கொரோனா – Covid19 – LIVE UPDATE

119மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று

அதன்படி இதுவரை 152 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

118சற்று முன்னர் மேலும் ஒருவருக்கு கொரோனா

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 151 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினத்தில் மாத்திரம் ஐந்து பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் இனங்காணப்பட்டுள்ளனர்.

1172ம் உலகப்போருக்கு பின் சந்திக்கும் பெரிய சவால்

இந்நிலையில், இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு இந்த உலகம் சந்திக்கும் மிகப்பெரிய சவால், இந்த கொரோனா வைரஸ் தொற்று என ஐ.நாவின் பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டரஸ் எச்சரித்துள்ளார்.

116ஊரடங்கு உத்தரவை மீறிய 9466 பேர் கைது

கடந்த 20ஆம் திகதி முதல் இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதிக்குள் ஊரடங்கு உத்தரவை மீறிய 9466 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 2322 வாகனங்களும் மீட்க்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

115கொரோனாவால் உயிரிழந்த மூன்றாவது நபர்

நேற்றைய தியம் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர் குருதி அமுக்கம் ,சிருநீரக செயழிழப்பு மற்றும் நீரிழிவு ஆகிய நோய்களினால் பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் உயிரிழந்தவர் மருதானை பகுதியை சேர்ந்த 73 வயதுடையவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

114கொரோ தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர்

இதற்கமைய கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணம், மருதானை மற்றும் குருநாகல் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சு.சே. பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். -Hiru-

113சகல விமான சேவைகளும் இரத்து

எதிர்வரும் 8ஆம் திகதி முதல் எதிர்வரும் ஏப்ரல் 21 அம் திகதி வரை ஸ்ரீ லங்கன் விமான சேவையின் சகல சேவைகளையும் ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

112உலக அளவில் கொரோனா வைரஸூக்கு பலியானோர் எண்ணிக்கை 44,212

உலக அளவில் கொரோனா வைரஸூக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகிறார்கள். அந்த வகையில் நேற்று ஒரே நாளில் சுமார் 4,000 பேர் பலியாகினர். இதில், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பலியானவர்கள் மட்டும் பாதிக்கும் மேற்பட்டோர் ஆவர்.

111கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த மற்றுமொருவர் பூரண குணம்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றுமொரு நபர் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்

110கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில்  இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின்  எண்ணிக்கை 143 ஆக உயர்ந்துள்ளது.

109மொத்தமாக 142 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி இதுவரையில் மொத்தமாக 142 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

108சற்று முன்னர் மேலும் 3 பேர்.. அச்சத்தில் இலங்கை

இதற்கமைய இலங்கையில் 129 ஆக காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது. சற்று முன்னர் கொரோனா தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சிகிச்சை பெற்று வந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

107இந்நாட்டு கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இன்று (31) பிற்பகல் 3.20 மணி வரை இலங்கையில் மேலும் 7 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போதைய நிலையில் நாட்டில் 129 ​பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

106மின் பாவனையில் வீழ்ச்சி

நாட்டில் நாளாந்த மின் பயன்பாட்டில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மணித்தியாலத்திற்கு 49 முதல் 33 வரையிலான கிகாவோட் மின் பயன்பாடு வீழ்ச்சியடைந்துள்ளது. அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளமையே இதற்கு காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

105கொரோனாவால் 7 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 700,000 தாண்டியுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இதுவரை 33,000 க்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

104தொற்றுக்கு உள்ளான மேலும் 2வர் அடையாளம்

வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனவே இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

103இந்தியாவில் தொற்றாளர் எண்ணிக்கை 979ஆக அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 979 ஆக அதிகரித்துள்ளதாக இந்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவற்றில் 87 பேர் சிகிச்சையின் பின்னர் பூரண சுகம் அடைந்துள்ளனர். இது தவிர, 25 பேர் மரணமடைந்துள்ளனர்

102ஸ்ரீ லங்கன் விமான சேவை பணிப்பெண்ணுக்கு கொரோனா

ஸ்ரீ லங்கன் விமான சேவை பணிப்பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தங்கியுள்ள ஐ டி எச் வைத்தியசாலை இதனை உறுதிப்படுத்தியுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது.

