மோட்டார் சைக்கிள் விபத்துக்களை குறைக்க சிறப்பு நடவடிக்கை

மோட்டார் சைக்கிள் விபத்துக்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக போக்குவரத்து காவல்துறையினரால் நான்கு நாள் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இன்று ஆரம்பமாகும் சிறப்பு நடவடிக்கை ஏப்ரல் 3 ஆம் திகதி முடிவடையும் என்றும் அவர் கூறினார்.

இந்த காலகட்டத்தில், மோட்டார் சைக்கிள் சாரதிகள் குறித்து கவனம் செலுத்த போக்குவரத்து பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை 8.3 மில்லியனாகும், அதில் 56 சதவீதம் மோட்டார் சைக்கிள்களாகும், எனவே மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.

கடந்த 24 மணிநேரத்தில் பதிவான வீதி விபத்துக்களினால் மொத்தம் எட்டுப் பேர் உயிரழந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். -வீரகேசரி பத்திரிகை-

Read:  குண்டு விவகாரம் : கைதான வைத்தியரை மன நல பரிசோதனைக்கு உட்படுத்த திட்டம்