மாவனெல்லை இளம் பெண் கைது – நடந்தது என்ன?

ஏப்ரல்‌ 21 தாக்குதல்‌ என அறியப்படும்‌ 2019 ஏப்ரல்‌ 21 ஆம்‌ திகதி உயிர்த்த ஞாயிறு தினமன்று நடாத்தப்பட்ட தொடர்‌ தற்கொலை தாக்குதல்களின்‌ சூத்திரதாரியாக கருதப்படும்‌ சஹரான்‌ ஹாஷீம்‌ முன்னிலையில்‌, 15 பெண்கள்‌, எந்த நேரத்திலும்‌ தற்கொலை தாக்குதல்‌ நடாத்த தயார்‌ என ‘பை அத்‌’ எனும்‌ உறுதி மொழியை எடுத்திருந்ததாக ரி.ஐ.டி. விசாரணைகளில்‌ தெரியவந்துள்‌ளது.

அடிப்படைவாதம்‌, ஆயுதப்‌ பயிற்சி தொடர்பிலான சஹ்ரானின்‌ வகுப்புக்‌களில்‌ கலந்துகொண்டதாக கூறப்படும்‌ 24 வயதான மாவனெல்லை ஹிங்குல பகுதியைச்‌ சேர்ந்த மொஹம்மட்‌ இப்‌ராஹீம்‌ சஹீதா எனும்‌ யுவதியைக்‌ கைது செய்து முன்னெடுத்த விசாரணைகளில்‌ இந்த தகவல்‌ வெளிப்பட்டதாக பொலிஸ்‌ பேச்சாளர்‌ பிரதிப்‌ பொலிஸ்‌ மா அதிபர்‌ அஜித்‌ ரோஹன அறிவித்திருந்தார்‌.

சஹ்ரானின்‌ அடிப்படைவாத வகுப்‌புக்கள்‌, பயிற்சி முகாம்கள்‌ தொடர்பில்‌ பிரத்தியேக விசாரணைகள்‌ ரி.ஐ.டி. எனப்படும்‌ பயங்கரவாத புலனாய்வுப்‌ பிரிவினரால்‌ முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பயங்கரவாத புலனாய்வுப்‌ பிரிவின்‌ பணிப்பாளர்‌ சிரேஷ்ட பொலிஸ்‌ அத்தியட்சர்‌ பிரசன்ன அல்விஸின்‌ கீழ்‌ இந்த விசாரணைகள்‌ இடம்பெறுகின்‌றன. சஹ்ரானின்‌ தேசிய தெளஹீத்‌ ஜமா அத்‌ உறுப்பினர்கள்‌, அதன்‌ செயற்பாடு, நாடளாவிய ரீதியில்‌ அவ்வமைப்பு முன்‌னெடுத்த நடவடிக்கைகள்‌ என அந்த விசாரணைகள்‌ மிக ஆழமானவை.

இந்‌ நிலையில்‌, பயங்கரவாத புலனாய்வுப்‌ பிரிவினர்‌, விஷேட விசாரணை ஒன்றினை தற்கொலைத்‌ தாக்குதல்கள்‌ இடம்பெற்று பல மாதங்கள்‌ கடந்த நிலையில்‌ ஆரம்பித்தனர்‌. தாக்குதலின்‌ பின்னர்‌ கைப்பற்றப்பட்ட டிஜிட்டல்‌ உபகரணம்‌ ஒன்றிலிருந்து மீளப்‌ பெறப்‌பட்ட தகவல்களை மையப்படுத்தியதாக அவ்விசாரணைகள்‌ ஆரம்பித்தன.

குறிப்பாக சஹ்ரான்‌ ஹாஷீமின்‌ தேசிய தெளஹீத்‌ ஜமா அத்‌ உறுப்பினர்கள்‌ பலர்‌ சேர்ந்து முன்னெடுத்திருந்த தொடர்‌ பாடல்‌ வலையமைப்பு உள்ளிட்ட தகவல்‌ களும்‌ அந்த விசாரணைகளில்‌ வெளிப்‌பட்டிருந்ததாக அறிய முடிகின்றது.

இந்‌ நிலையில்‌ தான்‌ 20 வயதான ஒரு இளைஞர்‌ பயங்கரவாத புலனயவுப்‌ பிரிவினரால்‌ கடந்த 202௦ டிசம்பர்‌ மாதம்‌ காத்தான்குடிக்குச்‌ சென்ற, சிறப்பு பொலிஸ்‌ குழுவினரால்‌ கைது செய்யப்‌பட்டிருந்தார்‌.

