அக்குறணையில் நடக்கும் ஒரு நூதன மோசடி

அஸ்ஸலாமு அலைக்கும்.

அண்மையில் அக்குறணையில் பல மக்களை (முக்கியமாக பெண்களை) இலக்கு வைத்து அவர்களது போனுக்கு SMS அல்லது CALL மூலம் ,தங்களுக்கு பணப் பரிசு அல்லது அன்பளிப்புகள் கிடைத்திருப்பதாக கூறி பெரும் பண மோசடியில் ஈடுபடும் ஒரு குழு தீவிரமாக இறங்கியுள்ளது.

இந்த மோசடி குழுவானது முக்கியாமாக அக்குறணை பெண்களையே இலக்காக வைத்து செயற்படுகின்றது. பல அப்பாவி பெண்கள் இதில் சிக்கிகொண்டு தமது பணத்தினையும், வாழ்க்கையினையும் தொலைத்துள்ளனர்.

இவர்களது ஏமாற்று முறை:

▶️ அக்குறணை உள்ள தொலைபேசி இலக்கங்களை சேகரிப்பது. (உதாரணமாக சமுர்த்தி நிதி பெறுபவர்களின் இலக்கங்கள்)

▶️ இந்த தொலைபேசி இலக்கங்களுக்கு SMS அல்லது CALL பண்ணுவதன் மூலம். உங்களுக்கு பல லட்சங்கள் வெகுமதியாக கிடைத்திருப்பதாக தெரிவிப்பார்கள். (அண்மையில் பலருக்கு 840,000 ரூபா கிடைத்திருப்பதாக SMSகள் வந்துள்ளது)

▶️ முக்கியமாக, இந்த விடயத்தினை யாரிடமும் கூற வேண்டாம் என்றும் , அப்படி செய்தால் உங்களுக்கு பணம் கிடைக்காது என்றும் காரணங்கள்; கூறுவார்கள்.

▶️ பணத்திற்கு ஆசைப்பட்டு அவர்களின் தொலைபேசிக்கு பதிலளித்து தொடர்புகொள்ளும் நபர்களை இவர்கள் தந்திரமாக ஏமாற்ற தொடங்கி விடுவார்கள்.

▶️ பரிசாக பெற்ற பணத்தினை உங்கள் வங்கி கணக்கில் வைப்பிலிட தங்களுக்கு ஒரு தொகை பணத்தினை செலுத்தவேண்டும் என்று ஆரம்பித்து ஒவ்வொரு காரணங்களை கூறிக்கொண்டு உங்களிடம் இருந்து பணத்தினை பெற தொடங்குவார்கள்.

▶️ யாரும் மயங்கும் வண்ணம் இவர்களது பேச்சு காணப்படும்,

▶️ நீங்கள் இந்த ஏமாற்று குழுவினை எவ்வளவு தூரம் நம்பிக்கை கொள்கின்றீர்கள் என்பதனை பொறுத்து பல ஆயிரங்களில் இருந்து இலட்சங்கள் வரை உங்கள் பணத்தினை ஏமாற்றி விடுவார்கள்.

அக்குறணை பல ஏழைப்பெண்கள் இந்த கூட்டத்திடம் மாட்டிக்கொண்டு, கடன்களை பெற்று இவர்களுக்கு பணத்தினை கொடுத்துள்ளனர்.

மேலும் ஒரு படியாக இந்த கயவர் கூட்டம், அவர்களிடம் ஏமாறும் நபர்களிடம் மேலும் பணங்கள் தருவதாக ஆசை வார்த்தை கூறி, உங்களுக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்களையும் இந்த ஏமாற்று திட்டத்திற்குள் கொண்டு வருமாறு வேண்டுகின்றனர். எனவே உங்களுக்கு மிக நம்பிக்கையான நபரே சிலவேளை உங்களை இந்த குழுவிடம் மாட்டிவிடலாம்.

எந்த தடயமும் இல்லாமல், சட்டத்தில் மாட்டிகொள்ளாமலும் மிக திறமையாக உங்கள் பணத்தினை பறிப்பதில் இவர்கள் வல்லவர்கள். முக்கியமாக Ez-Cash, M-Cash போன்ற பண பரிமாற்று முறைகளை இவர்கள் பயன்படுத்துகின்றார்கள்.

இறுதியாக:

எவ்விதத்திலும் இந்த குழுவிடம் மாட்டிகொள்ளாமல் இருப்பதே சிறந்தது. பணத்திற்கு ஆசைப்பட்டு இருப்பதனையும் இழந்துவிடாதீர்கள்.

பேராசை காரணமாக பல இலட்சங்களையும், ஆயிரங்களை இழந்த பல அக்குறணை மக்கள் இருகிக்கின்றார்கள். அவமானம்; காரணமாக எவரும் இந்த விடயங்களை வெளியே சொல்வதில்லை.

குறிப்பு : மேலே குறிப்பிடப்பட்டது ஒரு ஏமாற்று முறை மாத்திரமே. பல வித்தியாசமான முறைகளில் உங்கள் பணத்தினை திருடுவதற்கு இப்படிப்பட்ட பல குழுக்கள் இயங்குகின்றன, எனவே எப்போதும் விழிப்பாக இருங்கள்.

முடியுமானவரை இந்த விடயத்தினை அனைவரிடமும் வாட்ஸ்அப், பேஸ்புக் ஷேர் பண்ணுகள்.

வஸ்சலாம் -ஜசூர் மன்ஸில் for AkuranaToday-

Check Also

அக்குறணை வெள்ளப் பிரச்சினை பற்றிய எனது பார்வை

அண்மையில் (2023/12/07 மற்றும் 08 ஆம் திகதி) அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது பேசுபொருளாக மாறியிருப்பதை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் …

You cannot copy content of this page