101தவறான தகவல்களை பரப்பிய 57 பேர் மீது விசாரணை

கொரோனா வைரஸ் தொடர்பான தவறான தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்பிய 57 பேர் மீதான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

100பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்தது

இதுவரையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 65 ஆயிரத்தை எட்டியுள்ளது. குறித்த தொற்று காரணமாக 30 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.

99முதலாவது மரணம் பதிவானது IDH வைத்தியசாலையில்.

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு கொழும்பு அங்கொடையில் அமைந்துள்ள IDH வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

98சென்னையிலிருந்து யாராவது இலங்கைக்கு வந்திருந்தால்

கடந்த 14 நாட்களில் இந்தியாவின் சென்னையிலிருந்து யாராவது இலங்கைக்கு வந்திருந்தால், அப்பகுதியில் உள்ள பொதுச் சுகாதார உத்தியோகத்தருக்கு தகவல் தெரிவிக்குமாறும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்

97இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் மூன்று பேர் அடையாளங்காணப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 109 அக அதிகரித்துள்ளது. இதில் 9 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

96கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் எவருக்கும் கொரோனா இல்லை

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் எந்த ஒரு நபரும் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை தொடர்பில் இனங்காணப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

95ஊரடங்குச் சட்டத்தை மீறிய 5185 பேர் இதுவரையில் கைது

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 5185 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

94பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை-106

சற்று முன்னர் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் இனங்காணப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை-106

93இத்தாலியில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8200ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

92கொரோனா தொற்று எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு

இலங்கையில் மேலும் 2 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது.

9118,000 சுற்றுலா பயணிகள் நாட்டில்

நாட்டில் 18,000 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கியுள்ளனர் எனவும் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்துகொடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் இலங்கை சுற்றுலா சபை தெரிவித்துள்ளது. அத்துடன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்ஈகு ஏதேனும் தேவைகள் அல்லது பிரச்சினைகள் காணப்படுமாயின் 1912 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

90ஐரோப்பாவில் மட்டும் 2,50,000 பேருக்கு கொரோனா

ஐரோப்பாவில் அறிவிக்கப்பட்ட கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை 2,50,000 ஆக உயர்ந்துள்ளது. அவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை இத்தாலி மற்றும் ஸ்பெயினில் உள்ளன. இத்தாலியில் 74,386 பதிவு செய்யப்பட்ட நோய்த்தொற்றுகள் உள்ளன, ஸ்பெயினில் 56,188 பேர் உள்ளனர் என்று WHO தெரிவித்துள்ளது.

89ரஸ்யாவிலும் வேகமாக பரவத்தொடங்கியது வைரஸ்

ரஸ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளதை தொடர்ந்து மொஸ்கோ அனைத்து உணவுவிடுதிகள் கடைகள் மதுபான சாலைகள் உட்பட பொதுமக்கள் கூடுமிடங்கள் அனைத்தையும் 28ம் திகதி முதல் ஐந்தாம் திகதி வரை மூடும்படி உத்தரவிட்டுள்ளது.

8820,000 ஐ தாண்டிய மரண எண்ணிக்கை !

சற்றுமுன் உலகளவில் கொரோனா மரணம் இருபதாயிரத்தை தாண்டியது! இத்தாலியில் இன்று மட்டும் 683 பேர் மரணம்.

87முகாமிலுள்ள குடியேற்றவாசிகள் பரிதாப வேண்டுகோள்

அவுஸ்திரேலியாவின் விலாவூட் தடுப்பு முகாமில் உள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்களை விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவுஸ்திரேலியா பிரதமருக்கு நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர். எங்கள் குடும்பத்தவர்கள் மத்தியில் விடுதலை செய்த பின்னர் கடுமையாக கண்காணிக்கலாம் என கடிதத்தில் குடியேற்றவாசிகள் தெரிவித்துள்ளனர்.

