தடைச் சட்டம் நீக்கினாலும் முகத்திரை அணிவதில் அவதானமாக நடக்குக – பெண்களுக்கு உலமா சபை ஆலோசனை

நாட்டில் அவ­ச­ர­காலச் சட்டம் நீக்­கப்­பட்­டதன் பின்பு அவ­ச­ர­காலச் சட்­டத்தின் கீழ் அமுல்­ப­டுத்­தப்­பட்ட பெண்கள் அணியும் முகத்­தி­ரைக்­கான தடையும் நீங்­கி­யுள்­ளது என பொலிஸ் திணைக்­களம் தெளி­வு­ப­டுத்­தி­யி­ருந்­தாலும் முஸ்லிம் பெண்கள் தற்­போ­தைய சூழ்­நி­லையில் பொது இடங்­களில் முகத்­திரை அணி­வதால் ஏற்­படக் கூடிய அசா­தா­ரண நிலைமைகளை தவிர்த்துக் கொள்­ள­வேண்டும் என்றும் இது விடயத்தில் அவதானமாக நடந்து கொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா தெரி­வித்­துள்­ளது. 

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா ஏற்­க­னவே முஸ்லிம் பெண்­களின் முகத்­திரை தொடர்பில் வழங்­கி­யுள்ள அறி­வு­றுத்­தல்­களின் நிலைப்­பாட்­டிலே தொடர்ந்தும் இருப்­ப­தா­கவும் குறிப்­பிட்­டுள்­ளது. அவ­ச­ர­கால சட்­டத்தின் கீழ் முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்­தி­ரைக்கு தடை விதிக்­கப்­பட்­டி­ருந்­தது. அவ­ச­ர­கால சட்டம் நீக்­கப்­பட்­டதன் பின்பு முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாப், புர்கா மற்றும் முகத்­தி­ரைக்­கான தடை நீக்கம் தொடர்பில் பாது­காப்பு தரப்­பி­னரால் எவ்­வித தெளி­வு­களும் முன்னர் வழங்­கப்­ப­ட்டிருக்க­வில்லை.

இந்­நி­லையில் இது தொடர்பில் தெளி­வு­களை வழங்­கு­மாறு முஸ்லிம் சமய, விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் பொலிஸ் மாஅ­தி­ப­ருக்குக் கடிதம் ஒன்­றினை அனுப்பி வைத்­தி­ருந்தார்.

அமைச்சர் ஹலீமின் கடி­தத்­துக்கு பிரதிப் பொலிஸ்மா அதிபர்களுள் ஒருவரான அஜித் ரோஹன தெளிவு வழங்­கி­யுள்ளார்.

நிகாப், புர்கா மற்றும் முகத்­தி­ரைக்­கான தடை அவ­சர காலச் சட்­டத்தின் கீழேயே அமு­லுக்கு வந்­தது. தற்­போது அவ­ச­ர­காலச் சட்டம் அமுலில் இல்லை என்பதால் அத்­த­டையும் அமுலில் இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் தெரி­வித்­துள்ளார். அவ­ச­ர­காலச் சட்டம் நீக்­கப்­பட்­டதும் அச்­சட்­டத்தின் கீழ் அமு­லுக்கு வந்த முஸ்லிம் பெண்­களின் முகத்­தி­ரைக்­கான தடையும் நீங்­கி­யுள்­ளது என உலமா சபையின் சட்­டத்­த­ர­ணிகள் தெரி­வித்­தி­ருக்­கி­றார்கள் என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் இளைஞர் விவ­கார செய­லாளர் மௌலவி அர்கம் நூராமித் தெரி­வித்தார்.

முஸ்லிம் பெண்­களின் முகத்­திரை விவ­கா­ரத்தில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை மக்­க­ளுக்கு வழங்­கிய வழி­காட்டல் நிலைப்­பாட்­டிலே தொடர்ந்தும் இருக்­கி­றது எனவும் அவர் கூறினார்.

உலமா சபை செப்­டெம்பர் 1 ஆம் திகதி அறிக்­கை­யொன்­றினை வெளி­யிட்­டிருந்தது. அவ் அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, ஆடையைத் தெரிவு செய்து அணி­வது ஒவ்­வொரு மனி­த­னி­னதும் பெண்­ணி­னதும் அடிப்­படை மனித உரி­மை­யாகும். இலங்­கையின் அர­சியல் யாப்­பிலும் இது குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

ஏப்ரல் 21 ஆம் திக­திய சம்­ப­வங்­க­ளி­னை­ய­டுத்து நாட்டில் ஓர் அசா­தா­ரண நிலைமை உரு­வா­னது. இந்­நி­லையில் அர­சாங்கம் அவ­ச­ர­கால சட்­டத்தை அமு­லுக்குக் கொண்டு வந்­தது. அவ­ச­ர­காலச் சட்­டத்தின் கீழ் நிகாபும் தற்­கா­லி­க­மாக தடைக்கு உள்­ளாக்கப் பட்­டது. அமுல்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த அவ­ச­ர­காலச் சட்டம் ஆகஸ்ட் 23 ஆம் திகதி நீக்­கப்­பட்­டது. அத்­தோடு விஷேட அர­சாங்க வர்த்­த­மா­னி­யொன்றும் வெளி­யிடப்பட்­டது. நாட்டில் சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நிலை­நாட்­டு­வ­தற்கு பாது­காப்பு படை­யி­னரை கட­மையில் ஈடு­ப­டுத்­து­வ­தற்கு வர்த்­த­மானி மூலம் அனு­மதி வழங்­கப்­பட்­டது. ஏப்ரல் 21 தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து ஏற்­பட்ட அச்ச உணர்­வுக ளிலி­ருந்து மக்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை.

இவ்வாறான தற்போதைய நிலையில் முஸ்லிம் பெண்கள் பகிரங்க இடங்களில் அணியும் முகத்திரை அசாதாரண நிலைமைகளை உருவாக்கலாம். ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலையில் இனவாதிகளுக்கு சந்தர்ப்பம் வழங்காத வகையில் நாம் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

vidivelli

Check Also

அனைத்து பள்ளிவாசல்களின் சொத்து விபரங்களை கோருகிறது அரசாங்கம்

திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத நிறுவனங்களின் அசையும் அசையா சொத்துகளின் விபரங்களும் திரட்டப்படும் என்கிறார் பணிப்பாளர் பைஸல் நாட்டிலுள்ள …

You cannot copy content of this page