இலங்­கை­யி­ட­மி­ருந்து பெரு­ம­ளவு இரா­ணுவ சலு­கைகளை அமெ­ரிக்கா நாடு­கி­றது – உடன்­ப­டிக்கை வரைபில் தக­வல்கள்

அமெ­ரிக்­கா­வா­னது  படை­களின் நிலைப்­பாடு தொடர்­பான உடன்­ப­டிக்­கையின் கீழ் இலங்­கை­யி­ட­மி­ருந்து பெரு­ம­ளவு இராணுவ சலு­கை­களை நாடு­வ­தாக தகவல் வெளியா­கி­யுள்­ளது.

தற்­போது அந்­நாட்­டுக்கும் இலங்­கைக்­கு­மி­டையில் பேச்­சு­வார்த்­தை­களின் கீழுள்ள  படை­களின் நிலைப்­பாடு தொடர்­பான  அந்த உடன்­ப­டிக்கை வரைபின் பிர­தி­யொன்றின் மூலமே மேற்­படி தகவல் அறி­யப்­பட்­டுள்­ள­தாக  இலங்­கையின்  முன்னணி  ஆங்­கிலப் பத்­தி­ரி­கை­யொன்று தெரி­விக்­கி­றது.

அந்த உடன்­ப­டிக்­கையில் அமெ­ரிக்­காவால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள கோரிக்­கை­களில் பல இலங்­கையின் இறை­யாண்மையைப் பாதிப்­ப­ன­வாக உள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.

அமெ­ரிக்க விமா­னங்­களும்  கப்­பல்­களும் தரித்­தி­ருத்தல் மற்றும் பரி­சோ­த­னை­யி­லி­ருந்து  விடு­விக்­கப்­ப­டு­வதை அமெ­ரிக்கா நாடு­கி­றது. 

இதன் பிர­காரம்  சர்­வ­தேச ரீதியில்  அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட  ஒரு நாட்­டுக்­கான இறை­யாண்மை உரி­மையின் கீழ் இந்­நாட்டின் கடற்­படை, கரை­யோர காவல் படை, சுங்கப் பிரிவு உள்­ள­டங்­க­லான பாது­காப்பு பிரி­வுகள் எதுவும் இலங்கைத் துறை­மு­கங்­களை வந்­த­டையும் அமெ­ரிக்க இரா­ணுவ கப்­பல்கள் மற்றும் இலங்கை விமான நிலை­யத்தில் தரை­யி­றங்கும்  விமா­னங்கள்  அல்­லது  தரை­யி­லுள்ள  அமெ­ரிக்க வாக­னங்கள் மற்றும் உலங்­கு­வா­னூர்­திகள் என்­பனவற்­றுக்குள் பிர­வே­சிக்க முடி­யாது. அத்­துடன் அமெ­ரிக்கா  இலங்­கைக்குள்  அனு­மதிப் பத்­திரம், சுங்க வரி­கள், வரிகள் மற்றும் ஏனைய கட்டணங்களி­லி­ருந்தும்  விதி­வி­லக்கை நாடு­கிறது.

அது­மட்­டு­மல்­லாது அமெ­ரிக்கா தனது படை­யினர் இலங்­கையின் எந்­த­வொரு பகு­தி­யிலும் கட­மையிலிருக்கும்போது  சீருடை­களை அணி­வ­தற்கும்  ஆயு­தங்கள்  மற்றும் வானொலித் தொடர்­பாடல் உப­க­ர­ணங்­களை ஏந்திச் செல்­வ­தற்கும் அங்கீகா­ர­ம­ளிக்­கப்­பட வேண்டும் என விரும்­பு­கி­றது.

இலங்கை அர­சி­ய­ல­மைப்பு மற்றும்  சாதா­ரண சட்­டங்கள் ஆகிய இரண்­டி­னதும் விதி­மு­றை­களின் பிர­காரம் ஆயுதப் படையி­ன­ருக்கும் பொலி­ஸா­ருக்கும் மட்­டுமே இவற்றை மேற்­கொள்ள அதி­கா­ர­முள்­ளது.    அனு­ம­திப்­பத்­தி­ரத்தின் மூலம் அதி­கா­ரத்தைப்பெற்­றுள்ள இலங்­கை­யர்கள் மட்­டுமே  இதற்கு விதி­வி­லக்­காக உள்­ளனர்.

