போர்வையால் கழுத்தை நெரித்து கணவனை கொலை செய்த மனைவி – கொஸ்வத்தயில் சம்பவம்

மனைவியால் கழுத்து நெறிக்கப்பட்டு கணவன் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் கொஸ்வத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கணவன் மனைவிக்கிடையில் நீண்ட நாட்களாக காணப்பட்ட முரண்பாடுகளே கொலைக்கான காரணம் என்று பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இக் கொலை தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொஸ்வத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிமெட்டியான மேற்கு – லுணுவில பிரதேசத்தில் நேற்று ஞாயிறுக்கிழமை இந்த கொலை இடம்பெற்றுள்ளது. 

சந்தேகநபரான 38 வயதுடைய குறித்த பெண் , 44 வயதுடைய தனது கணவனை போர்வையால் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளமை பொலிஸாரின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதோடு , அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நீண்ட காலமாக அவருக்கும் கணவனுக்குமிடையில் காணப்பட்ட முரண்பாடுகளே கொலைக்கான காரணம் என்று தெரியவந்துள்ளது.

குறித்த தம்பதியினருக்கு 3 பிள்ளைகள் காணப்படுவதோடு அவர்களை பொலிஸார் பொறுப்பேற்று சிறுவர் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். கொஸ்வத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்றார்.-வீரகேசரி பத்திரிகை-

Previous articleசுயஸ் கால்வாய் கப்பல் மீட்கப்பட்டு மிதக்கும் நிலைக்கு கொண்டுவரப்பட்டது!
Next articleகடந்த மாதம் வாகன பதிவுகள் அதிகரிப்பு