அது தொடர்பிலான மேலதிக விசாரணைகளில்‌ வெளிப்பட்ட தகவல்களுக்கு அமைய, சஹ்ரானின்‌ வகுப்புக்களில்‌ கலந்துகொண்டிருந்த 6 பெண்கள்‌ மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில்‌ வைத்து கடந்த 2020 டிசம்பர்‌ மாதம்‌ 7 ஆம்‌ திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்‌. இவர்கள்‌ அனைவரும்‌ உறவினர்கள்‌ என்பதுடன்‌, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின்‌ பின்னர்‌ கைதான, தாக்குதலுடன்‌ தொடர்புபட்டவர்களின்‌ நெருங்கிய உறவினர்கள்‌ என்பதும்‌ முக்கிய விடயமாகும்‌. இதன்‌ தொடர்ச்சியாக இடம்‌ பெற்ற மேலதிக விசாரணைகளில்‌, கடந்த வெள்ளியன்று (19 ஆம்‌ திகதி) மாவனெல்லையில்‌ வைத்து மொஹம்மட்‌ இப்ராஹீம்‌ சஹீதா எனும்‌ 24 வயதான யுவதி கைது செய்யப்பட்டிருந்தார்‌. பயங்கரவாத புலனாய்வுப்‌ பிரிவினால்‌ காத்தான்குடியைச்‌ சேர்ந்த 6 பெண்கள்‌ கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட போது, சஹ்ரானின்‌ வகுப்புக்களில்‌ தாங்கள்‌ கலந்துகொண்டிருந்த போது சஹீதாவும்‌ இருந்தமை தொடர்பிலான தகவல்கள்‌ வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்‌ பிரகாரமே மாவனெல்லை ஹிங்‌குல பகுதிக்குச்‌ சென்ற பயங்கரவாத புலனாய்வுப்‌ பிரிவினர்‌ அவரை கைது செய்து கொழும்புக்கு அழைத்து வந்து விசாரித்தனர்‌. அதன்போது மேலும்‌ பல தகவல்கள்‌ வெளிப்படுத்தப்பட்டன. மாவனெல்லை பகுதியில்‌ கடந்த 2018 டிசம்பர்‌ மாதம்‌ பதிவான புத்தர்‌ சிலை தகர்ப்பு விவகாரங்களின்‌ பிரதான சந்தேக நபர்களாக அடையாளம்‌ காணப்பட்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்‌கப்பட்டுள்ள சி.ஐ.டி.யினரால்‌ ‘ ஹக்‌ பிரதர்ஸ்‌’ என அடையாளப்படுத்தப்படும்‌ மொஹம்மட்‌ இப்ராஹீம்‌ சாஹித்‌ அப்துல்‌ ஹக்‌ மற்றும்‌ மொஹம்மட்‌ இப்ராஹீம்‌ சாதிக்‌ அப்துல்‌ ஹக்‌ ஆகியோரின்‌ சகோதரியே சஹீதா ஆவார்‌.

அவரது தந்‌ைதயான இப்ராஹீம்‌ மெளலவி என பரவலாக அறியப்படும்‌ மொஹம்மட்‌ இப்ராஹீமும்‌ புத்தர்‌ சிலை உடைப்பு விவகாரத்தில்‌ கைதாகி தடுப்பில்‌ உள்ளார்‌. உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின்‌ பின்னர்‌ சஹீதாவும்‌ மாவனெல்லை புத்தர்‌ சிலை உடைப்பு விவகாரத்தில்‌ கைது செய்யப்‌பட்டு விசாரிக்கப்பட்டதுடன்‌ அந்த சம்‌பவத்தில்‌ அவருக்கு தொடர்பு இல்லை என உறுதியான நிலையில்‌ விடுவிக்கப்‌பட்டிருந்தார்‌. எனினும்‌ சஹீதாவை புலனாய்வுப்‌ பிரிவினர்‌ தொடர்ந்து கண்காணித்து வந்திருந்தனர்‌.

இவ்வாறான பின்னணியிலேயே கைது செய்யப்பட்ட சஹீதாவை கொழும்‌புக்கு அழைத்து வந்து பயங்கரவாத புலனாய்வுப்‌ பிரிவினர்‌ தீவிர விசாரணைகளை முன்னெடுத்த போது, சஹ்‌ரானின்‌ அடிப்படைவாத, ஆயுத பயிற்சி வகுப்புகளில்‌ அவர்‌ பங்கேற்றதாகவும்‌ அவ்வகுப்பில்‌ 15 பெண்கள்‌ இருந்தமை தொடர்பிலும்‌ தகவல்கள்‌ உறுதி செய்யப்‌பட்டுள்ளன.

இதனைவிட அந்த 15 பேரில்‌ 5 பேர்‌, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்‌ களின்‌ பின்னர்‌ சாய்ந்தமருது பகுதியில்‌ வீடொன்றுக்குள்‌ இடம்பெற்ற தற்கொலைக்‌ குண்டு வெடிப்பு சம்பவத்தில்‌ உயிரிழந்துள்ளதாக சாஹிதா வெளிப்‌படுத்தியுள்ளதாக பொலிஸ்‌ பேச்சாளர்‌ பிரதிப்‌ பொலிஸ்‌ மா அதிபர்‌ அஜித்‌ ரோஹன குறிப்பிட்டார்‌.

