பேய் பிடித்தது யாருக்கு? சிறுமியை அடித்தே கொன்ற ‘மூடநம்பிக்கை’

“வீட்­டி­லி­ருந்து மல்­வா­னைக்கு செல்­லும்­போது எனது மகள் ஒரு துஆவை சொல்­லித்­தந்தார். என்ன துஆ என்று கூட சொல்லத் தெரி­யாத பாவி நான்” என்று படு­கொலை செய்­யப்­பட்ட ரிப்கா, கடை­சி­யாக தன்­னுடன் நேர­டி­யாக பேசி விடை­பெற்றுச் சென்­றதை கூறி கண் கலங்­கு­கிறார் தந்தை முஹம்மத் ரிப்கான்.

முஹம்மத் ரிப்கான் பாத்­திமா ரிப்கா, 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி பிறந்­தவர். காலி உஸ்­வதுல் ஹஸனா வித்­தி­யா­ல­யத்தில் தரம் 3 வரை கல்வி பயின்­றவர். அவரை இவ்­வ­ருடம் 4 ஆம் தரத்­திற்கு மல்­வா­னை­யி­லுள்ள பாட­சா­லை­யொன்றில் சேர்ப்­ப­தற்­காக விண்­ணப்­பித்­தி­ருந்­தனர். எனினும், பாட­சா­லைக்கு செல்லக் காத்­தி­ருந்­த­­போதே இந்தக் கொடூர சம்­பவம் அரங்­கே­றி­யி­ருக்­கி­றது.

“இயல்­பா­கவே பாத்­திமா ரிப்கா மிகவும் திற­மை­சாலி” என்­கிறார் அவ­ரது தந்தை ரிப்கான். “சிறு­வ­ய­தி­லேயே அத்­தனை முதிர்ச்சி அவள். அடம்­பி­டிக்க மாட்டாள், எந்த பொருள் வேண்­டு­மென்­றாலும் அவள் கேட்­டு­விட்டு ‘வாப்பா உங்­க­ளிடம் இப்­போது காசு இல்­லை­யென்றால் பிறகு வாங்­கிக்­கொள்­ளலாம்‘ என்று பெரிய மனுஷி மாதிரி சொல்வாள். அவள் எனக்கு கிடைத்த பொக்­கிஷம். நான் துர­திஸ்ட சாலி, அவளை இழந்­து­விட்டேன்” என்று கூறி முடிக்க முன் அவ­ரது கண்கள் அணை­கட்­டு­கின்­றன.

காலி கட்­டு­கொ­டையைச் சேர்ந்த முஹம்மத் ரிப்­கா­னுக்கும் பாத்­திமா ரிபா­ஸாவுக்கும் 2005 ஆம் ஆண்டு திரு­மணம் நடந்­தது. முஹம்­மது ரிப்கான் ஒரு கடற்­றொ­ழி­லாளி, 38 வய­து­டைய பாத்­திமா ரிபாஸா இல்­லத்­த­ரசி. இவர்­க­ளுக்கு மூன்று பிள்­ளைகள். ஆண், பெண் என மூத்­த­வர்கள் இரட்­டையர். அவர்­க­ளுக்கு இப்­போது 15 வய­தா­கின்­றது. மகன் மத்­ர­ஸாவில் கற்­கிறார். மூத்த மகள் தந்­தை­யுடன் இருக்­கிறார். இளை­ய­வள்தான் பாத்­திமா ரிப்கா. அவர் தாயு­டன்தான் இருந்தார்.

சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் ரிப்­கா­னுக்கும் ரிபாஸாவுக்­கு­மி­டையில் முரண்­பா­டுகள் வந்­ததால் பிரிந்து (சட்­ட­ரீ­தி­யாக அன்றி) வாழ்ந்­தனர். தந்­தை­யையும் தாயையும் இழந்த ரிபாஸா காலி கட்­டு­கொ­ட­யி­லுள்ள தனது வீட்டை விற்­று­விட்டு மல்­வானை பகு­தியில் வாடகை வீட்­டுக்கு வந்­து­விட்டார். இந்த சம்­பவம் ஒரு வரு­டத்­திற்கு முன்னர் இடம்­பெற்­றுள்­ள­தாக ரிப்­கானின் நண்பர் கூறினார்.

