முஸ்லிம் தலைமைகளின் இரா­ஜி­னாமா நாடகம்: அர­சியல் இரா­ஜ­தந்­தி­ர­த்தின் உச்சம்

முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அமீ­ரலி, அப்­துல்லாஹ் மஹ்றூப் ஆகியோர் ஜுலை 29ஆம் திகதி மீண்டும் அமைச்­சர்­க­ளாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­னி­லையில் பதவிப் பிர­மாணம் செய்து கொண்­டார்கள். ஆயினும், முஸ்லிம் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான முன்னாள் இரா­ஜாங்க அமைச்­சர்கள் பைசால் காசிம், ஹரிஸ், அலி­சாஹிர் மௌலானா ஆகியோர் அமைச்சர் பத­வி­களை ஏற்றுக்கொள்­ள­வில்லை. இவர்க­ளையும் அமைச்சர் பத­வி­களை ஏற்றுக் கொள்­ளு­மாறு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கேட்டுக் கொண்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

பைசால் காசிம், ஹரிஸ், அலி­சாஹிர் மௌலானா ஆகி­யோர்கள் தங்­களின் கோரிக்­கை­களை நிறை­வேற்­றினால் மாத்­தி­ரமே அமைச்சர் பத­வி­களை பெற்றுக்கொள்வோம் என்று தெரி­வித்­தி­ருந்­தார்கள். இவர்­களின் இக்­கூற்றின் மூல­மாக முஸ்லிம் அமைச்­சர்கள் முன் வைத்த கோரிக்­கைளை அர­சாங்கம் நிறை­வேற்­ற­வில்லை என்று தெளி­வா­கின்­றது. அதேவேளை, கல்­முனை வடக்கு உப­பி­ர­தேச செய­ல­கத்தின் பிரச்­சி­னையை முறை­யாக தீர்க்கும் போதுதான் அமைச்சர் பத­வி­களை ஏற்றுக்கொள்ள வேண்­டு­மென்று முஸ்லிம் காங்­கி­ரஸின் உயர்­பீ­டத்தில் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது.

ஆனால், கல்­முனை வடக்கு உப­பி­ர­தேச செய­ல­கத்தின் பிரச்­சினை தீர்க்­கப்­ப­டாத நிலையில் அக்­கட்­சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் கட்­சியின் தீர்­மா­னத்­திற்கு மாற்­ற­மாக அமைச்சர் பத­வியை பெற்றுக் கொண்­ட­மையை  கட்­சியின் ஆத­ர­வா­ளர்கள் விமர்­சிக்­கின்­றார்கள். அதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலைவர் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் கல்­முனை பிரச்­சி­னைக்கு தீர்வு பெற்றுக் கொள்­ளாத நிலையில் அமைச்சர் பத­வியைப் பெற்­றி­ருக்கக் கூடா­தென்றும் விமர்­ச­னங்கள் எழுந்­துள்­ளன.

இதேவேளை, தலைவர் ரவூப் ஹக்­கீமை அமைச்சர் பத­வி­களை பெற்றுக் கொள்­ளு­மாறு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளா­கிய நாங்­களே சொன்னோம் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பைசால் காசிம் தெரி­வித்­துள்ளார். அமைச்­ச­ர­வையில் கல்­முனை பிரச்­சி­னையை தீர்­வுக்கு கொண்டு வரு­வ­தற்­கு­ரிய பத்­தி­ரத்தை அமைச்­ச­ர­வையில் முன் வைப்­ப­தற்கே ரவூப் ஹக்கீம் அமைச்சர் பத­வியை பெற்றுக் கொண்­ட­தா­கவும் பைசால் காசிம் தெரி­வித்­துள்ளார். கட்­சியின் உயர்­பீ­டத்தில் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்தை மீறு­வ­தற்கு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனு­மதி வழங்க முடி­யு­மாக இருந்தால் எதற்­காக உயர்­பீ­டத்தில் தீர்­மானம் எடுக்க வேண்டும் என்று ஒரு சில உயர்­பீட உறுப்­பி­னர்கள் தெரி­விக்­கின்­றார்கள்.