86அமெரிக்க யுத்த கப்பலில் மூவருக்கு கொரோனா வைரஸ்

அமெரிக்க யுத்தக்கப்பலொன்றின் மூன்று கடற்படை வீரர்கள் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என பென்டகன் அறிவித்துள்ளது. யுஎஸ்எஸ் தியடோர் ரூஸ்வெல்ட் என்ற நாசகாரி கப்பலில் பணிபுரிந்த மூன்று கடற்படையினர் வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என பென்டகன் தெரிவித்துள்ளது.

85ஊரடங்கு சட்டத்தை மீறியமை- 3500 பேர் கைது

காவல்துறை ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 500 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கு காவல்துறையினரால் தடை ஏற்படுத்தப்பட்டால் 119 அவசர தொலைபேசி இலக்கம் அல்லது 011 2 44 44 80 மற்றும் 011 2 44 44 81 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து அது தொடர்பில் தகவல் வழங்க முடியும் 

84கொரோனாவின் தாண்டவம் அமெரிக்காவில்

கொரோனாவின் பாதிப்பு அமெரிக்காவில் தீவிரமாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.உலக சுகாதார அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

83இலங்கைக்கான வீசாவிற்கு தற்காலிக தடை

பல்வேறு நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தருவதற்கு வழங்கப்படும் வீசா சேவையினை தற்காலிகமாக இடைநிறுத்த குடிவரவு குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளத. அனைத்து விமான சேவைகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

82கொரோனா – உலகளாவிய ரீதியான பலி அதிகரிப்பு

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 21 ஆயிரத்து 637ஆக உயர்வடைந்துள்ளது. அத்துடன்,18810 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

81கொரோனா வைரஸ்க்கு சவுதி அரேபியாவில் முதல் மரணம்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் சவுதி அரேபியாவில் முதல் மரணம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதிசெய்துள்ளது.சவுதியில் கொரோனா உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 767 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 205 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானது.

80கொழும்பு, கம்பஹா களுத்துறை அவதான வலயமாக பிரகடனம்

கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் கொவிட்19 பரவல் அச்சுறுத்தல் அதிகம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் குறித்த 3 மாவட்டங்களிலும் மீள் அறிவிப்பு வரையில் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

79சற்று முன்னர் மேலும் 3 பேருக்கு கொரோனா

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.

783 மாவட்டங்கள் அபாயம் கூடிய மாவட்டங்களாக பிரகடனம்

கொழும்பு, களுத்துறை, கம்பஹா என்பன கொவிட் 19 அபாயம் கூடிய மாவட்டங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக குறித்த மாவட்டங்களில் மீள் அறிவிப்பு வரையில் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

77தடுப்பு முகாம்களில் இருந்து 311 பேர் வெளியேறினர்

வெளிநாட்டில் இருந்து வருகை தந்து கொரோனா தடுப்பு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த 311 பேர் இன்று அங்கிருந்து வெளியேறி தங்களது வீடுகளுக்கு சென்று உள்ளனர்.

76இத்தாலியில் கொரோனாவின் தாண்டவம்

கொரோனா தொற்று காரணமாக இத்தாலியில் கடந்த 24 மணித்தியாலங்களில் 601 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதுவரையில் அந்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6077ஆக உயர்ந்துள்ளது.

75ஊரடங்குச் சட்டத்தை மீறிய 2262 பேர் கைது

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 2262 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

74கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 96 உயர்வு

இலங்கையில் மேலும் 5 பேர் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதியாகியுள்ளது. அதன்படி குறித்த வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 97ஆக உயர்ந்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

73கடனட்டை தொடர்பி்ல் முக்கிய அறிவிப்பு

மாதாந்த கடன் தொகையை ரூ.50,000 வரையான தேசிய கொடுக்கல் வாங்கலுக்காக பயன்படுத்தப்படும் கடனட்டைக்கான கடன் வட்டி வீதத்தை அதிகபட்சம் 15வீதத்தின் கீழ் கொண்டு வருதலும் ஆகக் குறைந்த மாதாந்த அறவீட்டை 50வீதமாக குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

