கண்டியில் டயமன்ட் சின்னம் ஒரு ஆசனத்தினை பெறும் – இஸ்திஹார்

01. பொதுத்‌ தேர்தலில்‌ என்‌ சுயேட்சைக்‌ குழுவில்‌ களமிறங்கியுள்‌ளர்கள்‌?

கண்டி மாவட்டத்தைப்‌ பொறுத்‌தவரையில்‌ 2000 ஆண்டு முதல்‌ தொடர்ச்சியாக மூன்று முஸ்லிம்‌ பாராளுமன்ற உறுப்பினர்களை நாம்‌ பெற்று வந்தோம்‌. இதே வேளை 2010 ஆம்‌ ஆண்டு நான்கு முஸ்லிம்‌ பாராளுமன்ற பிரதிநிதித்துவங்கள்‌ கிடைத்தன. அது 2015 இல்‌ இரண்டு பிரதிநிதித்துவமாகக்‌ குறைவடைத்‌
தது. கண்டி மாவட்ட முஸ்லிம்‌ வாக்காளர்களின்‌ எண்ணிக்கையின்‌ அடிப்‌படையில்‌ எம்மால்‌ மூன்று முஸ்லிம்‌ பாராளுமன்ற உறுப்பினர்களைப்‌ பெற்றுக்‌ கொள்ள முடியும்‌.

மூன்று முஸ்லிம்‌ பாராளுமன்ற உறுப்பினர்களைப்‌ பெற்றுக்‌ கொள்‌வதுதான்‌ எமது முக்கிய நோக்கமாக இருக்கிறது.

அதேநேரம்‌ கண்டி மாவட்டத்தைப்‌ பொறுத்த மட்டில்‌ 1960 முதல்‌ தன்னுடைய மரணம்‌ வரை சிறந்த ஆளுமையைக்கொண்டு இப்பகுதியில்‌ மூவின மக்களையும்‌ ஒற்றுமையுடன்‌ வழிநடாத்தியவர்‌ மர்ஹ(ம்‌ ஏ.சி.எஸ்‌.ஹமீட்‌ அவர்கள்‌. அந்த வகையில்‌ கண்டி மாவட்டத்தில்‌ சிறந்த ஆளுமை கொண்டவர்களையும்‌ தெரிவுசெய்‌யப்பட வேண்டுமென்ற நோக்கமும்‌ இருக்கிறது.

02. முஸ்லிம்‌ வாக்குகள்‌ இதன்‌ மூலம்‌ சிதறடிக்கப்படுமல்லவா?

நான்‌ ஏற்கனவே கூறியது போல மூன்று பிரதிநிதிகளைத்‌ முஸ்லிம்‌ வாக்குகளிலிருந்து தெரிவு செய்ய வேண்டிய நிலையில்‌ அக்கட்சியி லிருந்து(.ஐ.தே.க) இரண்டு வேட்பாளர்களே களமிறக்கப்பட்டுள்ளார்கள்‌.

அதே போன்று கடந்த காலங்களில்‌முஸ்லிம்கள்‌ பெரும்பான்மைபான்‌மையாக ஆதரித்த கட்சி தேர்தல்‌ வேட்பு மனு தாக்கல்‌ செய்வதற்கு ஓரிரு வாரங்களுக்கு முன்பு எதிர்பாராத விதமாக இரண்டாகப்‌ பிளவுபட்‌டது. வாக்குகளைப்‌ பிரிப்பவர்கள்‌ சிதறடிப்பவர்கள்‌ நாங்களல்ல ஐக்கிய தேசியக்‌ கட்சியினரேயாகும்‌. தங்‌
களிடத்திலே இந்தக்‌ குறைகளை வைத்துக்‌ கொண்டு இந்த இருசாராரும்‌ எங்களைக்‌ குறைகூறுவது கேலிக்கைக்குரிய விடயமாகும்‌.

அதாவது எங்களால்‌ ஓர்‌ ஆசனத்தைப்‌ பெறுவதற்குத்‌ தேவையானது 40 முதல்‌ 45 ஆயிரம்‌ வாக்குகளே. கண்டி மாவட்டத்தில்‌ இம்முறை ஓர்‌ இலட்‌சத்து 25 ஆயிரம்‌ முஸ்லிம்‌ வாக்குகள்‌ அளிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது 40 அல்லது 45 ஆயிரம்‌ வாக்‌குகளை நாம்‌ பெற்றுக்கொண்டால்‌ மேலும்‌ இரு உறுப்பினர்களைத்‌
தெரிவு செய்வதற்கான முஸ்லிம்‌ வாக்குகள்‌ மீதமிருக்கின்றன. ஐக்கிய தேசியக்‌ கட்சியினாலே வாக்குகள்‌ இரண்டாகப்‌ பிரிக்கப்பட்டுள்ளன. ஆகவே இந்தப்‌ பிரிவுக்கு ஐக்கிய தேசிய கட்சியின்‌ அபேட்சகர்களே பதில்‌ சொல்ல வேண்டும்‌ இந்த சிதறடிப்புக்கும்‌ எமக்கும்‌ எந்த சம்பந்தமுமில்லை.

