கோரோனாவால் பாதிக்கும் வேலை, தொழில்துறைகள்

கொரோனா தொடர்பான அச்சம் உலகை விட்டு உடனடியாக நீங்கும் என்று எதிர்பார்க்க முடியாத சூழ்நிலையே இன்று உருவாக்கியுள்ளது.

குறிப்பாக  கொரோனா  அச்சம் காரணமாக முடக்கப்பட்டுள்ள சர்வதேச விமான போக்குவரத்து சேவையானது 2024 ஆம் ஆண்டுக்குப் பின்னரே வழமைக்குத் திரும்பும் என்று புதிய தகவல் ஒன்று   கூறுகின்றது. 

வைரஸ் அச்சம் காரணமாக உலகில் பல்வேறு நாடுகளிலும் ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் விமான போக்குவரத்து சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன .

இதேவேளை விமான ப்போக்குவரத்து சேவையுடன் தொடர்பு பட்ட பல்லாயிரக்கணக்கானோர் தொழில் வாய்ப்புக்களை இழந்து உள்ளனர்.

 இவற்றுக்கு மத்தியில் பெரும்பாலான நாடுகள் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான  சேவைகளுக்கு  தடை விதித்துள்ள நிலையில், உலக நாடுகள் பாரிய நிதி நெருக்கடிக்கு ஆளாகி உள்ளன.

உல்லாசப் பயணத்துறை, விமானபோக்குவரத்து ,பொருட்களை ஏற்றி இறக்கும்  நடவடிக்கைகள் என அனைத்து  சேவைகளுமே செயலிழந்து போய் உள்ளதால் அடுத்தகட்டமாக என்ன செய்வது என்ற ஏக்கமே சகல மட்டங்களிலும் தலைதூக்கியுள்ளது.

குறிப்பாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் நிலைமையை சமாளிக்க முடியாத நிலையில் தனது 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இவ்வாறு உலகின் பல்வேறு  நாடுகளிலும் பெரும் எண்ணிக்கையானோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையிலேயே மீண்டும் விமான சேவைகள் வழமையான நிலைமைக்கு திரும்ப, குறைந்தது நான்கு ஆண்டு காலம் நீடிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

இது ஒருபுறமிருக்க மற்றுமொரு அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது முதன்முதலாக கொரோனா தொற்றுக்குள்ளான நபர் ஒருவருக்கு மீண்டும் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள்  கூறுகின்றன.

Read:  ரணிலிடமும் புதிய தீர்வுகள் இல்லை!

அமெரிக்காவின் போஸ்டன் கல்லூரியின் உலக சுகாதார திட்ட இயக்குனர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். கொரோனா தொற்று ஏற்பட்டு குணமான ஒருவருக்கு மீண்டும் நோய் ஏற்படுமா ? என்ற கேள்வி பரவலாக உள்ளது. அதற்கு ‘ஆம் ‘ என்பதே தற்போதைய அதிர்ச்சியான பதில்  ஆகும்.

மேலும் அவர்களுக்கு ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் குறுகிய காலத்துக்கே காணப்படும் என்பது ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. எனவே கூடியவரை கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க சுகாதார விதிமுறைகளை பின்பற்றி வாழ்வதைத்  தவிர வேறு வழி இல்லை என்பதே யதார்த்தம்.

SOURCEவீரகேசரி பத்திரிகை