புதிய வரித் திருத்த யோசனையை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை

புதிய வரி திருத்த யோசனையை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இது தொடர்பிலான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அதற்கமைய விவசாய பயிர்களுக்கு 14 வீதம், தகவல் தொழிநுட்பத்திற்கான வரி 14 வீதம் மற்றும் இரத்தினங்கள் மற்றும் நகைகள் ஏற்றுமதிக்கான 14 வீத வரி முற்றாக நீக்கப்பட்டுள்ளது. இரத்தினம் மற்றும் தங்க உள்ளூர் விற்பனைக்கான 28 வீத வரி 14 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

கட்டுமானத்திற்கான வரி 28 வீதத்திலிருந்து 14 வீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதே வேளை மதுபானம், புகைப்பொருட்கள் என்வற்றுக்கான 40 வீத வரியில் மாற்றமெதுவும் செய்யப்படவில்லை என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Ada-Derana

Previous articleஇன்றைய தங்க விலை (17-03-2021) புதன்கிழமை
Next articleபுத்தர் சிலை உடைப்பு: அசாத் சாலிக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்பு