ஆகவே, அமைச்சர் பத­வியை பெற்றுக் கொண்­ட­மையை நியா­யப்­ப­டுத்­து­வதற்­கா­கவே அறிக்­கை­களை முன் வைத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். ஆனால், அதில் உண்­மை­யில்லை. அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் உயர்­பீடக் கூட்­டத்தில் கட்­சியின் தலைவர் ரிஷாத் பதியுதீன் மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டுக்கள் பொய் என்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. அமைச்சர் பத­வி­களை இரா­ஜி­னாமாச் செய்த போது முன் வைத்த கோரிக்­கை­களில் பல­வற்றை அர­சாங்கம் நிறை­வேற்­றி­யுள்­ளது. அதனால் அமைச்சர் பத­வி­களைப் பெற்றுக் கொள்ள வேண்­டு­மென்று முடிவு செய்­யப்­பட்­டது. இந்த முடிவு முஸ்லிம் காங்­கி­ர­ஸிற்குள் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யது. இதனால் முஸ்லிம் காங்­கி­ரஸின் உயர்­ பீ­டத்தில் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்தை மீற வேண்­டிய கட்­டாயம் ஏற்­பட்­டது.

அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸை போன்று அமைச்சர் பத­வி­களை இரா­ஜி­னாமாச் செய்த முஸ்லிம் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அமைச்சர் பத­வி­களை பெற்றுக் கொள்ள வேண்­டு­மென்றும், அதன் பின்னர் கல்­முனை பிரச்­சி­னைக்கு தீர்வு வேண்டி அர­சாங்­கத்­திற்கு அழுத்­தங்­களை கொடுக்க வேண்­டு­மென்றும் முஸ்லிம் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளினால் முடிவு செய்­யப்­பட்­டது. இதன் போது ஹரிஸ் கல்­முனை வடக்கு உப­பி­ர­தேச செய­லகப் பிரச்­சி­னைக்கு தீர்வு தரும் வரை தான் அமைச்சர் பத­வியை ஏற்றுக் கொள்­ள­மாட்டேன் என்று தெரி­வித்தார். ஹரிஸின் இந்த அறி­விப்­புத் தான் பைசால் காசிம், அலி­சாஹிர் மௌலானா ஆகியோர் அமைச்சர் பத­வி­களை ஏற்றுக் கொள்­ளா­மைக்­கான கார­ண­மாகும். ஹரிஸ் அமைச்சர் பத­வியை பெற்றுக் கொள்­ளாத நிலையில் ஏனை­ய­வர்கள் அமைச்சர் பத­வி­களைப் பெற்றுக் கொள்ளும் போது ரவூப் ஹக்கீம் மற்றும் ஏனை­ய­வர்­களின் செல்­வாக்கில் வீழ்ச்­சியை ஏற்­ப­டுத்தும் அதேவேளை, ஹரிஸின் செல்­வாக்கில் அதி­க­ரிப்பு ஏற்­படும். இந்­நிலை பாரா­ளு­மன்ற தேர்­தலில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும். இத­னால்தான்ரவூப் ஹக்கீம் அமைச்சர் பத­வியை பெற்றுக் கொண்ட போது பைசால் காசிம், அலி­சாஹிர் மௌலானா ஆகி­யோர்கள் அமைச்சர் பத­வியை ஏற்றுக் கொள்­ளா­மைக்­கு­ரிய கார­ண­மாகும். இதில் அலி­சாஹிர் மௌலானா மாட்­டி­வி­டப்­பட்­டுள்ளார். 

கல்­முனை பிரச்­சினை அம்­பாறை மாவட்­டத்தில் உள்ள முஸ்லிம் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும், ரவூப் ஹக்­கீ­முக்­குமே அதிக தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும். ஆனால், மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் அலி­சாஹிர் மௌலா­னாவின் அர­சி­யலில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தாது என்­ப­தனை மீறியும் அமைச்சர் பத­வியை பெற்றுக் கொள்­ளா­மைக்கு காரணம், அமைச்சர் பத­வி­களை பெற்றுக் கொள்­ளா­தி­ருக்­கின்ற அம்­பாறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை ஆசு­வா­சப்­ப­டுத்­து­வ­தற்­கே­யாகும்.

மேலும், அமைச்சர் பத­வி­களை பெற்றுக் கொள்­ளா­தி­ருக்கும் நாடகம் கூட ஒரு வாரத்­திற்­குதான் என்­பது பல­ருக்கு தெரி­யாத விட­ய­மல்ல. கல்­முனை பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்கு பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க ஏற்றுக் கொண்­டுள்ளார். தமிழர் தரப்­பி­னரும் விட்டுக் கொடுப்­புடன் செயற்­பட முன்வந்­துள்­ளார்கள். எல்­லை­களை வரை­யறை செய்யும் பணி ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது என்று தெரி­வித்து அமைச்சர் பத­வி­களைப் பெற்றுக் கொள்­வார்கள். ஆயினும், ஹரிஸ் அமைச்சர் பத­வியை பெற்றுக் கொள்­ள­மாட்டார். கல்­முனை பிரச்­சினை முடியும் வரை அமைச்சர் பத­வியை ஏற்­க­மாட்டேன் என்ற அறி­விப்­புத் தான் அவரின் அர­சி­ய­லுக்கு அச்­சா­ணி­யாக இருக்­கின்­றது.

