கடந்த மாதம் வாகன பதிவுகள் அதிகரிப்பு

அந்நிய செலாவணியினை சேமிக்கும் நோக்கில் பயணிகள் போக்குவரத்து வாகன இறக்குமதி தடை காரணமாக கடந்த சில மாதங்களாக வாகன பதிவு நடவடிக்கைகள் மந்தநிலையில் இடம்பெற்றன.

எவ்வாறாயினும், கடந்த மாதம் வாகன பதிவு சிறிய அளவில் அதிகரித்துள்ளது.

உள்ளூரில் பொருத்தப்படும் சிறிய ரக வகையிலான உழவு இயந்திரங்கள் போன்றவற்றின் பதிவுகள் காரணமாகவே ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பெப்ரவரி மாதம் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

பெப்ரவரி மாதத்தில் மொத்தமாக 3,558 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டன.

ஆனால், ஒரு வருடத்திற்கு முன்னர் 31,402 பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

அதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றிற்கு முன்னர் இருந்த பொருளாதார நிலை இலங்கையில் ஏற்படும் போது, பயணிகள் போக்குவரத்து வாகன இறக்குமதி தடைகள் அகற்றப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page

Free Visitor Counters