அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: பொலிஸ் அதிகாரி உட்பட 10 பேர் பலி! (வீடியோ)

அமெரிக்காவில் கொலராடோ மாகாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி உட்பட 10 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் கொலராடோ மாகாணத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் மர்ம நபர் சரமாரி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் சரமாரியாக பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ஒரு பொலிஸ் அதிகாரி பலியானார். மொத்தமாக 10 பேர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.

AFP photo
துப்பாக்கி சூட்டை நடத்தியதாகக் கூறப்படும் சந்தேக நபர் காயங்களுடன் மீட்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஏன் துப்பாக்கி சூடு நடத்தினார் என்று விவரங்கள் வெளியாகவில்லை. இதற்கான காரணம் குறித்து கைது செய்யப்பட்ட நபரான இளைஞரிடம் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த வாரம் அமெரிக்காவின் அட்லாண்டாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 8 பேர் கொல்லப்பட்ட நிலையில், மீண்டும் அதேபோன்ற சம்பவம் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.