இதேவேளை, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹரிஸ் தொடர்பில் முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்­பட உயர்­பீட உறுப்­பி­னர்கள் பல­ருக்கு சந்­தே­கங்கள் உள்­ளன. அவர் கட்­சியின் தலை­மைக்கு எதி­ரா­னவர், கிழக்கில்கட்­சியின் தலைவர் இருக்க வேண்­டு­மென்ற கொள்­கையை கொண்­டவர். ரிஷாத் பதியுதீனுடன் நெருக்­க­மான உறவைக் கொண்­டவர், தலைவர் பத­வியை இலக்கு வைத்து செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்றார் என்று பல சந்­தே­கங்கள் உள்­ளன. இதனால், கல்­முனை விவ­கா­ரத்தில் ஹரிஸ் தனித்து அர­சியல் இலாபம் அடைய  முடி­யா­தென்­பதில் ரவூப் ஹக்கீம் உறு­தி­யாக இருக்­கின்றார்.

இதேவேளை, எதிர்­வரும் 10ஆம் திக­திக்கு முன்­ன­தாக கல்­முனை பிரச்­சி­னைக்கு தீர்வு காண வேண்டும். இதற்கு தமிழ், முஸ்லிம் தரப்­பினர் ஒரு இணக்­கப் ­பாட்­டிற்கு வர வேண்­டு­மென்று ரவூப் ஹக்கீம் தெரி­வித்­துள்ளார். 

இன்­றைய சந்­தர்ப்­பத்தை பயன் ­ப­டுத்திக் கொள்ள வேண்டும். சாய்ந்­த­ம­ரு­துக்கு தனி­யான உள்­ளூ­ராட்சி சபை வழங்­கு­வ­தற்கு கல்­முனை எல்லைப் பிரச்­சி­னையே கார­ண­மாகும். ஆதலால், இரு தரப்­பி­னரும் சேதா­ர­மில்­லாத விட்டுக் கொடுப்பை செய்து இரண்­டொரு நாட்­களில் பிரச்­சி­னைக்கு தீர்வு காண வேண்­டு­மென்றும் அவர் தெரி­வித்­துள்ளார். சேதா­ர­மில்­லாத விட்டுக் கொடுப்பு என்­பது தொடர்பில் சர்ச்சை ஏற்­பட்­டுள்­ளது. கல்­முனை பிரச்­சினை நீடித்துக் கொண்டு செல்­வ­தற்கு காரணம் இரு தரப்­பி­னரும் விட்டுக் கொடுப்­புடன் செயற்­ப­டு­வ­தற்கு தயா­ரில்­லாது இருப்­ப­துதான். இதேவேளை, தமிழர் தரப்­பினர் விட்டுக் கொடுப்­புடன் செயற்­பட முன்வர வேண்­டு­மென்று ஹரிஸ் தெரி­வித்­துள்ளார்.

கல்­முனை வடக்கு உப பிர­தேச செய­லகப் பிரச்­சி­னையை நீதியின் அடிப்­ப­டையில் தீர்த்துக் கொள்­வதா அல்­லது விட்டுக் கொடுப்பின் அடிப்­ப­டையில் தீர்த்துக் கொள்­வதா என்­பதே முக்­கிய பிரச்­சி­னை­யாகும். விட்டுக் கொடுப்­புடன் என்று சொல்லும் போது ஒரு தரப்­புக்கு அநி­யாயம் நடை­பெ­று­வ­தற்கு வாய்ப்­புள்­ளது. ஆயினும், இப்­பி­ரச்­சி­னையை இன்னும் நீடித்துக் கொண்டு செல்ல முடி­யாது.