03. ஏன்‌ நீங்கள்‌ பொது ஜன பெரமுனவில் (SLPP) போட்டியிடவில்லை? உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்‌லையா?

பொது ஜன பெரமுனவில்‌ இணைந்து கொள்ள வேண்டுமென வேட்புமனுத்‌ தாக்கலின்‌ போது நாங்கள்‌ கோரவில்லை. பொது ஜன பெரமுனைவப்‌ பொறுத்தமட்டில்‌ கண்டி மாவட்டத்தில்‌ பொது ஜனபெரமுன உறுப்பினர்‌ ஒருவர்‌ தெரிவு செய்யப்படவேண்டுமென்றால்‌ இப்போதுள்ள நிலையில்‌ 70 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெறவேண்டும்‌. கசப்பாக இருத்தாலும் ‌கண்டி மாவட்டத்தில்‌ பொது ஜனபெரமுனவுக்கான ஆதரவு மிகவும்‌ குறைவாக இருக்கிறது. இந்நிலையில்‌ கண்டி மாவட்டத்தில்‌ 70 ஆயிரத்‌துக்கும்‌ மேற்பட்ட வாக்குகளைப் பெறுவது கடினமாக இருக்கும்‌. அதனால்‌ இம்முயற்சியில்‌ ஈடுபடவுமில்லை.

நாம்‌ சுயாதீனமாகப்‌ போட்டியிடுவதாக கடந்த ஜனவரி மாதம்‌ தீர்மானித்தோம்‌.

எனவே யாரிடமிருந்தும்‌ எந்தக்கட்சியிடமிருந்தும்‌ ஆசனத்தைப்‌ பெறுவதற்கு எதிர்பார்க்கவில்லை. கலந்துரையாடல்களின்‌ பின்பு எடுக்கப்பட்ட முடிவு இது அதேவேளை அக்குறணையில்‌ 10 வருடங்களுக்கு மேலாக கடந்த தேர்தலிலும்‌ நாம்‌ சுயாதீனமாகவே போட்டியிட்டோம்‌ என்பதைக்‌ குறிப்பிட விரும்புகிறேன்‌.

04. உங்களது வெற்றி வாய்ப்பு எந்‌தளவில்‌ உள்ளது?

வெற்றி வாய்ப்பு தொடர்பில்‌ நான்‌ இந்நேர்காணலை வழங்கிக்‌கொண்டிருக்கும்‌ சந்தர்ப்பத்தில்‌ விசேடமாக ஹாரிஸ்பத்துவ தேர்தல்‌ தொகுதியில்‌ கிராமங்களில்‌ ஏனைய கட்சிகளை விட டயமன்ட்‌ சின்னத்‌ துக்கு மதிப்பும்‌ மரியாதையும்‌ இருக்‌கிறது. உண்மையிலே எங்களுடன்‌ போட்டி போடக்கூடிய அரசியல்வாதிகளைப்‌ பொறுத்தமட்டில்‌ அவர்கள்‌ 20 வருடங்களுக்கும்‌ மேலாக அரசியல்‌ அனுபவம்‌ உள்ளவர்கள்‌. பாராளுமன்‌றத்தைப்‌ பிரதிநிதித்துவம்‌ செய்வதவர்கள்‌. அவர்களுக்கு டயமன்ட்‌ சின்னம்‌ சவாலாக அமைந்துள்ளது என்றால்‌ அது மிகையாகாது.

அதே போல்‌ ஹாரிஸ்பத்துவ தொகுதிக்கு வெளியில்‌ கண்டி மாவட்டத்தில்‌ தமிழ்‌ பேசும்‌ மக்கள்‌ இருக்கும்‌ ஊர்‌களிலும்‌ டயமன்ட்‌ சின்னம்‌ தனது இருப்பினைத்‌ தக்கவைத்துக்‌ கொண்‌டுள்ளது. ஒட்டுமொத்தமாக எதிர்‌வரும்‌ தேர்தலில்‌ டயமன்ட்‌ சின்னம்‌ ஆசனமொன்றினைப்‌ பெற்றுக்‌ கொள்ளும்‌ என்பதே இன்றைய களநிலையாகும்‌.