மல்­வா­னைக்கு வந்த ரிபாஸா மீக­ஹ­வத்தை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட தெல்­கொட, கந்­து­பொட பகு­தியில் குடி­யே­றி­யி­ருந்தார். இவர் வாட­கைக்கு இருந்த வீட்­டுக்கு அருகில் நிதா பவுண்­டே­ஷ­னினால் கட்­டிக்­கொ­டுக்­கப்­பட்ட சகாத் வீட்­டுத்­திட்டம் இருக்­கின்­றது. அதில் குடி­யி­ருந்­த­வர்­கள்தான் பாத்­திமா லைலாவும் (வயது 40) அவ­ரது கணவர் அப்துல் லத்­தீபும். சுமார் 10 வரு­டங்­க­ளாக அங்கு குடி­யி­ருக்கும் இவர்கள் அண்­மைக்­கா­ல­மாக பேய் ஓட்­டுதல், மாந்­தி­ரிகம் போன்ற விட­யங்­கைளை செய்து வரு­வ­தாக பிர­தே­சத்­தி­லுள்ள முச்­சக்­கர வண்டி ஓட்­டுனர் முஹம்மத் நிஸ்தார் கூறினார்.

இந்தச் சம்­பவம் குறித்து பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் அஜித் ரோஹன செய்­தி­யாளர் சந்­திப்பில் குறிப்­பி­டு­கையில், “தனது மகள் ஒரு கெட்ட ஆவி­யினால் பிடிக்­கப்­பட்­ட­தாக தாய் நம்­பினார், இதனால் பேயோட்­டு­ப­வரின் வீட்­டிற்கு அழைத்துச் சென்­றுள்ளார். அங்கு ஆவியை விரட்ட ஒரு சடங்கு செய்­யப்­பட்­டுள்­ளது. முதலில் பேயோட்­டி­யவர் சிறு­மியின் மீது எண்ணெய் தேய்த்­துள்ளார், பின்னர் மீண்டும் மீண்டும் பிரம்பால் அடிக்கத் தொடங்­கினார். சிறுமி சுய­நி­னைவை இழந்­த­போது, ​​அவர் வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்­லப்­பட்டார். எனினும் அவர் பல மணி நேரங்­க­ளுக்கு முன்­னரே உயி­ரி­ழந்­து­விட்­டமை தெரிய வந்­தது” என்றார்.

அன்று பெப்­ர­வரி மாதம் 27 ஆம் திகதி மதியம் 1 மணி­ய­ள­வில்தான் ரிப்கா பேயோட்டும் பெண் லைலாவின் வீட்­டுக்கு அழைத்துச் செல்­லப்­பட்­டி­ருக்­கின்றார். மாலை­யா­கும்­போது லைலாவின் வீட்டி­லி­ருந்து ஒன்­பது வயது சிறுமி பாத்­திமா ரிப்கா “ஆண்டி என்னை அடிக்க வேண்டாம், எனக்கு வலிக்­கி­றது” என்று அலறும் சத்தம் கேட்­ட­தாக பக்­கத்து வீடு­களில் வசிப்போர் தெரி­வித்­தனர். இத­னை­ய­டுத்து குறித்த வீட்டில் ரிப்­காவின் தாய் ரிபா­ஸாவும் இருப்­பதை அறிந்­து­கொண்­ட­தா­கவும் தாயும் சம்­பந்­தப்­பட்­டி­ருப்­பதால் விடயம் தொடர்பில் யாரும் கேள்வி கேட்க முன்­வ­ர­வில்லை என்றும் தெரி­ய­வ­ரு­கி­றது.