72நாளை கொழும்பு மெனிங் சந்தை திறப்பு

நாளை (24)அதிகாலை 4 மணி முதல் நண்பகல் 12 மணி வரை கொழும்பு மெனிங் சந்தையை திறந்து வைக்கவுள்ளதாக பொது வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

71இலங்கை மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 91

இலங்கையில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இந்நாட்டில் இதுவரை 91 பேர் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

70முதலாவது கொரோனா தொற்றாளர் வீடு திரும்பினார்

இலங்கையில் முதலாவதாக இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளரான வெளிநாட்டு பயணிகளுக்கான வழிகாட்டுனராக செயற்பட்டவர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

69போக்குவரத்திற்கு முழுமையான தடை

நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்குமான போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி, மரக்கறி போன்வற்றிற்கான போக்குவரத்திற்கும் அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

681990 – கொரோனா தொற்றுக்கான புதிய இலக்கம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டால் 1990 என்ற சுவசெரிய அம்புலன்ஸ் மூலம் தொடர்புகொண்டு சுகாதார பிரிவுடன் தொடர்புகொள்ள முடியும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்தார்.

67ஒரே நாளில் 1,600 மரணங்கள்

உலகையே அச்சத்தை ஏற்படுத்திய கொரோனா தொற்று, உலகளவில் கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் 1,600 மரணங்கள் நிகழ்ந்திருப்பதை உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை வெளிக்காட்டுகிறது.

66புதிய ஊரடங்கு நேர அறிவித்தல்

இலங்கையில் அணைத்து மாவட்டங்களுக்கான புதிய ஊரடங்கு நேரங்கள் அரசால் வெளியிடப்பட்டுள்ளது – விபரங்கள்

65வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கை 86ஆக அதிகரிப்பு

கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 86 ஆக அதிகரிததுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரவித்துள்ளார்.

64ஊரடங்கு உத்தரவை மீறியவர்களுக்கு நேர்ந்த கதி

நாடளாவிய ரீதியில் காவல் துறை ஊரடங்கு உத்தரவினை மீறிய 1754 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் முச்சக்கர வண்டி, உந்துருளி உள்ளிட்ட ஏனைய வாகனங்கள் உள்ளடங்கலாக 477 வாகனங்கள் காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

63தொற்றாளர்களின் எண்ணிக்கை 82 ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர்களின் மொத்த எண்ணிக்கை 82 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

62கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

கொரோனா வைரஸ் (கோவிட் 19) தொற்றுக்கு உள்ளான மேலும் ஒரு நபர் இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

61கொரோனா பாதிக்கவர்களின் எண்ணிக்கை 80

இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.

60விமானங்கள் மற்றும் கப்பல்கள் வருவதற்கு தடை

கொரோனா வைரஸ் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பரவும் அபாயத்தை தடுக்கும் வகையில் அனைத்து பயணிகள் விமானங்கள் மற்றும் பயணிகள் கப்பல்கள் நாட்டுக்குள் வருவதை அரசாங்கம் தடை செய்துள்ளது.

59மின்சார கட்டணங்களை செலுத்த கால அவகாசம் 

மின்சார கட்டணங்களை செலுத்த எதிர்வரும் மார்ச் 31 திகதி  வரை கால அவகாசம் வழங்கப்படும்  என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

58ஊரடங்கு உத்தரவை மீறிய 291 பேர் கைது

ஊரடங்கு உத்தரவை மீறியதாக சந்தேகிக்கப்படும் 291 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

57தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 77 ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர்களின் மொத்த எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது.

56மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று

அனுராதபுரத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதன்படி, இதுவரை 76 ​பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

55சிங்கப்பூரில் முதல் மரணம்

கொவிட்-19 எனப்படும் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த மரணம் சிங்கப்பூரில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை குறித்த வைரஸ் தொற்றினால் 385 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந் நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

5448 பேர் ஊரடங்கு சட்டத்தை மீறியமையால் கைது

உகண, பண்டாரகம, தம்புள்ளை, வலஸ்முல்லை, நல்லதண்ணி, அம்பாறை, பண்டாரவளை, ஹப்புத்தளை, தங்காலை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

53சமையல் எரிவாயுவிற்கு நாட்டில் தட்டுப்பாடில்லை

லிட்ரோ  எரிவாயு(கேஸ்) லங்கா  நிறுவனத்தின் வசம் தேவையான அளவு  எரிவாயு  தொகை களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நாட்டில்  உள்ள  அனைத்து பிரதேசங்களுக்கும்  எவ்வித  தட்டுப்பாடுமின்றி  எரிவாயுவை  விநியோகிக்க முடியும் என லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் அறிவித்துள்ளது.

