கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2768ஆக அதிகரித்துள்ளது.குறித்த நால்வரும் சென்னையில் இருந்து இலங்கை வந்தவர்கள் எனவும் குறித்த பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 654 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, குறித்த தொற்றிலிருந்து 2103 பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.கொரோனா தொற்றுக்குள்ளாகி இலங்கையில் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

Previous articleகண்டியில் டயமன்ட் சின்னம் ஒரு ஆசனத்தினை பெறும் – இஸ்திஹார்
Next articleஇன்றைய தங்க விலை (25-07-2020) சனிக்கிழமை