இத்தாலியில் இருந்து வரும் இலங்கையர்கள் ஏன் ஒரு பிரச்சினையாக இருக்கிறார்கள்?

(நீயுஸ்‌ இன்‌ ஏசியா)

இலங்கையில்‌ கொவிட்‌ 19 கொரோனா வைரஸ்‌ பரவலின்‌ பிரதானமான தோற்‌றுவாயாக இத்தாலியே அடையாளம்‌ காணப்பட்டிருக்கிறது. கொழும்பு, கம்‌பஹா மற்றும்‌ களுத்துறை மாவட்டங்‌களில்‌ காலவரையறையற்ற ஊரடங்கை இலங்கை அரசாங்கம்‌ அமுல்படுத்துவதில்‌ ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. இந்த மாவட்டங்களிலேயே இத்தாலியிலிருந்து திரும்பி வந்தவர்களில்‌ பெரும்‌பாலானோர்‌ வசிக்கிறார்கள்‌.

கொவிட்‌ 19 தொற்றுநோயினால்‌ பெரிதும்‌ பாதிக்கப்பட்ட மூன்று நாடுகளில்‌ ஓன்று இத்தாலி. மார்ச்‌ 24 கொரோனா வைரஸ்‌ தொற்றினால்‌ 602 பேர்‌ இத்தாவலியில்‌ மரணமடைந்ததாக அறிவிக்கப்‌பட்டது. இது அந்த நாட்டில்‌ மரணமடைந்தவர்களின்‌ எண்ணிக்கையை 6077 ஆக உயர்த்தியது. 63,928 பேருக்குத்‌ தொற்று ஏற்பட்டிருக்கிறது.

இலங்கையிலிருந்து சட்டபூர்வமாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ 1980 களுக்குப்‌ பிறகு சென்ற பெருமளவான குடியேற்றவாசிகள்‌ இத்தாலியில்‌ இருக்கிறார்கள்‌. அண்மைய வாரங்களில்‌ நாடு திரும்பியவர்களில்‌ பலர்‌ சட்டவிரோதமாக இத்தாலிக்குச்‌ சென்றவர்‌களாக இருக்கலாம்‌. அவர்களைப்‌ பற்‌றிய போதிய பதிவுகள்‌ அரசாங்கத்திடம்‌ இல்லை. அவர்களை அடையாளங்‌கண்டு, தேடிக்கண்டுபிடித்து, வைரஸ்‌ தொற்றுக்கான அறிகுறிகள்‌ அவர்களிடம்‌ இருக்கிறதா என்று பரிசோதனை செய்‌வதும்‌, அவர்களுக்குச்‌ சிகிச்சை அளிப்‌பது அல்லது தொற்றுத்தடுப்புக்‌ காவலில்‌ வைப்பதென்பது அதிகாரிகளுக்குப்‌ பெரியதொரு சவாலைத்‌ தோற்றுவித்தருக்கிறது.

இத்தாலியிலிருந்து அண்மையில்‌ வந்திறங்கியவுடன்‌ தொற்றுத்தடுப்புக்‌ காவலில்‌ இருக்கத்தவறிய, குறைந்தபட்சம்‌ 12பேரைக்‌ கண்டறிவதற்குக்‌ கடந்த புதன்‌கிழமை பொலிஸார்‌ பொதுமக்களின் உதவியைக்‌ கோரினர்‌. இத்தாலியிலிருந்து வந்தவர்கள்‌ அரச அதிகாரிகளிடம்‌ அகப்படாமல்‌ தப்பிச்சென்றதற்குக்‌ காரணங்கள்‌ இருப்பதாகச்‌ சந்தேகிக்கப்படுகிறது. அதாவது இவர்கள்‌ இத்தாலியிலிருந்து திரும்‌பிய சட்டவிரோத குடியேற்றவாசிகளாக இருக்கலாம்‌.

இலங்கையர்கள்‌ இத்தாலிக்குச்‌ சட்‌டவிரோதமாகக்‌ குடிபெயர்வது நீண்ட கால நிகழ்வாகும்‌. அது கவலைக்குரிய ஒன்றாகவும்‌ இருக்கிறது. இத்தாலிக்குச்‌ சென்றிருக்கக்கூடிய இலங்கையர்களில்‌ 46 சதவீதமானவர்கள்‌ சட்டவிரோதமாகச்‌ சென்றதாகக்‌ கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக இத்தாலிக்கான சட்டவிரோத மற்றும்‌ சட்டபூர்வ குடிப்பெயர்வு தொடர்பில்‌ ஆய்வுசெய்த கொழும்பு பல்கலைக்கழகத்தின்‌ குடிப்பரம்பல்‌ தணைக்களத்தகைச்‌ சேர்ந்த ஈ.பி.என்‌.சேனாதி கூறுகிறார்‌.இதற்குக்‌ காரணம்‌ இவ்வாறு சட்டவிரோதமாகச்‌ செல்பவர்கள்‌ இலங்கையின்‌ மேற்குக் கரையோரப்பகுதிகளைச்‌ சேர்ந்‌தோராக இருப்பதாகும்‌. இப்பகுதிகளில்‌ இந்து சமுத்திரம்‌, செங்கடல்‌, சுயஸ்‌கால்வாய்‌ மற்றும்‌ மத்திய தரைக்கடல்‌ ஆகியவற்றைக்‌ கடந்து இத்தாலியைச்‌ சென்றடைவதற்குப்‌ பயன்படுத்தக்கூடிய பல படகுகள்‌ இப்பகுதியில்‌ வசிப்போரிடம்‌ உள்ளது. இது இத்தாலிக்குச்‌ செல்‌வோருக்கான செலவு குறைந்த வழிமுறையாகும்‌.