52அவுஸ்திரேலியாவில் 7வது நபர் மரணம்

அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 7வது நபர் மரணமடைந்துள்ளார். கடந்த 24 மணிநேரத்தில், நியூ சவுத் வேல்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக 75 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இதையடுத்து, இம்மாநிலத்தில் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 382 ஆக உயர்ந்துள்ளது.

512வது நாளாக புதிய நோயாளிகள் எவருமில்லை

கொரோனா வைரஸ் பரவல் உருவானதாக கூறப்படும் வுஹான் நகரம் மட்டுமின்றி ஒட்டுமொத்த சீனாவிலும் இரண்டாவது நாளாக புதிய நோயாளிகள் எவரும் கண்டறியப்படவில்லை என அரசு அறிவித்துள்ளது.

50ஊரடங்கை மீறிய 8 பேர் கைது !

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறிய 8 பேர் பண்டாரவளை மற்றும் ஹப்புத்தளைப் பகுதிகளில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

49மேலும் இருவருக்கு கொரோனா தொற்று

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 72ஆக அதிகரிததுள்ளதாக சுகாதார அமைச்ச்ர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

48வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 70 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 5 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும், அதனடிப்படையில் வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

47எரிபொருள் பற்றிய ஒரு செய்தி

எரிபொருள் குறித்து பொதுமக்கள் தேவையற்ற வகையில் அச்சமடைய வேண்டாம் எனவும் தேவைக்கு மேலதிகமாக எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

46அனைத்து தபால் சேவைகளும் இடைநிறுத்தம்

அனைத்து தபால் சேவைகளும் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

45அனைத்து நெடுஞ்சாலைகளும் 6 மணியுடன் பூட்டு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளனோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில், சகல அதிவேக நெடு வீதிகளும் இன்று பிற்பகல் 6.00 மணியுடன் மூடப்படுமென  வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

44சவூதி அரேபியாவின் புதிய சட்டங்கள்

சவுதிஅரேபியாவில், உள்நாட்டு விமான சேவை மற்று பொது போக்குவரத்துகளான ரயில், பேருந்து, டாக்சி ஆகியவை இரண்டு வாரங்களுக்கு நிறுத்த அரசு உத்தரவிட்டுள்ளதாக SPA செய்தி வெளியிட்டுள்ளது.

43யாத்திரைகள், சுற்றுலா செல்லுதல் தடை

மத வழிபாட்டுக்கான யாத்திரைகள், உல்லாச பயணங்கள் மற்றும் சுற்றுலா நடவடிக்கைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

42பலி எண்ணிக்கையில் சீனாவை விஞ்சியது இத்தாலி

இத்தாலியில் 24 மணி நேரத்தில் மாத்திரம் 427 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 3405 அக அதிகரித்துள்ளது், சீனாவில் 3245 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

41இலங்கையில் தனிமை படுத்தப்பட்டவர்களின் விபரம்

தற்போது 17 தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களில் 2463 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் இதில் 27 வெளிநாட்டுவர்கள் உள்ளடங்குவதாகவும் COVID19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு குழு தெரிவித்துள்ளது.

