மதுபோதையில் சாரதி – வாழ்நாள் வாகனம் செலுத்த தடை

தெல்தோட்டை கண்டிக்கு இடையில்‌ சேவையில்‌ ஈடுபட்டு வந்த தனியார்‌ பயணிகள்‌ பஸ்‌ ஒன்றின்‌ சாரதி கடமை நேரத்தில்‌
மது போதையில்‌ இருந்தமை உறுதியானதையடுத்து கண்டி நீதிமன்ற நீதிவான்‌ சம்பத்‌ கமகேயினால்‌ வாகனம்‌ செலுத்துவதற்கு வாழ்நாள்‌ தடை விதிக்கப்பட்டது.

குறித்த சாரதி சில தினங்களுக்கு முன்னர்‌ மாலை வேளையில்‌ தெல்‌தோட்டை நகரிலிருந்து பயணிகளை ஏற்றி கொண்டு கண்டி நோக்கி சென்று கொண்டிருந்த சந்தர்ப்பத்தில்‌ கலஹா பொலிஸாரினால்‌ மேற்கொள்ளப்பட்ட வீதிச்‌ சோதனை நடவடிக்கையின்போது குறித்த சாரதி நிறைந்த மது போதையுடன்‌ காணப்பட்டுள்ளார்‌

இதையடுத்து குறித்த சாரதிக்கு எதிராக கலஹா பொலிஸார்‌ கண்டி நீதிமன்‌றத்தில்‌ வழக்கு தொடுத்ததுடன்‌ வழக்கு விசாரணைகள்‌ கடந்த செவ்வாய்க்‌ கிழமை (23) இடம்பெற்றன.

இச் சந்தர்ப்பத்தில்‌ சந்தேக நபரான சாரதி, பயணித்த பாதையில்‌ அமைத்‌துள்ள பேராபத்து நிறைந்த பாரிய பள்‌ளங்கள்‌ அமைந்துள்ளமை தொடர்பாக நீதிமன்றத்தின்‌ கவனத்துக்கு பொலிஸார்‌ கொண்டு வந்தனர்‌. இதையடுத்தே குறித்த சாரதிக்கு வாழ்நாள்‌ முழுவதும் வாகன அனுமதிபத்திரத்துக்கான தடை விதிப்பதாக உத்தரவிட்டார்‌. – மெட்ரோ நியூஸ் –

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page

Free Visitor Counters