 இதேவேளை, கல்­முனை பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்கு பதி­லாக எவ்­வாறு கையாண்டால் அர­சியல் இலாபம் அடை­ய­லா­மென்றே தமிழ், முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் செயற்­பட்டு வந்­துள்­ளார்கள். இதனால், கல்­முனை பிரச்­சினை முழு­மை­யாக அர­சி­யலில் சிக்­கி­யுள்­ளது. அர­சி­யல்­வா­திகள் கல்­மு­னையை நாங்கள் விட்டுக் கொடுக்­க­மாட்டோம் என்று தெரி­வித்து மக்­களின் உணர்­வு­களில் குளிர் காய்ந்து வாக்­கு­களைப் பெற்றுக் கொண்டு வந்­துள்­ளார்கள். ஆனால், தற்­போது தீர்­வினை கொடுக்க வேண்­டிய நிலைக்கு தமிழ், முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் தள்­ளப்­பட்­டுள்­ளார்கள். இதேவேளை, கல்­முனை பிரச்­சினை முஸ்லிம் காங்­கி­ர­ஸி­னதும், ஹரி­ஸி­னதும் அர­சி­யலில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்தும் என்­பதில் ஐய­மில்லை.

இதேவேளை, அமைச்சர் பத­வி­களைப் பெற்றுக் கொண்­ட­த­னாலோ அல்­லது ஹரிஸ் அமைச்சர் பத­வியை பெற்றுக் கொள்­ளா­தி­ருப்­ப­த­னாலோ கல்­முனை பிரச்­சி­னைக்கு தீர்வு கிடைக்கும் என்று சொல்ல முடி­யாது. இன்­றைய ஐக்­கிய தேசியக் கட்­சியின் அர­சியல் எதிர்­காலம் சிறு­பான்­மை­யி­னரின் வாக்­கு­க­ளி­லேயே தங்­கி­யுள்­ளது. இதனால், தமி­ழர்­க­ளையும், முஸ்­லிம்­க­ளையும் பகைத்துக் கொள்­ளா­த­ தொரு நிலைப்­பாட்­டையே ஐக்­கிய தேசியக் கட்சி பின்­பற்றிக் கொண்­டி­ருக்கும். அதனால், கல்­முனை பிரச்­சி­னையை இன்னும் நீடித்துக் கொண்டு செல்­­வ­தற்கே அர­சாங்கம் நட­வ­டிக்­கை­களை எடுக்கும்.

இந்­நிலை நீடிக்­கு­மாயின் முஸ்லிம் காங்­கி­ரஸில் அமைச்சர் பத­வி­களைப் பெற்றுக் கொள்­ளா­தி­ருக்­கின்­ற­வர்­களில் ஹரிஸை தவிர பைசால் காசிம், அலி­சாஹிர் மௌலானா ஆகியோர் அமைச்சர் பத­வி­களை ஏற்றுக் கொள்­வார்கள் என்றே தெரி­ய­வ­ரு­கின்­றன. இப் ­பா­ரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் முக்­கிய ஆத­ர­வா­ளர்கள் அமைச்சர் பத­வி­களை பெற்றுக் கொள்­ளு­மாறு கேட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். 

முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் கொள்கை ரீதி­யான அர­சி­யலை மறந்து நீண்ட கால­மா­கி­விட்­டது. அபி­வி­ருத்தி அர­சி­ய­லையே செய்து கொண்டு வரு­கின்­றார்கள். முஸ்­லிம்­களின் உரி­மைகள் பறி­போ­னாலும் வீதி­களை அமைக்க வேண்டும். கமிஷன் வாங்க வேண்­டு­மென்றே முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இதனால், அமைச்சர் பதவி இல்­லாமல் கொள்கை ரீதி­யான அர­சி­யலை செய்­வ­தற்கு முடி­யாத நிலை­யி­லேயே முஸ்லிம் கட்­சிகள் உள்­ளன.

இதேவேளை, ரிஷாத் பதியுதீன் மீண்டும் அமைச்சர் பத­வியை பெற்றுக் கொண்­ட­மைக்கு இன­வாத பிக்­கு­களும், அர­சி­யல்­வா­தி­களும் எச்­ச­ரிக்கை விடுத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதி­ராக பாரா­ளு­மன்­றத்தில் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை மீண்டும் கொண்டு வரு­வ­தற்கு இருப்­ப­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எஸ்.பி.திஸா­நா­யக்க, அத்­து­ர­லியே ரத்ன தேரர், உத­யன்­கம்­பன்பில ஆகியோர் தெரி­வித்­துள்­ளார்கள். அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீதான குற்­றச்­சாட்­டுக்கள் மறைக்­கப்­பட்­டுள்­ள­தாக எஸ்.பி.திஸா­நா­யக்க தெரி­வித்­துள்ளார்.

