புலமை பரிசில் எழுதும் மாணவர்களுக்கு நேர சலுகை

இம்முறை ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாளிற்கான கால எல்லையை 15 நிமிடங்களினால் அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் இதுவரையில் 45 நிமிடமாக இருநத கால எல்லை ஒரு மணி நேரமாக அதிகரித்துள்ளது.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி இம்முறை புலமை பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இரண்டாம் வினாத்தாளில் ஒரு கேள்விக்கான பதில்களை 4 இல் இருந்து மூன்றாக குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous articleஇராணுவ மயமாக்கலை நோக்கி இலங்கை பயணம் – 10 சர்வதேச மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கை  
Next articleவெளிநாடுகளில் தொழில் வாய்ப்பை இழந்துள்ள 10,000 இலங்கை தொழிலாளர்கள்