கொரோனா பற்றிய இன்றைய தகவல்கள் 16-03-2020

30,000 பிரித்தானிய பயணிகள் உடனடியாக வெளியேற உத்தரவு

பிரான்சிலுள்ள சுமார் 30,000 பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளதையடுத்து பிரான்சில் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது

மொத்தம் 212 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில்

கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் 08 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 212 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில் உள்ளனரென சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

11 பேர் மருத்துவமனையில் இருந்து தப்பியோட்டம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 11 பேர் அங்கிருந்து நைசாக தப்பி ஓட்டம் பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திட்டமிட்டவாறு உயர்தரப் பரீட்சை இடம்பெறும்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் தொடர்பில் பரவிய வதந்திகளை நிராகரித்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், A/L பரீட்சையை நவம்பர் மாதம் ஒத்தி வைக்க எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

ஒரே நேரத்தில் இரண்டு பயணிகள் மாத்திரமே

நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக முச்சக்கர வண்டிகளில் ஒரே நேரத்தில் இரண்டு பயணிகள் மாத்திரமே பயணிக்க கூடிய வகையில் மட்டுப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் திட்டமிட்டபடி என ஜப்பான் பிரதமர் உறுதி

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, திட்டமிட்டபடி டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை மாதத்தில் தொடங்கும் என்று உறுதியளித்துள்ளார்.

கொரோனாவால் திருமணத்திற்கு தடையில்லை

மக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டாலும் திருமண நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

சுகாதார சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு

இந்நிலையில், சுகாதார சேவை ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்படாது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

எல்லையை மூடிய ஜேர்மனி

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐந்து நாடுகளுடனான எல்லைக் கட்டுப்பாடுகளை மீண்டும் ஜேர்மனி அறிமுகபடுத்தியுள்ளது. அந்த வகையில் ஜேர்மனி இன்று (திங்கட்கிழமை ) காலை முதல் பிரான்ஸ், ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளுடன் எல்லைகளை மூடியுள்ளதாக, நேற்று நாட்டின் உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

கொரோனாவால் ஒரேநாளில் 368 பேர் பலி: இத்தாலி

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஒரேநாளில் 368 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டில் மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கையும் 21,157 இலிருந்து 24,747 ஆக உயர்ந்துள்ளது.

இன்று அரச விடுமுறை

நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்றைய தினம் அரச, வங்கி மற்றும் வர்த்தக விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

அனைத்து பள்ளிவாசல்களின் சொத்து விபரங்களை கோருகிறது அரசாங்கம்

திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத நிறுவனங்களின் அசையும் அசையா சொத்துகளின் விபரங்களும் திரட்டப்படும் என்கிறார் பணிப்பாளர் பைஸல் நாட்டிலுள்ள …

You cannot copy content of this page

Free Visitor Counters