“முஸ்லிம்‌ நீத்திய” நூலின் ஆசிரியர் காலமானார்

“முஸ்லிம்‌ நீத்திய’ (முஸ்லிம்‌ சட்டம்‌) சிங்கள மொழி மூலமான நூலின்‌ ஆசிரியர்‌ ஜனாதிபத சட்டத்‌தரணி கருணாரத்ன ஹேரத்‌ நேற்று முன்தினம்‌ அனுராதபுரத்தில்‌ காலமானார்‌.

சட்டத்தரணி கருணாரத்ன ஹேரத்‌ அனுராதபுரத்தை பிறப்பிடமாகக்‌ கொண்டவர்‌. மாகோ மத்திய கல்லூரியில்‌ கற்ற இவர்‌, களனி பல்கலைக்‌ கழகத்தின்‌ பட்டதாரியாவார்‌.

அவர்‌ மனித உரிமைகள்‌ (2000) அதிகார பரவல்‌ மற்றும்‌ மாகாண சபைகள்‌ (2009) அரச காணிகள்‌ (2010) முஸ்லிம்‌ நீத்‌திய (2013) போன்ற நூல்களை வெளியிட்டுள்ளார்‌. முன்னணி சிங்களப்‌ பத்திரிகைகளில்‌ இவர்‌ தொடர்ச்சியாக அரசியல்‌ கட்டுரைகளை எழுதி வந்துள்ளார்‌.

கடந்த 2014 ஆம்‌ ஆண்டு அரசியலில்‌ பிரவேசித்த இவர்‌ அனுராதபுரம்‌ தேர்தல்‌ தொகுதியின்‌ ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளராக நியமிக்கப்பட்டதுடன்‌.

2015 ஆம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்‌தலின்‌ போது ஐ.தே.க. சார்பில்‌ அனுராதபுர மாவட்டத்தில்‌ போட்டியிட்டார்‌.

சமகாலத்தில்‌ முஸ்லிம்‌ சமூகமும்‌ இஸ்லாமிய சட்டமும்‌ பாரிய சவால்களுக்கும்‌ பல விமர்சனங்களுக்கும்‌ உட்‌ பட்டு வருகின்ற நிலையில்‌ இஸ்லாமிய சட்டம்‌ தொடர்பில்‌ இவர்‌ வெளியிட்டுள்ள. நூலானது பலரதும்‌ கவனத்தை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SOURCEவிடிவெள்ளி