புர்கா உடை நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு நேடியான தாக்கம்!

புர்காவை தடை செய்வதற்கான அமைச்சரவை பத்திரத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக அமைச்சர் ரியர் அட்மிரால் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.களுத்துறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அது நேரடியாக தாக்கம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 5 வயது முதல் 16 வயது வரையிலான பின்ளைகள் நாட்டின் தேசிய கல்வி முறையின் அடிப்படையில் கல்வி கற்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு தேசிய கல்வி கொள்கையின் அடிப்படையில் பதிவு செய்யப்படாது 1,000 இக்கும் மேற்பட்ட மத்ரஸா பாடசாலைகளை எதிர்வரும் நாட்களில் தடை செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

SOURCEமெட்ரோநியூஸ்
Previous articleஅசாத் சாலி வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் விசாரணைக்கு ASP தலைமையில் பொலிஸ் குழு
Next articleஅசாத் சாலியை கைது செய்யக் கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்!