ஜனாஸா விடயம் சம்பந்தமாக அக்குறணை பிரதேச சபை தவிசாளர் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு

அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு,

கொரோனா – கொவிட் 19 தொற்றில் மரணிக்கும் முஸ்லிம்களை எரிக்காமல் அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் வழங்கியுள்ள அனுமதி சம்மந்தமாக

கொரோனா கொவிட் 19 தொற்றில் மரணிக்கும் முஸ்லிம்களை எரிக்காமல் அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் இன்றைய தினம் வழங்கியுள்ள அனுமதியை வரலாற்று முக்கியத்துவம் மிக்க நிகழ்வாக கருதி அரசுக்கும், அதிமேதகு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பாராளுமன்ற பலத்தையும், நிறைவேற்று அதிகாரத்தையும் தன்னகத்தே கொண்டு ஆட்சி செய்து வரும் நீங்கள், நாட்டின் வாழுகின்ற அனைத்து இன மக்களது நலனில் கரிசனை கொண்ட, அவர்களது உணர்வுகளை மதிக்கின்ற ஜனாதிபதி என்பதை நிஷரூபித்துள்ளீர்.

கொரோனாவில் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்யாது எரிப்பது என்பது முஸ்லிம்களின் மனதில் ஆழமாக தாக்கத்தை உண்டாக்கியிருந்தது. அதனால் பெரும் துயர் கொண்டிருந்தோம். இந்நிலையில் முஸ்லிம் சமூகத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து, சுகாதார தரபினருடனும் கலந்தாலோசித்து, உங்கள் தலைமையிலான இந்த ஆளும் அரசு முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதியளிக்க எடுத்த தீர்மானம் இலங்கை வாழ் முஸ்லிம்கள் மத்தியில் மிகப் பெரிய சந்தோஷத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

முஸ்லிம் ஜனாஸாக்களை அடக்கும் விவகாரத்தில் நீங்கள் மேற்கொண்ட இந்தத் தீர்மானத்திற்கு இலங்கை முஸ்லிம்கள் சார்பில் எனது நன்றியை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி, இப்படிக்கு,
(ஐ.எம். இஸ்திஹார்)
தவிசாளர்,
அக்குறணை பிரதேச சபை (CPC/APS/W008/053)

Check Also

அக்குறணை வெள்ளப் பிரச்சினை பற்றிய எனது பார்வை

அண்மையில் (2023/12/07 மற்றும் 08 ஆம் திகதி) அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது பேசுபொருளாக மாறியிருப்பதை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் …

You cannot copy content of this page