இந்‌ நிலையில்‌ குறித்த வகுப்புக்களில்‌ பங்கேற்ற மேலும்‌ மூவர்‌ தற்போதும்‌ கைதாகி விளக்கமறியலில்‌ வைக்கப்‌பட்டுள்ளதாகவும்‌, சாஹிதா உள்ளிட்ட ஏனைய 7 பேரும்‌ தற்போதும்‌ பயங்கர வாத புலனாய்வுப்‌ பிரிவின்‌ கீழ்‌ தடுப்புக்‌ காவலில்‌ வைக்கப்பட்டு விசாரிக்கப்‌பட்டு வருவதாகவும்‌ அஜித்‌ ரோஹன சுட்டிக்காட்டினார்‌.

இந்த வகுப்புக்கள்‌ கடந்த 2018 ஆம்‌ ஆண்டு டிசம்பர்‌ மாதம்‌ இடம்பெற்‌றுள்ளதாக விசாரணைகளில்‌ வெளிப்‌ படுத்தப்பட்டுள்ளன. எவ்வாறாயினும்‌ தற்போதைய நிலையில்‌, தற்கொலைத்‌ தாக்குதல்‌ நடாத்த பை அத்‌ செய்திருந்த 15 பெண்களும்‌ அடையாளம்‌ காணப்‌பட்டு, அவர்களில்‌ உயிருடன்‌ இருக்கும்‌ 1௦ பேரும்‌ சட்டத்தின்‌ பிடியில்‌ உள்ளதாக பயங்கரவாத புலனாய்வுப்‌ பிரிவினர்‌ கூறுகின்றனர்‌.

எவ்வாறாயினும்‌ இவ்வாறான மேலும்‌ பல வகுப்புக்கள்‌ இடம்பெற்றுள்ளனவா, இவ்வாறான வகுப்புக்களுக்கு உதவி ஒத்‌தாசை அளித்தவர்கள்‌, நிதியளித்தவர்கள்‌ யார்‌ என்பது உள்ளிட்ட ஏனைய விடயங்கள்‌ தொடர்பில்‌ தீவிர விசாரணைகள்‌ இடம்பெற்று வருகின்றன. தற்கொலை தாக்குதல்‌ நடாத்த பை அத்‌ செய்ததாக கூறப்படும்‌ பெண்களில்‌ ஐவர்‌ மரணித்துள்ளனர்‌.

  1. அப்துல்‌ சத்தார்‌ சித்தி உம்மா(சஹ்ரான்‌ ஹாஷீமின்‌ தாய்‌),
  2. மொஹம்மட்‌ ஹாஷீம்‌ ஹிதாயா (சஹ்ரான்‌ ஹாஷீமின்‌ சகோதரி),
  3. ஆதம்‌ லெப்பை பாத்திமா அப்ரின்‌ (சஹ்ரான்‌ ஹாஷீமின்‌ சகோதரரான சின்ன மெளலவி எனப்படும்‌ மொஹம்மட்‌ – ஸைனியின்‌ மனைவி),
  4. மொஹம்மட்‌ நஸார்‌ பாத்திமா நப்னா ( சஹ்ரான்‌ ஹாஷீமின்‌ சகோதரர்‌ ரில்வானின்‌ மனைவி),
  5. அப்துல்‌ ரஹீம்‌ பெரோஸா ( சியோன்‌ தேவாலயத்தில்‌ குண்டினை வெடிக்கச்‌ செய்த தற்கொலை குண்டு தாரி ஆசாத்தின்‌ மனைவி) ஆகியோரே உயிரிழந்துள்ளவர்களாவர்‌.

இதேவேளை ஏலவே கைது செய்யப்‌பட்டு மூவர்‌ விளக்கமறியலில்‌ வைக்‌கப்பட்டுள்ளதுடன்‌ மேலும்‌ ஏழு பேர்‌ பயங்கரவாத புலனாய்வுப்‌ பிரிவினரின்‌ கீழ்‌ சந்தேக நபர்களாக தடுத்து வைக்கப்‌பட்டுள்ளனர்‌. இதனிடையே மேற்படி 15 பேரினதும்‌ பட்டியலில்‌ சாரா என்றழைக்கப்படும்‌ புலஸ்தினி ராஜேந்திரனின்‌ பெயர்‌ உள்ளடங்கவில்லை.

நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய தேவாலயத்தில்‌ தற்கொலைக்‌ குண்டுத்‌ தாக்குதல்‌ நடாத்திய ஹஸ்தூனின்‌ மனைவியான இவர்‌, சாய்ந்தமருதில்‌ வீடொன்றினுள்‌ இடம்பெற்ற குண்டுவெடிப்பில்‌ உயிரிழந்ததாக ஆரம்பத்தில்‌ கூறப்பட்டது. எனினும்‌ தற்போது அவர்‌ நாட்டை விட்டும்‌ தப்பியோடியுள்ளதாக வேறு சில தகவல்கள்‌ கூறுகின்றன. இவர்‌ உயிரிழந்துவிட்டாரா அல்லது நாட்டிலோ அல்லது வேறு நாடுகளிலோ தலைமறைவாக வாழ்கிறாரா என்பதைக்‌ கண்டறிவதற்கான விசேட விசாரணைகளை நடத்துமாறு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்‌ தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையில்‌ பரிந்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SOURCEஎம்‌.எப்‌.எம்‌.பஸீர்‌ விடிவெள்ளி