அக்குறணை அஸ்ஹர் மாதிரி ஆரம்பப் பாடசாலையில் இவ்வருடம் (2020) புலமைப்பரிசில் பரீட்சையில் 147 மாணவர்கள் தோற்றியதில் 13 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றனர்.

அவர்களின் விபரம்

01) எஸ், எம், எம் அஸ்fபாக் 185
02) எம், ஆர், எப் ஸஹ்லா 185
03) ஏ, எம் பிலால் 175
04) எம், ஏ, எம் முயீஸ் 174
05) ஏ அய்மன் 173
06) எம், ஆர், ஏ ராயித் 170
07) எம், ஆர், எம் தல்ஹா 168
08) எம், ஆர், எப் ரீமா 167
09) எம், ஏ செய்யத் இப்ராஹிம் 166
10) எம், எஸ், எப் ஹிஸ்மா 166
11) எம், ஆர் ஷெஸாட் 163
12) ஏ, ஏ இயான் 162
13) அர், எம் ஸயீட் 162

அத்துடன் 134 மாணவர்கள் 70 ற்கும் மேல் புள்ளிகளைப் பெற்றுக்கொண்டதுடன், அவர்களுள் 92 பேர் 100 ற்கும் அதிகமான புள்ளிகளைப் பெற்றுக்கொண்டனர்.

இவர்களின் சாதனைக்கு முன்னின்று உழைத்த தரம் ஐந்து ஆசிரியர்களான

ஏ,சி,எம் ஷியாம் ஆசிரியர்
என்,எம்,எஸ் பரீதா ஆசிரியை
ஆர்,எப் ரிஸ்வானா ஆசிரியை
எஸ், எப் ஸரீரா ஆசிரியை
மற்றும் தொண்டர் ஆசிரியர்கள்,

இவர்களுடன் தரம் 1 முதல் கற்பித்த ஆசிரியர்கள், கொரோனாவின் பின்னரான பாடசாலை நாட்களில் அதிபரினால் பகிர்ந்தளிக்கப்பட்ட குறுகிய கால வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைக்கும் வகையில் செயற்பாடுகளுடனான பாடங்களை வெற்றிகரமாக நடாத்தி தந்த தரம் 3,4 ஆசிரியர்கள் உட்பட அனைத்து ஆசிரியர்களுக்கும் எமது நன்றி கலந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவர்களுடன் புலமைப்பரிசில் மாதிரி பரீட்சைகளை நடாத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அஸ்ஹர் பாடசாலையின் பழைய மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர்களுக்கும், அதே போன்று பாடசாலையின் மண்டபங்களை தந்து உதவி எமது மாணவர்களை ஊக்குவிப்பதற்கு வழிகாட்டிய அஸ்ஹர் தேசிய பாடசாலை அதிபர் அவர்களுக்கும், விஷேடமாக எமது அனைத்து முன்னெடுப்புக்களின் போதும் பின்னின்று உழைத்த தரம் 05 பெற்றார் குழுவிற்கும், அவர்களுடன் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எமக்கு ஒத்துழைப்பு வழங்கிய அஸ்ஹர் மாதிரி ஆரம்பப் பாடசாலையின் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு அங்கத்தவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

விடுமுறை காலத்தில் மாணவர்களை சரியான முறையில் வழிநடாத்துவதில் பெற்றோருடைய பாரிய பங்களிப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது, எனவே இந்த மாணவர்களின் அபிவிருத்திக்காக பாடுபட்ட அனைத்து பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் திறமை சித்தி பெற்ற மாணவர்களையும், சிறந்த புள்ளி பெற்ற மாணவர்களையும், ஏனைய புள்ளிகள் பெற்ற மாணவர்களையும் அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திக்குழு, பழைய மாணவர் ஒன்றியம், பெற்றார்கள் ஆகியோர் வாழ்த்துவதோடு, இந்த மாணவர்களின் கல்வியின் அடுத்த கட்டங்களில் சிறந்து விளங்க வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

தினமும் அக்குறணை வைத்தியர்கள், ஜனாஸா, தொழுகை நேரம், பாடசாலை விபரங்களை SMS மூலம் பெற்றுக் கொள்ள, கீழே உள்ள பட்டன் ஐ அழுத்தி SMS பண்ணவும் **

Daily Akurana News to your Mobile via SMS. Click the Above button and send the SMS. **

* Akurana Prayer Time (அக்குறணை தொழுகை நேரம்)
* Akurana Breaking News (அக்குறணை முக்கிய செய்திகள்)
* Akurana Doctors Details (வைத்தியர்கள் விபரம்)
* Akurana School News (பாடசாலை செய்திகள் )
* Janaza News (ஜனாஸா அறிவித்தல்கள்)
* Akurana Sales & Discounts (சலுகை/ தள்ளுபடி செய்திகள்) –

**Daily-2+tax when your phone balance available