1990 களில்‌ இத்தாலி மிகவும்‌ தாராளப்போக்குடைய குடிவரவுக்கொள்கையைக்‌ கடைப்பிடித்தது. இது சட்டபூர்வமாகவும்‌, சட்டவிரோதமாகவும்‌ சென்ற குடியேற்றவாசிகளுக்குப்‌ பெரும்‌ உதவியாக அமைந்தது. அன்றைய இத்தாலியப்‌ பிரதமர்‌ லம்பேர்ட்டோ டினி 196 இல்‌ பிறப்பித்த உத்தரவொன்று இலங்கைத்‌ தொழிலாளர்கள்‌ தங்களது குடும்பங்‌களை இத்தாலிக்குக்‌ கொண்டுவருவதற்கு வசதியாக அமைந்தது. ரோம்‌, நேபிள்ஸ்‌ மற்றும்‌ மிலான்‌ பகுதிகளில்‌ இலங்கையர்கள்‌ பெரும்‌ எண்ணிக்கையில்‌ குடும்‌பங்களாக வாழ்ந்தார்கள்‌. அவர்கள்‌ தங்‌களது உறவினர்கள்‌ மற்றும்‌ இலங்கையர்கள்‌ மத்தியில்‌ தொழில்‌ வாய்ப்புக்களைப்‌ பக௫ர்ந்துகொண்டார்கள்‌ என்று சேனாதுி கூறுகின்றார்‌.

ஆனால்‌ சட்டவிரோத குடியேற்றம்‌ தொடர்ந்து அதிகரிக்கவே இத்தாலிய அரசாங்கம்‌ சட்டவிரோத குடியேற்றவாசுகளைக்‌ கட்டுப்படுத்தும்‌ பொறுப்பை அரச சார்பற்ற தன்னார்வ நிறுவனங்களுக்கும்‌, தொழில்‌ வாய்ப்புகளுக்கு ஏற்‌பாடு செய்யும்‌ அமைப்புகளுக்கும்‌, கத்‌தோலிக்க திருச்சபைக்கும்‌ வழங்கியது. கத்தோலிக்க திருச்சபை உணவு, மருந்து வகைகள்‌, உடை மற்றும்‌ அன்றாடத்‌தேவைகளை விநியோகித்துக்‌ குடியேற்‌றவாசிகளை நன்றாகப்‌ பராமரித்தது. இத்‌தாலியில்‌ தொழில்வாய்ப்புக்களை சுலபமாகப்‌ பெறுவதற்கு வசதியாகத்‌ திருச்‌சபை இத்தாலிய மொழியையும்‌ கற்பித்‌
தது. நாளடைவில்‌ இத்தாலி சட்டவிரோத குடியேற்றங்களைக்‌ கட்டுப்படுத்திய போதிலும்‌ கூட அதனை முற்றாக நிறுத்தமுடியவில்லை.

சார்ள்ஸ்‌ டார்வின்‌ பல்கலைக்கழகத்‌தைச்‌ சேர்ந்த ஜகத்‌ பத்திரகே தெரிவித்‌ தகவலின்‌ பிரகாரம்‌ இத்தாலியில்‌ 2011 ஆம்‌ ஆண்டில்‌ 88,000 இலங்கையர்கள்‌ சட்டவிரோதமாக வசித்து வந்தார்கள்‌. அவர்கள்‌ மிகவும்‌ நல்ல வேதனங்களைப்‌ பெறுவதற்காக இலங்கையிலிருந்து சென்றார்கள்‌.