“இரவு பத்­தரை மணி­ய­ளவில் எனது வீட்­டுக்கு லைலாவின் கணவர் ஓடி வந்தார். ரிப்­கா­வுக்கு சுக­மில்லை. முச்­சக்­கர வண்­டியில் அவ­ச­ர­மாக வைத்­தி­ய­சா­லைக்குச் செல்ல வேண்டும்” என அப்துல் லத்தீப் அழைத்­த­தாக கூறினார் முச்­சக்­கர வண்டி ஓட்­டுனர் முஹம்­மது நிஸ்தார்.

“இத­னை­ய­டுத்து லைலாவின் வீட்­டுக்குச் சென்றேன். அப்­போது, லைலாவும் தாய் ரிபா­ஸாவும் சிறுமி ரிப்­காவை தூக்­கிக்­கொண்டு முச்­சக்­கர வண்­டியில் ஏறினர். சிறுமி அழவோ, பேசவோ இல்லை. நிசப்­த­ம் நிலவியது. உடுத்­தி­ருந்த ஆடை­யுடன் இருப்­ப­தையே நான் கண்டேன். உட­ன­டி­யாக வைத்­தி­ய­சா­லைக்கு எடுத்துச் சென்றோம். இதன்­போது, சிறுமி ஏற்­க­னவே உயி­ரி­ழந்து சில மணி நேரம் கடந்­துள்­ள­தாக வைத்­தி­யர்கள் கூறினர்” என்றார் ஸ்தலத்தில் இருந்த முச்­சக்­க­ர­வண்டி ஓட்­டுனர் நிஸ்தார்.

“அந்த சிறு­மியின் நெற்­றியில் எண்ணெய் தேய்க்­கப்­பட்டு, அவர் பிரம்பால் தாக்­கப்­பட்­டுள்ளார். ஏற்­க­னவே இரண்டு தினங்கள் குறித்த பேயோட்டும் பெண் லைலா­விடம் சிறுமி அழைத்துச் செல்­லப்­பட்­டி­ருக்­கின்றார். இந்­நி­லையில், மூன்றாம் நாளன்­றுதான் இந்த உயி­ரி­ழப்பு இடம்­பெற்­றுள்­ளது” என பொலிஸ் ஊடகப் பிரிவு சுட்­டிக்­காட்­டு­கி­றது.
ரிப்கா சில தினங்­க­ளாக படுக்­கையில் சிறுநீர் கழிப்­ப­தாவும், தூக்­கத்தில் பேசு­வ­தா­கவும் கூறியே மந்­திரம் செய்யும் லைலா­விடம் தாய் ரிபாஸா அழைத்துச் சென்­ற­தாக பொலிஸ் விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரி­ய­வ­ரு­கின்­றது.

“ரிப்கா கடந்த பெப்­ர­வரி நடுப்­ப­கு­தியில் காலி­யில்தான் இருந்தார். மகனை மத்­ர­ஸாவில் விடு­வ­தற்­காக அவர் பிள்­ளை­களை அழைத்­து­வந்தார். இதன்­போது ரிப்­கா­வுக்கு எந்த நோயும் இருக்­க­வில்லை. அவ­ரிடம் எந்த மாற்­றமும் தென்­ப­ட­வில்லை” என்று கூறினார் தந்தை முஹம்மத் ரிப்கான். ரிப்­கா­விடம் குறிப்­பி­டும்­ப­டி­யான எந்­த­வித மாற்­றங்­களோ அல்­லது நோய்­களோ இருக்­க­வில்லை என அய­ல­வர்­களும் ரிப்­கா­வுக்கு கற்­பித்த ஆசி­ரி­யர்­களும் தெரி­விக்­கின்­றனர்.

“எனது மனைவி, காலியில் இருக்­கும்­போதும் ஏதா­வது பிரச்­சி­னைகள் ஏற்­ப­டும்­போது, இவ்­வா­றான மூட நம்­பிக்­கை­களின் பின்னால் சென்­றி­ருக்­கின்றார். அவரின் குடும்­பத்தில் பல­ருக்கும் இதே நம்­பிக்கை இருக்­கின்­றது. இன்று நான் என் மகளை இழந்­தி­ருக்­கிறேன். என்­னிடம் இருந்த பிழை­க­ளினால் மனக் கசப்­புகள் ஏற்­பட்­டது உண்­மைதான். நான் துர­திஷ்­ட­சாலி, அறிவும் ஆற்­ற­லும்­மிக்க என் பிள்­ளையை மனை­வியின் மூட நம்­பிக்­கையால் இழந்­து­விட்­டேன்”­என்­கிறார் ரிப்கான்.

