மாடறுப்பு தடை விரைவில் – புத்தசாசன அமைச்சு

மாடுகள்‌ அறுப்பதற்கான தடை இன்னும்‌ சில மாதங்‌களில்‌ அமுலுக்கு வரவுள்ளது. இந்தத்‌ தடைக்கான சட்டவரைபு தற்போது சட்டமா அதிபருடன் கலந்துரையாடப்பட்டு வருவதாக பெளத்த சாசன, மதங்கள்‌ மற்றும்‌ கலாசார அமைச்சின்‌ செயலாளர்‌ பேராசிரியர்‌ கபில குணவர்தன தெரிவித்தார்‌.

நாட்டில்‌ மிருகவதை தடை செய்யப்பட வேண்டும்‌. குறிப்பாக மாடுகள்‌ அறுக்கப்படுவது தடைசெய்யப்படவேண்டும்‌ என கடந்த காலங்களில்‌ பெளத்த குருமார்களின்‌ அமைப்புகள்‌ அரசாங்கத்‌ இடம்‌ கோரிக்கை விடுத்திருந்தன. ஆர்ப்‌பாட்டங்களையும்‌ முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கதாகும்‌.

இந்தநிலையில்‌ மாடுகள்‌ அறுக்கப்படுவதற்கான தடையை வலியுறுத்தி 2020 ஆம்‌ ஆண்டு பிரதமர்‌ மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவைப்‌ பத்திரமொன்றினைச்‌ சமர்ப்பித்‌இருந்தார்‌. இதற்கு அமைச்சரவை அனுமதியும்‌ வழங்கிருந்தது.

மாடுகள்‌ இறைச்சிக்காக அறுக்கப்படுவது தடைசெய்யப்படுவதுடன்‌ இறைச்சி நுகர்வோருக்காக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.

மாடுகள்‌ அறுக்கப்படுவதால்‌ நாட்டின்‌ பாற்பண்ணையாளர்கள்‌ பெரிதும்‌ பாதிக் கப்பட்டு வருகிறார்கள்‌. இந்தத்‌ தடை பாற்பண்ணையாளர்களின்‌ பிரச்சினைகளுக்குத்‌ தீர்வாக அமையும்‌.

தற்போது இறைச்சிக்காக பசுமாடுகளும்‌, கன்றுகளும்‌ அறுக்கப்படுகின்‌றன. இதனால்‌ பாற்பண்ணையாளர்கள்‌ பொருளாதார பின்னடைவுக்குள்ளாகி வருகிறார்கள்‌ எனவும்‌ பேராசிரியர்‌ கபில குணவர்தன தெரிவித்தார்‌.

இதேவேளை வயதான மாடுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும்‌ அவர். கூறினார்‌.