அக்குறணை வாழ் மக்களே, நீங்கள் மனம் தளர்ந்து விட வேண்டாம்

அல்லாஹ் விதித்தது அன்றி வேறொன்றும் நடக்காது. நீங்கள் அல்லாஹ்விடம் அழுது மன்றாடி உதவிதேடுங்கள் நாங்களும் உங்களுக்காக இறைவனை வேண்டுகிறோம். வியபாரத்தில் இலங்கையின் மூலை முடுக்கெல்லாம் சென்று வாழ்பவர்கள் நீங்கள், நீங்கள் பொறுமையானவர்கள், பொறுமையாகவே இருங்கள் அல்லாஹ் உங்களை கை விட மாட்டான் “இன்ஷா அல்லாஹ்”.

நீங்கள் விடா முயற்சி செய்பவர்கள், நீங்கள் சோம்பேறிகள் அல்ல!!!, வியாபாரத்தில் சிகரம் தொட்டவர்கள் நீங்கள்!!!, உங்களின் செல்வம் எமது உம்மத்துக்கு தேவையான போதெல்லாம் உதவியிருக்கிறது!!! ,உங்களை அல்லாஹ் கைவிட மாட்டான் இன்ஷா அல்லாஹ்.உங்கள் வலியோடும் சந்தோசத்ததோடும் நாங்கள் கலந்திருக்கிறோம்.

நீங்கள் வியாபார சமூகமாக இலங்கை முஸ்லீம்களுக்கு பெயர் தேடித்தந்தவர்கள், தேவையான போதெல்லாம் எமது சமூகத்திற்கு தெரிந்தும் தெரியாமலும், மறைந்தும், மறைத்தும் உதவி செய்தவர்கள் நீங்கள்!!!. அல்லாஹ்விற்க்காக நீங்கள் கொடுத்த தர்மமம் உங்களின் துயர் துடைக்கும் “இன்ஷா அல்லாஹ்”

எனதருமை அக்குறணை சமூகமே!!! “கொரோனா” என்ற நோய் முழு உலகிலும் பரவுகின்றது, நாம் எல்லாரும் உலகமயமாக்கலில் கலந்திருக்கிறோம், அல்லாஹ்வின் நாட்டப்படி உங்கள் ஊரில் ஒருவருக்கு தொற்றி இருக்கிறது ,அவன் அன்றி அணுவும் அசையாது என்று உறுதியாக நம்புபவர்கள் நாங்கள், அந்த வல்ல அல்லாஹ் அந்த நபரை பூரணமாக சுகப்படுத்த வேண்டும் என்று இரைந்து வேண்டுகிறோம் ரஹுமானே, இரக்கமுள்ளவனே எங்கள் இரங்கலை ஏற்றுக்கொள்.

எனதருமை அகுறணை வாழ் மக்களே!!! இந்த இக்கட்டான நிலமையில் நாம் இறை நம்பிக்கையோடு கூட்டாக, முழுமூச்சுடன் இந்த இடரை வெற்றி கொள்வோம்.

அக்குறணை என்பது வெறுமனே வியாபாரிகள் மாத்திரம் உள்ள ஊர் கிடையாது, நிறைய படித்தவர்கள் இருக்கிறார்கள், உலமாக்கள் இருக்கிறார்கள், பல இஸ்லாமிய இயக்கங்கள் (தப்லீக், தவ்ஹீத், ஜமாத்தே இஸ்லாம்) ஒற்றுமையோடு இயங்குகிறது, விளையாட்டுக் கழகங்கள், நூற்றுக் கணக்கான சமூக சேவை அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் உள்ளன ,நம்பிக்கை இழக்க வேண்டாம் கூட்டாக முகம் கொடுப்போம் அல்லாஹ் உங்களோடு இருப்பான் “இன்ஷா அல்லாஹ்”.

சமூக வலைத்தளங்களில் வரும் பொறுப்பற்ற ,காழ்ப்புணர்வு மிக்க அடிமைத்தனமான, பிரதேசவாத கருத்துக்களுக்கு நீங்கள் பதில் கொடுக்க வேண்டாம்!!! அந்த தெரு நாய்ச்சண்டை நமக்கு தேவை இல்லை, நீங்கள் விவேகமானவர்கள் அல்லாஹ்வின் உதவியுடன் இந்த இடரை வெற்றி கொள்வோம்.

சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவர்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளட்டும்.எவரைத் திட்டி ஏசிப் பேசினீர்களோ, அவருக்காக செய்து கொள்ளுங்கள்
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு துஆ ஓதியதை நான் கேட்டேன்.

اَللّهُمَّ فَأيٌما مُؤمِنٍ سبَبتهُ فَاجعَل ذَالِكَ لَهُ قُربَةٌ إلَيكَ يَوم القِيَامَةِ
”அல்லாஹும்ம பFஅய்யமா முஃமினின் ஸபப்தஹு பFஅஜ்அல் தாலிக லஹு குர்பதன் இலைக்க யவ்மல் கியாமா”

’யா அல்லாஹ்! எந்த முஸ்லிமை நான் திட்டிப் பேசி விட்டேனோ அவருக்கு அந்த ஏச்சுப் பேச்சை மறுமை நாளில் உன் பக்கம் நெருங்கி வருவதற்கான சாதனமாக ஆக்குவாயாக.!’

அக்குறணை மக்களோடு நாம் இருப்போம். அவர்கள் மன உளைச்சலுக்கு மருந்தாக இருப்போம். அவர்களுக்காகவும் எமது நாட்டிற்காகவும் நோய் வாய்பட, இடர் துயர்கொண்ட அனைவருக்காகவும் வல்ல அல்லாஹ்வை வேண்டுகிறோம் ஆமீன்….

எஸ். எம். ஹலீம் கெகிராவ