05. கண்டி மாவட்டத்தில்‌ முஸ்லிம்‌ பிரதிநிதித்துவம்‌ பாதுகாக்கப்படுமா?

இந்தத்‌ தேர்தலில்‌ ஐக்கிய தேசியக்‌ கட்சி இரண்டாகப்‌ பிரிந்ததனால்‌ உண்மையிலே ஒரு பாரதூரமான விளைவு ஏற்படலாம்‌ என்ற ஐயமிருக்கிறது. இந்நிலையில்‌ முஸ்லிம்‌ பிரதிநிதித்துவத்தைப்‌ பாதுகாப்பதற்கு ஆகக்குறைந்த வாக்குகளில்‌ பாதுகாப்பதற்கு ஒரே வழி டயமன்ட்‌ சின்னத்துக்கு வாக்களிப்பதாகும்‌. அந்த வகையில்‌ பிரசாரத்தை முழு வகையில்‌ நாம்‌ முன்னெடுத்துச்செல்‌கிறோம்‌. இந்நிலையில்‌ முஸ்லிம்‌ பிரதிநிதித்துவம்‌ பாதுகாக்கப்படும்‌ என்ற நம்பிக்கையுண்டு.

06. முன்னாள் அமைச்சர் ஹலீமின் பிரதேசத்தை சேர்ந்த்த உங்களால்‌ ஏன்‌ அவருடன்‌ இணைந்து செயற்பட முடியாமல் போனது?

அவருடன்‌ இணைந்து செயற்‌பட முடியாது என்று நான்‌ கூறவிரும்‌பவில்லை. அவர்‌ ஒரு மூத்த அரசியல்‌ தலைவர்‌ என்ற்‌ ரீதியில்‌ அவர்தான்‌ என்னிடம்‌ வேலை வாங்கியிருக்க வேண்டும்‌. அவருடன்‌ இணைந்து செயற்படுவதற்கு நான்‌ தயாராக இருந்தேன்‌. இருந்தாலும்‌ அவர்‌ பக்கத்திலிருந்து எனக்கு எவ்வித அழைப்பும்‌ கிடைக்கவில்லை எனபதுதான்‌ உண்மையாகும்‌.

07. உங்களது கொள்கைத்‌ திட்‌டங்கள்‌ என்ன?

தற்போதைய அரசியல்‌ கலாசாரம்‌ மாற வேண்டும்‌. அதே போன்று அரசியல்‌ வியாபாரமாக அல்லாது சமூகத்தை மையமாகவைத்து சமூகத்தை சிறிப்பாக வழிநடாத்தக்கூடிய தலைமைத்துவம்‌ உருவாக்கப்பட வேண்டும்‌. அதேநேரம்‌ கண்டி மாவட்‌டத்திலிருந்து சிறந்த தலைமைத்‌ துவம்‌ உருவாக்கப்பட வேண்டும்‌. இதுவே எமது கொள்கைத்திட்டம்‌.

அத்தோடு இளைஞர்‌. யுவதிகளுக்கு சுயவேலைத்‌ திட்டம்‌ மற்றும்‌ அரச வேலைவாய்ப்புகளைப்‌ பெற்றுக்‌கொடுப்பதும்‌ எமது திட்டங்களாகும்‌.

08. அக்குறணை பிரதேச சபைத்‌ தலைவராக எத்தகைய சேவைகளைச்‌ செய்துள்ளீர்கள்‌?

அக்குறணையில்‌ முக்கிய பிரச்‌சினையாக காணப்பட்ட திண்மக்‌ கழிகற்றலுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2௦ வருடகாலமாக அக்குறணையில்‌ நகர்புறத்தில்‌ மழை காலங்‌களில்‌ குப்பைகள்‌ மலை போன்று காட்சியளித்தன. துர்நாற்றம்‌ வீசியது. இந்த குப்பைகளைக்‌ கொண்டு சென்று கொட்டும்‌ கிராமமும்‌ ஈக்‌களினால்‌ மூடப்பட்டிருந்தது. அங்‌கிருந்த பாலர்‌ பாடசாலை இயங்க முடியாதிருந்தது. இப்‌ பிரச்சினையால்‌ அங்குள்ள மக்கள்‌ அவதிப்பட்டுக்‌ கொண்டிருந்தனர்‌. தமது அன்றாட வாழ்க்கையிலும்‌ பல சிரமங்களை அனுபவித்தார்கள்‌. கட்சி அரசியலில்‌ ஈடுபடுபவர்கள்‌ கடந்த காலங்களில்‌ இப்‌ பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்‌ தருவதாகக்‌ கூறியே வாக்குகளைப்‌ பெற்றுவந்தார்கள்‌.

