அக்குறணை அரசியல் – சிந்தியுங்கள்! தீர்ப்பு உங்கள் கையில்!!

2020 கண்டி மாவட்ட தேர்தலைப் பொறுத்தவரையில் கட்சி சார்பற்ற நடுத்தர மக்கள் தேர்தல் விவகாரத்தில் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருப்பது கூடுதலானவர்களின் கருத்துக்களில் இருந்து புலனாகிறது. காரணம் மக்கள் கடந்தகால அரசியல்களில் அனுபவித்த கசப்பான உண்மைகளும், வேட்பாளர்களின் பொய்ப்பிரசாரங்களுக்கு ஏமாற்றமடைந்ததுமே முக்கிய காரணம்.

இந்த நாட்டில் கருத்துச் சுதந்திரம் எல்லோருக்கும் இருப்பதால் எனது தனிப்பட்ட கருத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். ஆனால் இது யாருக்கும் துணை போவதாகவோ, யாரையும் தூற்றவோ அல்லது பிரதேச வாதம் எனவோ யாரும் கருத வேண்டாம்.

அதாவது எமது அக்குரணையைப் பொறுத்த வரையில் கண்டி மாவட்டத்தில் அதிகப்படியான முஸ்லிம்கள் வாழும் ஒரு பிரதேசமாக எடுத்துக் கொண்டால் ஒரு வகையில் சரி என்பது எனது கருத்து. ஆனால் நாம் வாக்களிக்க வேண்டிய அல்லது ஆளுமையுள்ள, அனுபவமுள்ள அரசியல்வாதிகளை நாம் பட்டியலிடுவோம் என்றால் முதலாவதாக ரவூப் ஹக்கீம் அவர்களை எடுத்துக் கொள்வோம்.

இவரைப் பொறுத்த வரையில் உண்மையில் அரசியலில் நிறைந்த அனுபவமுடையவர் மட்டுமன்றி மூன்று மொழிகளிலும் மக்களின் பிரச்சனைகளை பாராளுமன்றத்தில் மற்றும் சர்வதேசத்தில் சரளமாக குரல் கொடுப்பதற்கு பேச்சாற்றல் நிறைந்த வல்லமை மற்றும் ஆளுமை உள்ளவர் என்பதை நான் ஒரு உண்மையான மனிதன் என்றவகையில் என்னால் மறுக்க முடியாது. ஆனால் இவருடன் கெளரவ MHA ஹலீம் அவர்கள் சேர்ந்திருப்பதுதான் “கன்ரோடு சேர்ந்த என்னவோ போன்றுள்ளது”. காரணம் பல தசாப்த காலம் பாராளுமன்றத்தில் இருந்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் ஒருமுறையாவது மக்களுக்காகவோ அல்லது அவருடைய தனிப்பட்ட தேவைகளுக்காகவோ எழுந்து பேசியதை யார்தான் கண்டுள்ளார்களோ…??

இருப்பினும் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களைப் பொறுத்தவரையில் அக்குறணை மக்கள் வாக்களித்துத்தான் அவர் பாராளுமன்றம் செல்லவேண்டும் என்பது முக்கியமில்லை காரணம் கண்டி மாவட்டத்தைப் பொறுத்தவரை அவருக்கான வாக்குகள் பல இடங்களில் இருந்தும் செலுத்தி அவர் தெரிவு செய்யப்படுவார் என்பதில் சந்தேகமில்லை. (இருப்பினும் அவருக்கு அக்குறணை மக்கள் வாக்களிக்க வேண்டாம் என நான் கூறவில்லை. காரணம் வாக்குரிமை ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட சுதந்திரம்)

அடுத்து எமது உரைப் பொறுத்தவரை அடுத்த ஆளுமையுள்ள தலைவர் என கிரகித்துச் சொல்வதானால் தவிசாளர் Isthihar Imadhudeen அவர்களைக் குறிப்பிடலாம் என்பது எனது கணிப்பீடு, காரணம் எமது ஊரைப் பொறுத்தவரை MHA ஹலீம் அவர்கள் பாராளுமன்றத்தில் இருந்து ஒன்றுமே செய்யாததைவிட இவர் வெறும் பிரதேச சபையில் இருந்து அதிகப்படியாகவே செய்துள்ளார் என்றால் நிச்சயமாக அது பக்கச்சார்பற்ற நடுத்தரமானவர்களைத் தவிர மற்றவர்களால் ஜீரணிக்க முடியாத உண்மையும் கூட.