“சுத்திகரிப்புத்‌ தொழிலாளர்கள்‌ கூட மாதம்‌ 1000 யூரோவை மேலதிகமாகச்‌ சம்பாதித்தார்கள்‌. இதனால்‌ அவர்களால்‌ ஓவ்வொரு மாதமும்‌ குறைந்தபட்சம்‌ 300 யூரோவை சேமிக்கக்கூடியதாக இருந்‌தது. இத்தாலியில்‌ பலவருட தொழில்‌ அனுபவங்களைக்‌ கொண்ட சிலர்‌ வருட மொன்றுக்கு 5000 யூரோவுக்கு மேற்பட்ட பணத்தைச்‌ சேமிக்கக்கூடியதாக இருந்‌தது” என்று பத்திரகே கூறுகின்றார்‌.

“இதன்‌ விளைவாக 2012 ஆம்‌ ஆண்டில்‌ இலங்கையர்கள்‌ இத்தாலியில்‌ வாழ்‌கின்ற மிகப்பெரிய குடியேற்றவாசிகள்‌ சமூகத்தில்‌ பெரும்பான்மையினராக மாறினார்கள்‌. சுமார்‌ 80,000 இலங்கையார்கள்‌ அங்கு வாழ்ந்தார்கள்‌. மிலானில்‌ மாத்திரம்‌ சுமார்‌ 16,000 இலங்கையர்கள்‌ வாழ்ந்தனர்‌. நன்றாக சம்பாதித்த இவர்கள்‌ இலங்கையிலுள்ள தமது உறவினர்களையும்‌ இத்தாலிக்கு அழைப்பதற்கான நிதியுதவிகளைச்‌ செய்தார்கள்‌. சில குடியேற்றவாசிகள்‌ இலங்கைக்குத்‌ திரும்பி மீன்பிடித்துறையிலும்‌, உல்லாசப் பிரயாணத்துறையிலும்‌ முதலீடு செய்தார்கள்‌” என்றும்‌ அவர்‌ குறிப்பிட்டார்‌.

நீர்கொழும்பு, சிலாபம்‌ மற்றும்‌ வென்‌னப்புவ பகுதிகளைச்‌ சேர்ந்த மீனவர்கள்‌ வானிலை மாற்றங்கள்‌ காரணமாகப்‌ பல நூற்றாண்டுகளாக வேறு இடங்களுக்குக்‌ குடிபெயர்வதைப்‌ பழக்கமாகக்‌ கொண்டிருக்கிறார்கள்‌. அவர்கள்‌ முல்லைத்‌கவு மாவட்டத்தில்‌ கொக்கிளாய்க்கும்‌, மன்னார்‌ பகுதிக்கும்‌ செல்வார்கள்‌ என்று சில வருடங்களுக்கு முன்னர்‌ போர்னடோ பிரவுண்‌ என்பவர்‌ கிரவுண்ட்‌ வியுஸில்‌ எழுதிய கட்டுரையொன்றில்‌ தெரிவித்திருந்தார்‌.

“ஆனால்‌ 1983 இல்‌ உள்நாட்டுப்போர்‌ ஆரம்பித்ததும்‌ மன்னாரிலும்‌, முல்லைத்‌ தீவிலும்‌ உள்ள தமிழ்ப்‌ பிரிவினைவாதிகள்‌ இந்த மீனவர்களின்‌ பிரசன்னத்தை விரும்பவில்லை. 1984 இல்‌ சிங்களகத்தோலிக்க மீனவர்கள்‌ கொக்கிளாயில்‌ படுகொலை செய்யப்பட்டார்கள்‌. 1980களின்‌ பிற்பகுதியில்‌ வன்முறை தீவிரமடைநீத நிலையில்‌ முல்லைத்தீவிற்கோ அல்லது மன்னாருக்கோ இந்த மீனவர்‌களால்‌ செல்ல முடியவில்லை” என்றும்‌ பிரவுண்‌ சுட்டிக்காட்டுகிறார்‌.

பொருளாதார ரீதியில்‌ பாதிக்கப்பட்ட இந்த மீனவர்கள்‌ தங்களது ஜீவனோபாயத்திற்காக வேறு மார்க்கங்களை நாடத்‌தொடங்கினார்கள்‌. 1980 களில்‌ முதல்தொகுதி இலங்கை மீனவர்கள்‌ இத்தாலிக்குப்‌ பயணஞ்செய்தார்கள்‌. அவர்களால்‌ இத்தாலியில்‌ பெரும்‌ இலாபகரமான வேலை வாய்ப்புக்களைப்‌ பெறக்கூடியதாக இருந்‌தது. மற்றையவர்களும்‌ அவர்களைத்‌ தொடர்ந்து இத்தாலி சென்றார்கள்‌.

அந்தக்‌ காலகட்டத்தில்‌ மீன்பிடி அமைச்‌சராக இருந்த எல்‌.எல்‌.பெரேரா எடுத்தநடவடிக்கைகளின்‌ பயனாக மீனவர்கள்‌ தங்களது தொழிலுக்காக இயந்திரப்‌ படகுகளைப்‌ பெற்றுக்கொள்ளுமாறு அரசாங்கத்தினால்‌ ஊக்குவிக்கப்பட்டார்கள்‌. இந்த இயந்திரப்‌ படகுகள்‌ நாளடைவில்‌
குறிப்பாக 1994 தொடக்கத்தில்‌ ஆட்கடத்‌தலுக்குப்‌ பயன்படுத்தப்பட்டன.

