தாக்குதலை சிங்களவர்களே திட்டமிட்டதாக கருத வாய்ப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்‌ தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையைப்‌ பார்க்கும்‌ போது பெளத்த சிங்கள மக்களே அதனைத் திட்ட‌மிட்டு மேற்கொண்டனர்‌ என்பது போன்ற ஒரு தவறான கருத்தை சர்வதேச மட்டத்தில்‌ கொண்டு செல்ல இடமிருப்பதாக கண்டி அஸ்கிரிய பீடம்‌ தெரிவித்துள்ளது.

கண்டி அஸ்கிரிய பிடத்தில்‌ நேற்றைய இனம்‌ இடம்பெற்ற செய்தியாளர்‌ சந்‌திப்பின்‌ போது பீடத்தின்‌ பதிவாளர்‌ நாரம்‌பனாவே ஆனந்த தேரர்‌ மேற்கண்டவாறு தெரிவித்தார்‌.

இதன்போது, அவர்‌ மேலும்‌ தெரிவித்ததாவது, இத்தாக்குதலுக்கு பின்னால்‌ உள்ளவர்களையும்‌ கடும்போக்கு வாதத்தை ஊக்குவித்தவர்களையும்‌ ஆணைக்குழு கண்டு பிடித்து வெளிப்படுத்து இருக்க வேண்டும்‌. அப்படியான ஒருவிடயத்தை இதிலிருந்து கண்டு கொள்ள முடியவில்லை.

இப்படியான ஒரு கடும்‌ போக்கு அமைப்பு உள்ளதாகவும்‌ அது மிலேச்சத்‌தனமான தாக்குதல்களை மேற்கொள்ளும்‌ எனவும்‌ முதன்‌ முதலில்‌ வெளிப்படுத்‌தியது பொதுபலசேனா அமைப்பு என்‌பதை நாம்‌ மறக்கக்‌ கூடாது. இருப்பினும்‌ அது பற்றி முதலில்‌ கருத்து வெளியிட்‌ பொதுபலசேணாவை தடைசெய்ய விதந்துரைத்திருப்பதை ஏற்க முடியாதுள்ளது.

அதே போல்‌ ஜனாதிபதி, பாதுகாப்புச்‌ செயலாளர்‌, பொலிஸ்மா அதிபர்‌ மற்றும்‌ உயர்‌ பொலிஸ்‌ அதிகாரிகள்‌ மீது நடவக்கை எடுக்கும்படியும்‌ குறிப்பிடப்பட்‌ டுள்ளமை. மற்றும்‌ மாவனல்ல புத்தர்‌ சிலை உடைப்பு தொடர்பாக எதுவும்‌ கூறப்படாமை என்பன பாரிய புதிராக உள்ளன.

சிங்கள பெளத்தர்களை குறிப்பிட்டு நடவடிக்கை எடுக்கும்‌ படி கூறப்பட்ட நிலை சர்வதேசத்தில்‌ சிங்கள மக்களை தவறாக இனம்காட்ட இடமுண்டு என்றும்‌ அவர்‌ தெரிவித்தார்‌. (ஜே.எம்‌.ஹாபிஸ் – விடிவெள்ளி‌)

Read:  Omicron பரவல் முன்னெச்சரிக்கை; தனது எல்லைகளை மூடுகிறது ஜப்பான்