எனவே இவரை நாம் பாராளுமன்றம் அனுப்பினால் இவர் பின் ஆசனக்காரர் தானே இவர் என்ன செய்து கிழிக்கெப்போகிறார் என்றெல்லாம் கேள்விகள் பரவிக்கொண்டிருப்பதை காணக்கூடியதாகவுள்ளது. அது உண்மையாக இருந்தாலும் பரவாயில்லை ரவூப் ஹக்கீம் அவர்களுடன் சேர்த்து Isthihar Imadhudeen அவர்களையும் அக்குரணையில் இருந்து நாம் அனுப்ப முயற்சி செய்வோமாக இருந்தால், அனுபவமுள்ள ரவூப் ஹக்கீம் அவர்கள் Isthihar Imadhudeen அவர்களின் விரைவான முன்னேற்றத்திற்கு நிச்சயமாக உதவி செய்வார் என்பதில் சந்தேகமில்லை. அது இருவரும் வெவ்வேறு கட்சிகளில் இருந்தாலும் பரவாயில்லை. காரணம் Isthihar Imadhudeen அவர்களை நாம் பாராளுமன்றம் அனுப்பினால் அடுத்த நாளில் இருந்து வேலைத்திட்டங்களை எதிர்பார்ப்பது பொருத்தமானதல்ல. ஏனெனில் பாராளுமன்றத்தில் தற்போதுள்ள பழைய முஸ்லிம் அமைச்சர்களுக்கே இப்போது முன்னுரிமை மற்றும் அமைச்சுப்பதவிகள் வழங்கப்படுவது சிந்திக்கவேண்டிய தருவாயில், ஒரு புதிய உறுப்பினரால் சாதிக்க முடியும் என எதிர்பார்ப்பதை நாம் மறந்து விட்டு, எதிர்வரும் 4 வருடங்களுக்காவது அவருக்கு பாராளுமன்ற அனுபவத்தை கற்றுக் கொள்ள ஒரு சந்தர்ப்பம் வழங்கினால் எப்படி? நாம் Isthihar Imadhudeen அவர்களை அனுப்பி வைப்பதில் ஏதும் ஆட்சேபணைகள் உண்டா? இப்போது அனுபவம் வாய்ந்த பழைய அரசியல்வாதிகளும் முதலில் அனுபவம் இல்லாமல்தான் இருந்திருப்பார்கள்?

இம்முறை ஒரு பொறுப்புள்ள ஒருவரை எமது ஊரிலிருந்து அனுப்பி வைப்போம் என மக்கள் நினைப்பது தவறான காரியமா? அப்படி அனுப்பினால் அடுத்த சமுதாயத்திற்க்காவது அவர் அனுபவசாலியாக செயல்படுவார் என்ற மனப்பான்மையை ஏன் நாம் மறந்து செயல்படுகிறோம். அப்படியில்லை என்றால் பல வருடங்கள் எந்தப்பயனுமின்றி பாராளுமன்றத்தில் இருந்ததாக கூறும் ஒருவரை மீண்டும் அனுப்பி ஆசனத்தை சூடாக்குவது நியாம்தானா என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

பிரத்தியேகமாக என்னையும் எனது குடும்பத்தையும் பொறுத்தவரையில் இதுவரை நாம் யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை நிலுவையில் வைத்து எந்தவொரு கட்சிக்கும் சார்பாகவோ அல்லது எதிராகவோ செயல்படாமல் சிந்தித்தவண்ணம எனது குடும்பத்தாறும் இதே நிலையில் தத்தளித்தவண்ணம் உள்ளோம்.

இருந்தாலும் எமது ஆழ்ந்த சிந்தனையில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் 29 கட்சிகளிலும், 435 வேற்பாளர்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய இரண்டு பேர்களை மட்டுமே இங்கு எமக்குப் பொருத்தமானவர்கள் என நினைத்து எமது குடும்பத்தின் முடிவை நிலுவையில் வைத்துள்ளோம்.

அதில் யார் ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, எதிர் கட்சியில் இருந்தாலும் சரி, பொதுமக்களாகிய நாம் எதை ஆளும் கட்சியாக தெரிவு செய்கிறோமோ மற்றவர் எதிர் கட்சியில் இருப்பார். எங்களுக்குத் தேவை முஸ்லிம் ஆசனம் மட்டுமே!

சிந்தியுங்கள்! தீர்ப்பு உங்கள் கையில்!!

Nuwara Gedara – 0773998676

Check Also

அனைத்து பள்ளிவாசல்களின் சொத்து விபரங்களை கோருகிறது அரசாங்கம்

திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத நிறுவனங்களின் அசையும் அசையா சொத்துகளின் விபரங்களும் திரட்டப்படும் என்கிறார் பணிப்பாளர் பைஸல் நாட்டிலுள்ள …

You cannot copy content of this page