5-16 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு இஸ்லாம், அரபு மாத்திரம் கற்பிக்கும் மத்ரஸாவுக்கு தடை

ஐந்து வயது தொடக்கம் 16 வய­து­க்கு இடைப்­பட்ட மாண­வர்­க­ளுக்கு இஸ்லாம் மதத்­தையும், அரபு மொழி­யையும் மாத்­திரம் போதிக்கும் வகையில் உரு­வாக்­கப்­பட்­டுள்ள அனைத்து மத்­ர­ஸாக்­களும் தடை­செய்­யப்­படும். என்­றாலும் 16 வய­துக்கு மேற்­பட்­ட­வர்கள் கல்­வி ப­யிலும் மத்ர­ஸாக்கள் தடை­செய்­யப்­ப­டமாட்டாதென பொது மக்கள் பாது­காப்பு அமைச்சர் சரத் வீர­சே­கர நேற்று சபையில் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை நடை­பெற்ற உயிர்த்­த­ஞா­யி­று­தின தாக்­கு­தல்கள் தொடர்­பி­லான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் விசா­ரணை அறிக்கை குறித்த சபை ஒத்­தி­வைப்­பு­வேளை பிரே­ரணை மீதான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய எதிர்க்­கட்சி உறுப்­பினர் மரிக்கார் எம்.பி, மத்­ர­ஸாக்­க­ளுக்­கான தடை குறித்து தெரி­வித்த கருத்­துக்கு பதி­ல­ளிக்கும் போதே அவர் இவ்­வாறு கூறினார். அவர் மேலும் தெரி­வித்த­தா­வது,

அனைத்து மத்­ரஸா பாட­சா­லை­க­ளுக்கும் தடை­வி­திக்­கப்­ப­டு­மென நான் ஒரு­போதும் கூற­வில்லை. எந்­த­வொரு நாட்­டிலும் ஒரு தேசிய கல்­விக்­கொள்­கை­யுள்­ளது. எமது நாட்டில் 5 – 16 வய­து ­வ­ரை­யான காலத்தில் தேசிய கல்வி கொள்­கையின் கீழே அனைத்து மாண­வர்­களும் கல்வி கற்க வேண்டும். 5 – 16 வய­துக்கும் இடைப்­பட்ட மாண­வர்­க­ளுக்கு இஸ்­லா­மிய மதம் மற்றும் மொழியை மாத்­திரம் கற்­பிக்கும் மத்­ரஸா பாட­சா­லைகள் இருந்தால் அவற்றை தடை­செய்வேன் என்றே கூறினேன். அதற்கு முஸ்லிம் தலை­வர்கள் மற்றும் முஸ்லிம் அமைப்­பு­களின் அனு­மதி கிடைக்­கப்­பெற்­றுள்­ளது.

16 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­க­ளுக்கு மதத்தை மாத்­திரம் போதிக்கும் மத்­ரஸா பாட­சா­லைகள் அதி­க­ளவில் உள்­ளன. அவற்றில் மௌலவி­யாக விரும்­பு­ப­வர்கள் கல்­வி­ கற்க முடியும். என்­றாலும் 5 – 16 வய­துக்கும் இடைப்பட்ட மாணவர்கள் மதம் மற்றும் அரபு மொழியை மாத்திரம் போதிக்கும் பாடசாலைகள் தடைசெய்யப்படும். இவை தேசிய கல்விக்கொள்கைக்கு முரணானதாகும் என்றார்.- Vidivelli (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page

Free Visitor Counters