தம்புள்ளை பள்ளியினை அகற்றுவதாக அறிவித்தல்

நீண்‌ட காலமாக சர்ச்சைக்கு உட்படுத்தப்பட்டுவரும்‌ தம்புள்ள ஹைரியா பள்ளிவாசலை நீதிமன்ற உத்தரவினைப்‌ பெற்று அவ்விடத்‌ திலிருந்தும்‌ அப்புறப்படுத்தும்‌ நடவடிக்கைகளை மீண்டும்‌ மாநகர சபை மேற்கொண்டுள்ளது.

தம்புள்ள பள்ளிவாசல்‌ நிர்வாகத்திற்கான அனுபாதி ஏற்கனவே பெற்றுக்கொள்ள பட்டிருந்தால்‌ அது தொடர்பான ஆவணங்களை 2021.02.24 ஆம்‌ திகதி அல்லது அதற்கு முன்பு தம்புள்ள மாநகரசபை பொறியியலாளரிடம்‌ சமர்ப்பிக்குமாறு தம்புள்ள மாநகர சபையினால்‌ அறிவித்தல்‌ ஒன்று கடந்த 24 ஆம்‌ திகதி பிற்‌ பகல்‌ 3.45 மணியளவிலே பள்ளிவாசலில்‌ ஒட்டப்பட்டுள்ளதாக பள்ளிவாசல்‌ நிர்வாக சபை உறுப்பினர்‌ சலீம்தீன்‌ விடிவெள்‌ளி பத்திரிகைக்கு‌ தெரிவித்தார்‌.

உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி இறுதி திகதியாக 24 ஆம்‌ திகதி குறிப்‌? டப்பட்டு இவ்வாறு அறிவித்தல்‌ அன்றைய தினம்‌ பிற்பகல்‌ 3.45 மணிக்கு ஒட்டப்பட்‌டடுள்ளமை திட்டமிட்‌, சதி எனவும்‌ அவர்‌ குறிப்பிட்டார்‌. 2021.02.17 என திகதி குறிப்பிடப்பட்டுள்ள CPC/DMC/MW/20/ அனவசர/10/2020 எனும்‌ இலக்கமிட்ட அறிவித்தல்‌ கடந்த 24 ஆம்‌ திகதியே ஒட்டப்பட்டுள்ளது. தம்புள்ள மாநகர சபை மாதகர ஆணையாளர்‌ வி.ஏம்‌.ஆர்‌. பி. தசநாயக்க அறிவித்தலில்‌ கையொப்பமிட்‌டுள்ளார்‌.

அறிவித்தலில்‌ தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. 1982 ஆம்‌ ஆண்டின்‌ 4 ஆம்‌ இலக்க நகர அபிவிருத்தி அதிகார சபை சட்‌டத்தின்‌ 8(1) பிரிவை மீறி உங்களால்‌ அதிகார சபையிடமிருந்து உரிய அனுமதி பெற்றுக்‌ கொள்ளாது கண்டி வீதி தம்புள்ளயில்‌ வணக்கஸ்தலமொன்று நிர்மாணிக்கப்பட்‌டுள்ளதாக எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2021.02. 24 ஆம்‌ திகதி அல்லது அதற்கு முன்பு நிர்மாணத்திற்கு பெற்றுக்‌ கொள்ளப்‌பட்ட அனுமதி தொடர்பான ஆவணங்கள்‌ இருப்பின்‌ தம்புள்ள மாநகரசபை பொறியியலாளரிடம்‌ சமர்ப்பிக்கும்படி இத்தால்‌ அறிவிக்கிறேன்‌. அவ்வாறு அறிவிக்கப்படாவிட்டால்‌ எந்த அறிவிப்புமின்றி மேற்கூறப்பட்ட நகர அபிரிவிருத்தி அதிகார சபை சட்டத்தின்‌ 23A(3) பிரிவின்‌ கீழ்‌ நீதிமன்ற உத்தரவினைப்‌ பெற்று சட்ட விரோத நிர்மாணம்‌ அகற்றப்படும்‌ என அறியத்‌ தருகிறேன்‌’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தல்‌ பள்ளிவாசலில்‌ ஓட்டப்பட்டதனையடுத்து பள்ளிவாசல்‌ நிர்வாகம்‌ அறிவித்தலின்‌ பிரதிகளை முஸ்லிம்‌ பாராளுமன்ற உறுப்பினர்கள்‌, நீதியமைச்சர்‌ அலி சப்ரி, வக்பு சபையின்‌ தலைவர்‌ சப்ரி ஹலீம்தீன்‌. முஸ்லிம்‌ சமய பண்பாட்டலுவல்கள்‌ திணைக்களத்தின்‌ பணிப்பாளர்‌ ஏ.பி.வம்‌.அஷ்ரப்‌ ஆகியோருக்கு உரிய நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைத்துள்ளது. (ஏ.ஆர்‌.ஏ.பரீல்‌- விடிவெள்ளி)

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page