ரிப்­காவின் ஜனாஸா மறுநாள் இரவு நூற்றுக் கணக்­கா­னோரின் பங்­கேற்­புடன் காலி, கட்­டு­கொடை முஹி­யித்தீன் பள்­ளி­வாசல் மைய­வா­டியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. கடந்த ஜன­வரி மாதம் முழு நாட்­டிலும் புகழ்ந்து பேசப்­பட்ட இலட்­சா­தி­பதி வெற்­றி­யாளர் சுக்ரா முனவ்­வரும் இதே மஹல்­லாவைச் சேர்ந்­த­வர்தான். சுக்­ராவின் வெற்­றி­யினால் மகிழ்ச்­சியில் திளைத்த அக்­கி­ராம மக்கள் ரிப்­கா­வுக்கு நடந்த கொடூர சம்­ப­வத்­தினால் இன்று கவ­லையில் ஆழ்ந்­துள்­ளனர்.

சிறு­மியின் தாய் ரிபாயா, மற்றும் பேயோட்டும் பெண் லைலா ஆகியோர் கடந்த திங்­கட்­கி­ழமை நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டனர். இதன்­போது இரு சந்­தேக நபர்­க­ளையும் மார்ச் 12 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசா­ரணை நடத்த நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டது.
சிறுமி மீது சடங்கு செய்த பெண் சில மாதங்­க­ளாக இது­போன்ற நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்­ள­தாக அறி­யக்­கி­டைக்­கி­றது. இப் பெண்­ணினால் வேறு யாரா­வது பாதிக்­கப்­பட்­டார்­களா என பொலிஸார் விசா­ரித்து வரு­வ­தாக பொலிஸ் பேச்­சாளர் அஜித் ரோஹன கூறினார்.

தொழில்­நுட்ப உலகில் இன்னும் மூட­நம்­பிக்­கை­களின் பின்னால் மக்கள் செல்­கின்­ற­னரா என்ற கேள்வி பல­ரி­டமும் இருக்கலாம். கிராமப் புறங்களில் மாத்திரமல்ல, கொழும்பின் நகர்ப் புறத்திலும் இன்னும் இவ்வாறான சடங்குகளும் அநாச்சாரங்களும் தொடரத்தான் செய்கின்றன. குறித்த பேயோட்டும் பெண் லைலா கொழும்பு வாழைத்தோட்டம் பகுதியை பூர்வீகமாக கொண்டவர்தான். இன்றும் தாயத்து கட்டுதல், மாந்திரிகம் என்றெல்லாம் இவரைப் போன்ற பலர் பிழைப்பு நடாத்தி வருகிறார்கள்தான்.

இவ்வாறான லைலாக்களுக்கு எதிராக சமூகம் கிளர்ந்தெழ வேண்டும். மூட நம்பிக்கைகளை வைத்துக் கொண்டு அப்பாவி உயிர்களுக்கு உலை வைக்கும் இவ்வாறானவர்களை கண்டறிந்து சட்ட நடவடிக்கை எடுக்க ஒவ்வொரு பள்ளிவாசல் நிர்வாகமும் முன்வர வேண்டும். அப்போதுதான் ரிப்கா போன்ற அப்பாவிச் சிறுமிகளை எதிர்காலத்தில் பாதுகாக்க முடியுமாகவிருக்கும்.-

Check Also

அனைத்து பள்ளிவாசல்களின் சொத்து விபரங்களை கோருகிறது அரசாங்கம்

திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத நிறுவனங்களின் அசையும் அசையா சொத்துகளின் விபரங்களும் திரட்டப்படும் என்கிறார் பணிப்பாளர் பைஸல் நாட்டிலுள்ள …

You cannot copy content of this page