன், கொழும்பின் சில தொடர்மாடி குடியிருப்புகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

மட்டக்குளியின் மெத்சந்த செவன, மிஹிஜயசெவன, மோதரையின் ரண்முத்து செவன, கிராண்ட்பாஸின் முவதொர உயன , தெமட்டகொடையின் சிறிசந்த உயன, மாளிகாவத்தையின் தேசிய வீடமைப்புத் திட்டம் போன்ற தொடர்மாடிகளில் இருந்து எவரும் வெளியே செல்லவோ எவரும் உள்ளே வரவோ அனுமதியில்லை.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page