குவாஸி நீதிமன்ற, புர்கா முறைமையைக் கலைத்து, விடுமாறு கோரி ஆர்ப்பாட்டம்

குவாஸி நீதிமன்ற முறைமையை கலைத்து விடுமாறும், புர்கா அணியும் பிரச்சினைக்கு தீர்வினைக் காணுமாறும் கோரி, கோட்டே புகையிரத நிலையத்துக்கு முன்பாக வெள்ளிக்கிழகமை (24-07-2020) ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

‘நாட்டுக்கு விசுவாசமுள்ள குடிமக்கள்’ எனும் அமைப்பு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
இந்த கவன ஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட ஆண்களில் பலர், முஸ்லிம் பெண்கள் அணியும் ஹபாயா மற்றும் புர்கா ஆடைகளை அணிந்திருந்தனர்.

‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ ‘சிறுவர் திருமணம் என்பது, சிறுவர் துஷ்பிரயோகம்’ என்பவை உள்ளிட்ட – பல சுலோகங்கள் எழுதப்பட்ட அட்டைகளை, இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஏந்தியிருந்தனர்.

Read:  ஜும்மா தொழும் இடங்களில் மாற்றம் - ஜம்இய்துல் உலமா