40அனைத்த ரயில் சேவைகளும் இடைநிறுத்தம்

அனைத்து விதமான ரயில் சேவைகளும் இன்று (20) பிற்பகல் 3.30 முதல் இடைநிறுத்தப்படுவதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

39மேலும் 6 பேருக்கு கொவிட் 19 தொற்று

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 6 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, மொத்தம் இதுவரை 65 பேர் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்38அதிகரிக்கும் மரணங்கள் – அதிர்ச்சியில் உலகம்

கொரோனா வைரஸ் இதுவரை 160 நாடுகளில் பரவி உள்ளது. 244,517 பேருக்கு இந்த வைரஸ் தொற்றியுள்ள நிலையில் 10,030 பேர் உயிரிழந்துள்ளனர். அதிலிருந்த மீண்டவர்களின் எண்ணிக்கை 86,025 ஆக உயர்ந்துள்ளது. இத்தாலியில் மட்டும் 3405 பேர் உயிரிழந்துள்ளனர்.

37முழு இலங்கைக்கும் ஊரடங்குச் சட்டம்

இன்று (20) மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கள் (23) காலை 6 மணி வரை இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

36ஜா-எல மற்றும் வத்தளைக்கு பொலிஸ் ஊரடங்கு

இன்று இரவு 10 மணி முதல் மீள அறிவிக்கும் வரையில் ஜா-எல மற்றும் வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

35உயிரிழந்தவர்களை கையாள இராணுவம்

இத்தாலியில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கையாள முடியாதநிலை தோன்றியுள்ளதை தொடர்ந்து அரசாங்கம் இராணுவத்தின் உதவியை நாடியுள்ளது.

34ஒவ்வொரு 10 நிமிடத்துக்கும் ஒரு ஈரானியர் உயிரிழப்பு

ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒரு ஈரானியர் கொரோனா வைரஸினால் உயிரிழப்பதாக தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ள ஈரானிய சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கியானூஷ் ஜஹான்பூர், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் குறைந்தது 50 ஈரானியர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

33தொலைத் தொடர்பாடல் அத்தியாவசிய சேவையாகப் பிரகடனம்!

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில், தகவல்களை வழங்கும் தொலைத்தொடர்பாடல் சேவைகள் மிகவும் முக்கியத்துவம் பெறுவதனால் அதனை அத்தியாவசிய சேவையாக இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவித்திருக்கிறது.

32மத்தியவங்கியின் அறிவுறுத்தல்

எதிர்வரும் 3 மாதங்களுக்கு அத்தியவசியம் இல்லாத பொருட்களின் இறக்குமதிக்கு, வாகன இறக்குமதிகலுக்கும் கடன் வழங்க வேண்டாமென மத்திய வங்கி வர்த்தக வங்கிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

31நாட்டிலிருந்து 38,000 நபர்களை வெளியேற்ற நடவடிக்கை

நாட்டில் சுமார் 38,000 வெளிநாட்டவர்கள் தங்கி இருப்பதாகவும் அவர்களை அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

30ரஷ்யாவில் முதலாவது நபர் உயிரிழப்பு

கொவிட் 19 தொற்று காரணமாக ரஷ்யாவில் முதலாவது நபர் உயிரிழந்தள்ளார். 79 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே ரஷ்யாவில் 147 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

29பங்களாதேஷில் வேகமாக கொரோனா பரவும் அபாயம்

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையிலான பிரார்த்தனை கூட்டம் ஒன்று நேற்றைய தினம் பங்களாதேஷின் ராய்ப்பூர் நகரில் அரசாங்கத்தின் தடையை மீறி நடத்தப்பட்டுள்ளது. இதில் சுமார் 30 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

28ஸ்பெயினில் 24 மணியில் 207 பேர் மரணம்

ஸ்பெயினின் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை ஒரு நாளில் 200 க்கும் அதிகமாகியுள்ளது. மொத்தமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 767 ஆக உயர்ந்துள்ளதாக ஸ்பெயினின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

27மொத்தம் 59 – இலங்கையில் மேலும் மூவருக்கு தொற்று

இலங்கையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளான மேலும் 3 பேர் தற்போது இனங்காணப்பட்டுள்ளதாகவும் இவர்களுள் குழந்தை ஒன்றும் உள்ளடங்குவதாக தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளதாகவும் விஷேட வைத்திய அதிகாரி அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

26இலங்கையில் மேலும் நால்வருக்கு கொரோனா

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளான மேலும் 4 பேர் இன்று (19) இனங்காணப்பட்டுள்ளதாகவும், மொத்த எண்ணிக்கை 56 அதிகரித்துள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விஷேட வைத்திய அதிகாரி அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

25மீண்டும் காவற்துறை ஊரடங்கு உத்தரவு..!

