கொரோனாவினால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்ய முடியும். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு.

கொரோனாவால் உயிரிழந்த ஜனாஸாக்கள் அடக்கம்தொடர்பில் அரசின் விசேட அறிவிப்பு.

கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழக்கும்  நபர்களின்  உடல்களை அடக்கம் அல்லது தகனம் செய்வது என்ற இரண்டிற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

மரிக்கார் எம் பியின் வாய்மூல வினாவொன்றுக்கு பதிலளித்தபோதே பிரதமர் இவ்வாறு அறிவித்துள்ளார்.

நிலத்தடி நீரின் ஊடாக கொரேனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பில்லை என, கொரேனா ஒழிப்பு தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணாண்டோ புள்ளே நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், குறித்த கருத்துத் தொடர்பில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸிடம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் இன்று சபைியல் கேள்வி எழுப்பினார்.

இதற்கமைய, கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் சடலங்களைப் புதைப்பதற்கு அனுமதி வழங்குவதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இதன்போது குறிப்பிட்டார்.

இதன் பின்னர்  கேள்வி நேரத்தில் கருத்து தெரிவித்த மரிக்கார் எம்.பி, விஞ்ஞான காரணிகளுக்கு அமைய கொவிட் -19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்கியமைக்காக பிரதமருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். 

Previous articleஇன்றைய தங்க விலை (10-02-2021) புதன்கிழமை
Next articleஇன்றைய தங்க விலை (11-02-2021) வியாழக்கிழமை