1994 இல்‌ இத்தாலிக்கு சட்டவிரோத மாகப்‌ பயணஞ்செய்வதற்கு ஒருவரிடமிருந்து 2000 அமெரிக்க டொலர்களுக்குக்‌ குறைவான பணம்‌ அறவிடப்பட்டது. அடுத்தமுறை இத்தொகை பெருமளவு அதிகரித்து ஒருகட்டத்தில்‌ 4000 டொலர்‌ களைத்‌ தொட்டது. அந்தப்‌ பெருந்‌தொகைப்‌ பணத்தைக்‌ கொடுக்க முடியாத இளைஞர்கள்‌ தமது குடும்பச்சொத்‌துக்களைப்‌ பிணையாக வழங்கி இத்தாலிக்குச்‌ சென்றார்கள்‌.

ஆரம்பத்தில்‌ மீனவர்கள்‌ மாத்திரமே மேற்குக்‌ கரையோரங்களில்‌ இருந்து இத்தாலிக்குச்‌ சென்றனர்‌. நாளடைவில்‌ வேறு பிராந்தியங்களைச்‌ சேர்ந்த ஏனைய சமூகத்தினரும்‌ இதில்‌ இணைந்துகொண்டனர்‌. ஆட்கடத்தல்‌ என்பது ஒரு சர்‌வதேச வர்த்தகமாக மாறியது. பங்களாதேஷ்‌, இந்தியா மற்றும்‌ பாகிஸ்தான்‌ நாடுகளைச்‌ சேர்ந்தவர்கள்‌ பிரதான விமானநிலையத்தின்‌ ஊடாக இலங்கைக்குள்‌ பிரவேசித்து, நீர்கொழும்பிற்குச்‌ சென்று அங்கிருந்து படகுகளில்‌ இத்தாலிக்கும்‌,மேற்குலகின்‌ ஏனைய நாடுகளுக்கும்‌ சென்றார்கள்‌.

ஆனால்‌ 2002 ஆம்‌ ஆண்டில்‌ ஏற்‌பட்ட ஒரு மாற்றம்‌ சட்டவிரோத குடிபெயர்வைக்‌ கட்டுப்படுத்துவதற்கு அல்‌லது குறைந்தபட்சமாக்குவதற்கு உதவியது. இத்தாலியப்‌ பாராளுமன்றம்‌ நிறைவேற்றிய சட்டமொன்று கடுமையான எல்லைக்‌ கட்டுப்பாடுகளை விதித்திருந்‌தாலும்‌ கூட, ஏற்கனவே இத்தாலியில்‌ இருக்கின்ற வெளிநாட்டுக்‌ குடியேற்றவாசிகளை ஓழுங்கமைப்பதற்கான ஒருபாதையைக்‌ திறந்துவிட்டது.

ஐரோப்பாவிற்கும்‌, ஆசியாவிற்கும்‌ இடையில்‌ குடிபெயர்வுகளை முகாமை செய்வதற்கான ஒத்துழைப்புத்‌ தொடர்‌பான அமைச்சர்மட்ட மாநாடொன்றை தொடர்ந்து இரண்டாவது மாற்றம்‌ வந்‌தது. அந்த மாநாட்டையடுத்து இத்தாலி அரசாங்கம்‌ சட்டவிரோத குடிப்பெயர்‌வைக்‌ கட்டுப்படுத்த உதவுவதற்காக நாடுகஞடன்‌ இருதரப்பு உடன்படிக்கைகளைச்‌ செய்துகொண்டது. இந்த உடன்‌படிக்கைகளைச்‌ செய்துகொண்ட நாடுகஞுக்கு இத்தாலி விசேட கோட்டாக்க்ளை வழங்கியது என்று பிரவுண்‌ கூறியிருக்‌கிறார்‌.

இந்த நடவடிக்கைகளின்‌ விளைவாக இத்தாலிக்கான சட்டவிரோதக்‌ குடியேற்‌றங்கள்‌ கடுமையாகக்‌ கட்டுப்படுத்தப்பட்‌டன. ஆனால்‌ முற்றுமுழுதாக ஒழிக்கப்‌படவில்லை.

Check Also

அனைத்து பள்ளிவாசல்களின் சொத்து விபரங்களை கோருகிறது அரசாங்கம்

திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத நிறுவனங்களின் அசையும் அசையா சொத்துகளின் விபரங்களும் திரட்டப்படும் என்கிறார் பணிப்பாளர் பைஸல் நாட்டிலுள்ள …

You cannot copy content of this page