இதற்கு மேல­தி­க­மாக அமெ­ரிக்கப் படை­யி­னரும் ஒப்­பந்­தக்­கா­ரர்­களும்  தமது அமெ­ரிக்க அடை­யா­ளப்­ப­டுத்­தலை மட்­டுமே பயன்­ப­டுத்தி  தனி­யா­கவோ அன்றி  கூட்­ட­மா­கவோ இலங்­கைக்குள் பிர­வே­சிப்­ப­தற்கும் வெளியே­று­வ­தற்கும் அனுமதிக்கப்­பட வேண்டும் என்­பது அமெ­ரிக்­காவின் கோரிக்­கை­யா­க­வுள்­ளது.  இதன் பொருள் அவர்கள் இலங்கை வருவதற்கு  கட­வுச்­சீட்­டு­க­ளையோ அன்றி விசாக்­க­ளையோ எடுத்­து­வர மாட்­டார்கள் என்­ப­தாகும்.

படை­களின் நிலைப்­பாடு தொடர்­பான உடன்­ப­டிக்­கைக்கு  முன்னாள் வெளிநாட்டு அமைச்சின் செய­லாளர் பிரசாத் காரி­ய­வா­சத்­துடன் இணைந்து ஊக்­கு­வித்து வரும்  நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீர கடந்த புதன்­கி­ழமை ஊட­க­வி­ய­லாளர் மாநா­டொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியி­டு­கையில்,  அந்த உடன்­ப­டிக்கை தீங்கு விளை­விக்­காது எனவும் அது ஆபத்­தா­ன­தல்ல எனவும் தெரி­வித்­தி­ருந்தார். அந்த உடன்­ப­டிக்­கையை இலங்கை ஏற்­றுக்­கொள்­ளா­விட்டால் அமெ­ரிக்­கா­வுக்­கான அதன் ஏற்­று­ம­தி­களை மட்­டு­மல்­லாது புதிய வேலை வாய்ப்­புக்­க­ளையும் இழக்க நேரிடும் என அவர் எச்­ச­ரித்­தி­ருந்தார்.

 அவர்கள் இரு­வரும் 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி கைச்­சாத்­தி­டப்­பட்ட கைய­கப்­ப­டுத்தல் மற்றும்  குறுக்கு சேவைகள் உடன்­ப­டிக்­கைக்கும் ஆத­ர­வ­ளித்­தி­ருந்­தனர். 

அமைச்சர் சம­ர­வீர மற்றும் செய­லாளர் கா­ரி­ய­வ­சத்தால் கொடுக்­கப்­பட்ட கடும் அழுத்தம் கார­ண­மா­கவே அந்த உடன்­ப­டிக்கை வரைபு அமைச்­ச­ரவை அங்­கீ­காரத் ­திற்கு அவ­சர அவ­ச­ர­மாக கொண்டு செல்­ லப்­பட்­ட­தாக முன்னாள் பாது­காப்பு செய லாளரான பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரிவித்திருந்தார்.

அந்த உடன்படிக்கை அனைத்து ஆயுதப் படையினருக்கும் அவர்களது விமர்சனத்துக் காக வழங்கப்பட்டது. இலங்கையில் கால டியெடுத்து வைக்கும் அமெரிக்கப் படையி னர் தொடர்பான கிட்டத்தட்ட அனைத்து அலகுகளையும்  உள்ளடக்கிய இணைப்பு களின் சிங்களப் பதிப்பு அமைச்சர்களின் முன்பாக  வைக்கப்படவில்லை. ஆங்கிலப் பதிப்பு மட்டுமே முன்வைக்கப்பட்டது.

https://www.virakesari.lk/article/59450

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page