கொரோனா வைரஸ் பரவும் அபாயம் காணப்படுவதன் காரணமாக இன்று பிற்பகல் 2 மணி தொடக்கம் புத்தளம் மாவட்டம் மற்றும் நீர்கொழும்பு கொச்சிக்கடை காவற்துறை பகுதிகளுக்கு காவற்துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

24கொரோனா வைரஸ் தொற்றுக்கு எண்ணிக்கை 52ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளான மேலும் இருவர் இனங்காணப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர்களின் மொத்த எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது.

232ம் உலகப்போருக்கு பின்னர் ஜேர்மனியில் மோசமான நிலை

இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் ஜேர்மனியில் ஏற்பட்டுள்ள மிக மோசமான நெருக்கடி நிலை இதுவென சான்சலர் எஞ்சலா மர்கல் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஜேர்மனியல் இதுவரையில் 28 பேர் உயிரிழந்துள்ளதோடு, 12,327 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

22சீனாவில் மீண்டும் தொற்று ஏற்படும் அபாயம்.

சீனா, தென்கொரியா மற்றும் சிங்கப்பூர் முதலான நாடுகளில், வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகளவில் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

21நாளுக்கு நாள் மோசமாகும் இத்தாலி

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இத்தாலியில் பாரியளவில் மரணங்கள் அதிகரித்து வருகின்றது. நேற்றைய தினத்தில் மாத்திரம் 475 புதிய மரணங்கள் பதிவாகியுள்ளன. இதற்கமைய, இத்தாலியில் பலியானோர்களின் எண்ணிக்கை 2978 ஆக உயர்வடைந்துள்ளது.

20கட்டுநாயக்க பணிகள் இன்றுடன் நிறுத்தம்

கொரோனா வைரஸ் நாட்டில் பரவுவதை கட்டுபடுத்தும் நோக்கில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பயணிகள் விமானங்கள் வருகைத்தருவது இன்று அதிகாலை 4 மணிமுதல் எதிர்வரும் 25 ஆம் திகதி நள்ளிரவு வரை இடை நிறுத்தப்பட்டுள்ளது.

19ஹாங்காங் இல் புதிய சட்டம்

அனைத்து வெளிநாட்டு வருகையாளர்களுக்கும் கட்டாய தனிமைப்படுத்தலை ஹாங்காங் அறிமுகப்படுத்துகிறது, வெளிநாட்டிலிருந்து வரும் மக்களுக்கான விதிகளை ஹாங்காங் கடுமையாக்கியுள்ளது. மேலும் அனைத்து வருகையாளர்களும் 14 நாட்கள் தனிமைப் படுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது

18புதிய நோயாளிகள் இல்லை

சீனாவின் மத்திய நகரமான வுஹான் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாகாணமான ஹூபே ஆகியவையில் முதன்முறையாக கொரோனா வைரஸ் தொடர்பான புதிய நோயாளிகள் இனம் காணப்படவில்லை

17ஆபிரிக்க நாடுகளுக்கு அபாயம்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு இரையான சீனா, இத்தாலிக்கு அடுத்து ஆப்பிரிக்கா மிகக் கடுமையாக பாதிக்கப்படும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் கவலை தெரிவித்துள்ளார்.

16லண்டன் முடக்கப்படும் சாத்தியம்

பிரித்தானியாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு லண்டன் நகரம் முக்கிய காரணியாகலாம் என்ற அச்சத்தின் அடிப்படையில் மொத்தமாக முடக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

15கனடா-அமெரிக்கா இடையேயான எல்லை மூடல்

கனடாவுடனான அமெரிக்காவின் வடக்கு எல்லையை மூடிவிட்டு, ‘அத்தியாவசியமற்ற’ போக்குவரத்து தடை செய்யப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ட்வீட் செய்துள்ளார்.

