அக்குறணை வெள்ளத்தின் (2021) பின் சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம்.

அக்குறணை பிரதேசத்தில் நேற்றைய தினம் பெய்த கடும் மழையின் காரணமாக அக்குறணை துனுவில வீதியும் அதனைச் சூழவுள்ள பகுதியும் நீரில் சுமாராக மூழ்கியிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

அத்துடன் இம்மழையின் காரணமாக துனுவில வீதியோடிணைந்த ஆற்றிலும் எட்டாம் கட்டைப் பிரதேசத்திலுள்ள வடிகானிலும் உக்காத கழிவுப் பொருட்கள் சேர்ந்து நீர் வழிந்தோட முடியாமல் அடைத்திருந்தன.

அடைத்திருந்த கழிவுப் பொருட்களை முழுமையாக அகற்றி நீர் தடையின்றி வழிந்தோடும் வகையில் ஆற்றின் அடைப்புகளையும் வடிகானின் அடைப்புகளையும் சுத்தம் செய்து முறைப்படுத்தல், பாதையோரமாக அபாயத்தைத் தோற்றுவிக்கக் கூடிய நிலையிலிருந்த மின் கம்பிகளை சீர்படுத்தல், மற்றுமுண்டான சுத்திகரிப்புப் பணிகள், இன்றைய தினம் இடம்பெற்றது

அக்குறணை பிரதேச சபையின் தவிசாளர் கௌரவ இஸ்திஹார் இமாதுதீன் அவர்களது தலைமையில், அக்குறணை வர்த்தக சங்கத்தின் ஒத்துழைப்புடன், பிரதேச சபை ஊழியர்கள், மின்சார சபை ஊழியர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் சேவகர்கள் சகிதம் JCB இயந்திரங்களையும் பயன்படுத்தி, வர்த்தக சங்க மற்றும் பிரதேச சபை ஊழியர்கள் மூலமாகவும் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சுத்திகரிப்புப் பணிகளின் போதுள்ள செலவினங்களுக்கான அனுசரனை அக்குறணை வர்த்தக சங்கத்தினராலும் தவிசாளரினாலும் வழங்கப்பட்டது. அத்துடன் பிரதேச சபை கௌரவ உறுப்பினர் சவ்ராஜ், பிரதேச சபையின் சுற்றாடல் உத்தியோகத்தர் மற்றும் அரச அதிகாரிகள், ஊர்மக்கள் கலந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்கினர்.

akurana-flood-2021-02
akurana-flood-2021-03
akurana-flood-2021-04
akurana-flood-2021-05
akurana-flood-2021-06
akurana-flood-2021-07
akurana-flood-2021-08
akurana-flood-2021-09
akurana-flood-2021-10
akurana-flood-2021-11
akurana-flood-2021-12
akurana-flood-2021-13
SOURCEIsthihar Imadudeen
Previous articleஜனாஸா – ஹாஜியானி சித்தி நஜிமுன்னிஸா
Next article50 பேருக்கு இனி அனுமதி