ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த ஒருவருக்கு கொரோனா

இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 27​70 ஆக அதிகரித்துள்ளது.

​ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் இதுவரை 2103 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, தற்போதைய நிலையில் 656 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleக.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்கான அறிவிப்பு!
Next articleஅக்குறணை அரசியல் – சிந்தியுங்கள்! தீர்ப்பு உங்கள் கையில்!!