முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் திருட்டுகள் அதிகரிப்பு – பொலிஸார் எச்சரிக்கை

பண்டிகை காலப் பகுதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகள் தொடர்பான திருட்டு சம்பவம் அதிகரித்து வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

அதன்படி பொகவந்தலாவை மற்றும் மட்டக்குளி பகுதிகளில் இரு முச்சக்கர வண்டிகளும், குருணாகல் பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்களும் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்லும்போது மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

-வீரகேசரி பத்திரிகை-

Read:  இலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் - Today Srilanka Gold Price