நீர்கொழும்பு அன்சார் ஹோட்டலில் நடந்தது என்ன ?

நீர்கொழும்பு அன்சார்‌ ஹோட்டல் வழமை போன்று‌ திங்கட்கிழமை. (9) ஆம்‌ திகதி இரவு நேரத்தில் மிக சுறுசுறுப்பாக இயங்கிக்‌ கொண்டிருந்தது.

அந்தசமயம் அங்கு இரண்டு வாகனங்களில் (வேன்)‌ சிங்கள மொழியில் பேசியபடி சிலர் வந்துள்ளார்கள்.‌

வந்தவர்கள் ஹோட்டலுக்கு உள்ளே இருந்து மதுபானம் பருகலாமா என கேட்டுள்ளனர்.

அத்துடன் இலங்கையில் மதுபானம்‌ அருந்த அனுமதி இருப்பதால்‌ இந்த ஹோட்டலினுள் மதுபானம்‌ பருக அனுமதிக்குமாறு கேட்டு தகராறினை ஆரம்பித்துள்ளனர்.

எனினும் இதற்கு ஹோட்டல் நிருவாகம் இடம்கொடுக்கவில்லை. எனினும் அன்சார்‌ ஹோட்டலுக்கு உள்ளே வைத்து, வந்தவர்கள்‌ மதுவினை‌ பருக முயன்றபோது, உரிமையாளரின்‌ சகோதரரான றிஸ்வான்‌ மதுவினை‌ அருந்த வேண்டாம்‌ என வலியுறுத்தியுள்ளார்‌.

இந்நிலையில்‌ பிரச்சினைப்படுத்திய நபர்கள் ரிஸ்வானை தாக்கிது மட்டுமல்லாது கத்தியினாலும்‌ குத்தியுள்ளார்கள்.

தனது சகோதரர் (தம்பி) தாக்கப்படுவதை கண்ட ஜிப்ரி (அன்சார்‌ ஹோட்டல்‌ உரிமையாளர்)‌ சம்பவத்தினை தடுக்க முயலும்போது அவரும் கத்தி குத்துக்கு ஆளாகியுள்ளார்.

துரதிஷ்டவசமாக அந்த ஹோட்டலில் பணிபுரியும் கெக்கிரவை பகுதியினை சேர்ந்த அசீஸ் என்பவருக்கும் வயிற்ருப்பகுதியில் கத்திக் குத்து இடம்பெற்று அவரது குடல் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தனை தொடந்து இரண்டு வேனிலும் வந்த நபர்கள் அந்த இடத்திலிருந்து தப்பியோடியுள்ளனர். அதில் ஒரு வேனினை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

விசாரணை தொடர்கின்ற நிலைமையில் அப்பகுதின் அமைதி கருதி இராணுவம், விமானப்படை, மற்றும் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

UPDATE:
18 வயதுடைய பெரியமுல்லைப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Read:  கர்ப்பிணி தாய்மார்களுக்கு அறிவிப்பு