வாடகை வாகனங்களை விற்பனை செய்யும் கும்பல்

வாடகைக்கு வாகனங்களைப் பெற்று அவற்றுக்கான போலி ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் , வாடகைக்கு பெறும் வாகனங்களுக்கான போலி ஆவணங்களை தயாரித்து அவற்றை விற்பனை செய்து வந்த குறித்த சந்தேக நபர்கள் நால்வரும் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குருணாகலைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர்கள் நீண்ட நாட்களாக இவ்வாறு மோசடி செய்துள்ளதாக விசாரணைகளின்போது தெரிய வந்துள்ளது.

மேலும் இவர்களால் கொள்ளையிடப்படும் வாகனங்களின் இலக்க தகடுகளை மாற்றி அவற்றையும் விற்பனை செய்தும் வந்துள்ளனர். சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர் என்றார். ( (செ.தேன்மொழி மெட்ரோ செய்திகள்)

Read:  இலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் - Today Srilanka Gold Price