ஆனால்‌ பதவிக்கு வந்ததும்‌ அம்மக்கள்‌ பற்றி கவலைப்படவில்லை. நாம்‌ சுயாதீனகுழு என்ற வகையில்‌ இதற்கான, தீர்வுக்கான செயற்திட்டத்தை முன்‌னெடுத்தோம்‌. மத்திய மாகாணத்திலுள்ள உள்ளுராட்சி சபையின்‌ முதல்‌ வேலைத்திட்டமாக வெற்நிகரமாக, மிக்குறுகிய காலத்தில்‌ முன்னெடுக்கமுடிந்தது. இதனையடுத்து அக்குறணை நகர்ப்புறம்‌ மற்றும்‌ குப்பை கொட்டப்பட்டு வந்த கிராமத்தைச்‌ சேர்ந்த மக்கள்‌ குப்பைகளிலிருந்தும்‌ பாதுகாப்புப்பெற்றுள்ளனர்‌.

அக்குறணை பிரதேச சபை உறுப்‌பினர்களுக்கு அபிவிருத்தி பணிகளுக்காக ஒருவருக்கு 60 ஆயிரம்‌ ரூபாவே ஒதுக்கப்பட்டது. 2018 களில்‌ இத்நிலைமை இருந்தது. நான்‌ பிரதேச சபைத்தலைவராகப்‌ பதவியேற்றதும்‌ இந்நிதி ஒதுக்கீட்டினை ஒரு உறுப்பினருக்கு 2020 இல்‌ 5 இலட்சம்‌ ரூபா வரையில்‌ நிதி ஒதுக்கப்படுகிறது. எமது வருமானங்கள்‌ அதிகரித்துள்‌ளன. பிரதேச சபையின்‌ சேவைகள்‌ பற்றி பள்ளிவாசல்கள்‌ மூலமாகவும்‌, ஏனைய மதத்தலங்கள்‌ மூலமாகவும்‌ தலைவர்‌ என்ற வகையில்‌ தெளிவூட்டல்‌ நிகழ்வுகளை நடாத்தி வருகிறேன்‌.

அதனடிப்படையில்‌ பொது மக்கள்‌ பிரதேச சபைக்கு வந்து சேவைகளைப்‌ பெற்றுக்‌ கொள்வதை அவதானிக்க முடிகிறது. பெண்களுக்கான தையல்‌ பயிற்சி வகுப்புகள்‌ மாணவர்‌களுக்கான கருத்தரங்குகள்‌, வீட்டுத்‌தோட்டங்கள்‌ ஊக்குவிக்கும்‌ நிகழ்ச்சி போதைப்‌ பொருளை தடுப்பதற்‌கான நிவாரண நிகழ்ச்சிகள்‌ என பல
கருத்தரங்குகள்‌ செயற்திட்டங்கள்‌ தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்‌டன. அக்குறணையில்‌ சிகரட்‌ விற்பனையை தடைசெய்யும்‌ வகையில்‌ வியாபாரிகள்‌ தெளிவுபடுத்தப்பட்‌டனர்‌. இத்திட்டம்‌ இன்று சிறப்பான திட்டமாக மாறியுள்ளது.

அக்குறணை நகரை அலங்கரிப்பதற்கு மரங்கள்‌ நடும்‌ வேலைத்திட்‌டமும்‌ முன்னெடுக்கப்பட்டது. மதத்‌தலங்களுக்கு விஜயம்‌ செய்து மதத்‌தலைவர்களைச்‌ சந்தித்து நல்லுறவினைப்‌ பேணும்‌ வேலைத்திட்டமும்‌ முன்னெடுக்கப்பட்டது. பிரதேசத்‌திலுள்ள இளைஞர்‌, யுவதிகளுக்கு சுயவேலை வாய்ப்புக்கான செயலமர்‌
வுகளும்‌ நடத்தப்பட்டன. இவ்வாறு பிரதேச சபை மக்களுக்கு மிகவும்‌ நெருக்கமான சபையாக மாற்றிமைக்கப்‌பட்டுள்ளது.

09. உங்களைய்‌ பற்றிய குறிப்பொன்று?