14யாத்திரை மற்றும் சுற்றுலாத் தடை

நாட்டினுள் யாத்திரை மற்றும் சுற்றுலாப் பயணங்கள் இன்று முதல் மீள் அறிவித்தல் வரை முழுவதுமாக தடை செய்யப்படுவதாகவும் , இந்த ஆலோசனைகளை மீறி செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

13இரவு நேர களியாட்ட விடுதிகளுக்கு பூட்டு

இரவு நேர களியாட்ட விடுதிகள் மற்றும் சூதாட்ட மையங்களை உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. -சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க-

12தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை

கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை தீர்மானிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா வைரஸ் (PCR) பரிசோதனையை அனுமதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது என, சுகாதார DG டாக்டர் அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார் (முழுவிபரம்)

11இலங்கையில் மேலும் 8 கொரோனா நபர்கள்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 8 பேர் இன்று (18) இனங்காணப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

10வரி இன்று நள்ளிரவு முதல் நீக்கம்

முக கவசம் மற்றும் கிருமி மருத்துவ நாசினிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த வரி இன்று நள்ளிரவு முதல் நீக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

9துருக்கியில் முதல் மரணம்

கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளான 89 வயதுடைய நபர் ஒருவர் மரணித்திருப்பதாக துருக்கிய சுகாதார அமைச்சர் உறுதி செய்துள்ளார். துருக்கியில் மொத்தம் 98 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

8பல் மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்கவும்

கொவிட் 19 வைரஸ் தொற்று பரவல் காரணமாக அவசர தேவைக்காக மட்டுமே பல் மருத்துவமனைக்கு வருகைத் தருமாறு இலங்கை பல் வைத்திய சங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

7வாகன அனுமதிப்பத்திரம் விநியோகம் இடைநிறுத்தம்

வாகன அனுமதிப்பத்திரம் பிரதேச செயலகங்கள் மூலம் விநியோகிக்கப்படுவது மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக்கொள்வதற்கு முடியும்.

6பொலிஸ் ஊரடங்கு சட்டம்

புத்தளம் மாவட்டம் மற்றும் நீர்க்கொழும்பு, கொச்சிக்கடை பொலிஸ் அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசத்திற்கு இன்று (18) பிற்பகல் 4.30 மணி முதல் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது. (முழு விபரம்)

5ஒலிம்பிக் குழுமத்தின் துணைத்தலைவருக்கு கொரோனா

ஜப்பானிய ஒலிம்பிக் குழுவின் துணை தலைவர் Kozo Tashima விற்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு அமைய அவருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

4உலகமே யுத்தத்தில் : நாம் வெற்றி கொள்வோம்

கொவிட் 19 வைரஸ் இனை மேற்கோள்காட்டி மறைமுக எதிரியினால் உலகமே யுத்தத்தில் எனவும் தாம் அதனை நாம் வெற்றி கொள்வோம் என்றும் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ட்விட்டர் பதிவொன்றினை வெளியிட்டுள்ளார்.

3யாத்திரர்கள் இன்று மீண்டும் இலங்கைக்கு

இலங்கை யாத்திரர்களை மீண்டும் அழைத்து வர இன்று(18) பிற்பகல் ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானமொன்று புது டில்லி செல்லவுள்ளது

2சுவிட்சர்லாந்து தூதரகத்திற்கு பூட்டு

கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகம் எதிர்வரும் 20ம் திகதி வெள்ளிக்கிழமை வரை பொதுமக்களுக்கு மூடப்பட்டிருக்கும் என சுவிட்சர்லாந்து நாட்டிற்கான தூதரகர் Hanspeter Mock தெரிவித்துள்ளார்.

1பூஸ்ஸ இராணுவ முகாமை தடுப்பு முகாமாக…

நாட்டிற்கு வருகை தருவோரை தனிமைப்படுத்துவது தேசிய கடமை என்ற ரீதியில் கடற்படையினர் மார்ச் 16ம் திகதி பூஸ்ஸ கடற்படை இராணுவ முகாமை தடுப்பு முகமாக பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.