எச்சரிக்கை – போலி ஆவணங்களை தயாரித்து வாகன விற்பனை

போலி ஆவணங்களை தயாரித்து வாகன மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில் இருவரை மேல்மாகாண புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, வாடகைக்கு வாகனங்களை வழங்கும் நிறுவனத்தில் வாகனங்களை பெற்று அவற்றுக்கான போலி உறுதிப்பத்திரங்களை தயாரித்து, குறைந்த விலையில் வேறு நபர்களுக்கு விற்பனை செய்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் முல்லேரியா மற்றும் வெல்லம்பிட்டி பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் இதுபோன்ற 17 குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.