நான்‌ அக்குறணை சாஹிரா தேசிய பாடசாலையில்‌ கற்றேன்‌. அக்குறணை வை.எம்‌.எம்‌.ஏ.யின்‌ பொதுச்‌ செயலாளராக 2 வருடங்கள்‌ கடமையாற்றினேன்‌. அக்குறணை சாஹிரா தேசிய பாடசாலையின்‌ பழைய மாணவர்‌ சங்க பொருளாளராக 5 வருடங்கள்‌ கடமையாற்றியுள்ளேன்‌. அதன்‌ தலைவராக இரு வருடங்கள்‌ இருந்துள்ளேன்‌. ஊரின்‌ நலன்புரிச்சங்கங்களுடன்‌ நெருங்கிய தொடர்பு கொண்டு சமூக சேவைகளில்‌ ஈடுபட்டுள்ளேன்‌.

அதனைத்‌ தொடர்ந்து வியாபாரம்‌ ஒன்றினை ஆரம்பித்து குறுகிய காலத்தில்‌ அதனை நிறுவனமாக மாற்றியமைத்து இன்று பல நிறுவனங்களின்‌ நிறைவேற்றுப்‌ பணிப்பாளராக இருந்து கொண்டிருக்கிறேன்‌. 2010 அளவில்‌ எமது ஊரின்‌ கல்வியாளர்கள்‌, துறைசார்‌ நிபுணர்களின்‌ கலந்துரையாடல்‌ ஒன்றின்‌ மூலமாகவே எனது அரசியல்‌ பிரவேசம்‌ நடந்தது. நான்‌ விருப்பத்துடன்‌ அரசியலில்‌ ஈடுபடவில்லை என்றாலும்‌ நான்‌ மனப்பூர்வமாக அரசியலில்‌ ஈடுபட்டு வருகிறேன்‌.

மிகக்குறுகிய காலத்தில்‌ அரசியல்‌ ரீதியான ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளேன்‌. நீதிக்கும்‌ அபிவிருத்திக்குமான மக்கள்‌ அமைப்பு மூலமே அரசியலுக்குள்‌ உள்வாங்கப்பட்டேன்‌. எனது மக்களுக்கும்‌ பிரதேசத்துக்கும்‌ உதவும்‌ வகையில்‌ செயற்படுகிறேன்‌. ஊர்மக்களின்‌ வேண்டுகோளுக்கிணங்கவே தேர்தலில்‌ களமிறங்கியுள்ளேன்‌. டயமன்ட்‌ சின்னம்‌ ஓர்‌ ஆசனத்தைப்‌ பெறும்‌ என்பதே எனது எதிர்பார்ப்பு.

எதிர்வரும்‌ பாராளுமன்றத்‌ தேர்தலில்‌ அக்குறணை பிரதேச சபைத்‌ தலைவர்‌ இஸ்‌திஹார்‌ இமாமுதீன்‌ டயமன்ட்‌ சின்னத்தில்‌ சுயேட்சைக்‌ குழுவில்‌ போட்டியிடுகிறார்‌. அக்குழுவின்‌ முதன்மை வேட்பாளர்‌ இவராவார்‌. 2018 ஆண்டு நடைபெற்ற அக்குறணை பிரதேச சபைத்‌ தேர்தலில்‌ இவர்‌ நீதிக்கும்‌, அபிவிருத்திக்குமான மக்கள்‌ அமைப்பு (PMJD) என்ற பெயரில்‌ சுயேட்சைக்‌ குழுவில்‌ போட்டியிட்டு வெற்றியீட்டியதையடுத்து பிரதேச சபையின்‌ பொது ஜன பெரமுன கட்சியும்‌, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும்‌ இவாது சுயேட்சை அமைப்பும்‌ இணைந்து ஆட்சி அமைத்ததனை அடுத்து இஸ்திஹார் இமாதுதீன் அக்குறணை பிரதேச சபையின்‌ தலைவரானார்‌. எதிர்வரும்‌ பொதுத்தேர்‌தலில்‌ டயமன்ட்‌ சின்னத்‌ சுயேட்சைக்குழுவில்‌ முதன்மை வேட்பாளராகப்‌ போட்டியிடும்‌ இவர்‌ விடிவெள்ளிக்கு வழங்கிய நேர்காணல்‌

Check Also

அக்குறணை வெள்ளப் பிரச்சினை பற்றிய எனது பார்வை

அண்மையில் (2023/12/07 மற்றும் 08 ஆம் திகதி) அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது பேசுபொருளாக மாறியிருப்பதை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் …

Free Visitor Counters