புதிய 20 ரூபா நாணயம் மார்ச் மாதம் புழக்கத்தில்

இலங்கை மத்திய வங்கியின் 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அண்மையில் வெளியிடப்பட்ட புதிய 20 ரூபா நாணயம் மார்ச் முதலாம் திகதி முதல் புழக்கத்தில் விடப்படும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஷ்மன் நேற்று புதன்கிழமை புதிய 20 ரூபா நாணயத்தை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்தார்.

இந்த நாணயம் நாணயம் 7 பக்க வடிவத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது. மார்ச் 03ஆம் திகதி முதல் 5 மில்லியன் ரூபா நாணயங்கள் புழக்கத்தில் விடப்படும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous articleஇன்றைய தங்க விலை (25-02-2021) வியாழக்கிழமை
Next articleபுதிய வர்த்தமானியிலுள்ள ஜனாஸா சம்பந்தமான விடயங்கள்