ஆதலால், இனி­வரும் நாட்­களில் இன­வாத பிக்­கு­களும், இன­வாத அர­சி­யல்­வா­தி­களும் மீண்டும் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதி­ராக போர்க் கொடி தூக்­க­வுள்­ளார்கள் என்று தெரி­கின்­றது. அமைச்சர் ரிஷாத் பதியுதீனை குற்­ற­வா­ளி­யாகக் காட்டி சிங்­கள மக்­களின் வாக்­கு­களைப் பெற்றுக் கொள்­வ­தற்கு நினைக்­கின்­றார்கள். 

ஆனால், இவர்­களின் இன­வாத கருத்­துக்கள் முன்பு போல் தாக்­கத்தை கொண்டு வரும் என்று சொல்ல முடி­யாது. இன­வாத பிக்­கு­க­ளி­னதும், அர­சி­யல்­வா­தி­க­ளி­னதும் திரு­கு­தா­ளங்­களை பெரும்­பான்­மை­யான மக்கள் புரிந்து வைத்­துள்­ளார்கள். இதனால், இன­வா­தி­களின் கூட்­டங்­க­ளுக்கும், ஆர்ப்­பாட்­டங்­க­ளுக்கும் பொது மக்கள் சேரும் வீதம் குறை­வ­டைந்து கொண்டு வரு­கின்­றது. ஆயினும், ரிஷாத் பதியுதீனுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கொண்டு வந்தால் அது ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு மற்­று­மொரு சவா­லாக அமையும். 

நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை தோற்­க­டிக்­கப்­பட வேண்டும். அப்­போ­துதான் ஐக்­கிய தேசியக் கட்­சியின் அர­சி­ய­லுக்கு வெற்­றியை கொடுக்கும். அதே வேளை, ஆதா­ர­மற்ற குற்­றச்­சாட்­டுக்­களை முன்வைத்து நம்பிக்கையில்லாப் பிரேரணையை கூட்டு எதிரணியினர் கொண்டு வருவார்களாயின் அது பொது  முன்னணிக்கு  முஸ்லிம்களின் வாக்குகளில் இன்னும் வீழ்ச்சியைக் கொண்டு வருவதாகவே இருக்கும்.

இவ்­வாறு முஸ்­லிம்­களின் அர­சி­யலும், தலை­வர்­களும் இன­வாத பிர­சா­ரத்­திற்கும், இன­வாத பிக்­கு­களின் நெருக்­கு­தல்­க­ளுக்­குள்ளும்  சிக்கிக் கொண்­டுள்­ளனர். தேசியக் கட்­சி­களும், அர­சாங்­கமும் மேற்­படி இன­வா­தி­களை சமா­ளித்துக் கொண்டு செல்­வ­தற்கே திட்­ட­மிட்டு செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது. அர­சாங்கம் சட்டம், ஒழுங்கு, உண்மை, நியாயம் ஆகி­ய­வற்­றுக்கு முன்­னு­ரிமை அளிப்­ப­தற்கு பதி­லாக இன­வாத பிக்­கு­களின் நட­வ­டிக்­கை­க­ளுக்கு சட்டம், ஒழுங்கு, உண்மை, நியாயம் ஆகி­ய­வற்றை குழி­யிட்டு புதைத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

இதேவேளை, முஸ்லிம் அமைச்­சர்­க­ளி­னதும், ஆளு­நர்­க­ளி­னதும் இரா­ஜி­னா­மாக்கள் பெரி­ய­தொரு அர­சியல் இரா­ஜ­தந்­தி­ர­மாக அமைந்­தி­ருந்­தது. இதனால், இன­வாத பிக்­கு­க­ளி­னதும், அர­சி­யல்­வா­தி­க­ளி­னதும் திட்­டங்கள் தவி­டு­பொ­டி­யா­கி­யது. பத­வி­களை இரா­ஜி­னாமாச் செய்­த­வர்­களை முஸ்­லிம்கள் தியா­கிகள் போன்று பார்த்­தார்கள். தற்போது மூன்று பேரைத் தவிர 06 பேர் அமைச்சர் பதவிகளை மீண்டும் பெற்றுள்ளார்கள். இதனால், விமர்சனங்கள் எழுந்துள்ளன.

– சஹாப்தீன் –

https://www.virakesari.lk/article/61923

Check Also

அனைத்து பள்ளிவாசல்களின் சொத்து விபரங்களை கோருகிறது அரசாங்கம்

திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத நிறுவனங்களின் அசையும் அசையா சொத்துகளின் விபரங்களும் திரட்டப்படும் என்கிறார் பணிப்பாளர் பைஸல் நாட்டிலுள்ள …

You cannot copy content of this page