20க்கு ஆதரவாக வாக்களித்த மக்கள் காங்கிரஸின் எம்.பி.க்கள் பற்றி பலத்த விமர்சனம்

வடக்கின் அகதிகளது வாக்குரிமையை அமுல் நடத்துவதற்கு பங்களிப்புச் செய்தது சட்டவிரோதம் எனக் கூறி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் றிஷாத் பதியுதீன் விளக்கமறியலிலிருந்து விடுவிக்கப்பட்டு தனிமைப்படுத்தல் காலத்தையும் முடித்துக் கொண்டு வெளிவந்ததுடன் தடைப்பட்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் நடவடிக்கைள் பொரளை கனத்தை அருகில் ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் தலைவர் றிஷாத் பதியுதீன் உட்பட கட்சித் தொண்டர் கள் பங்குபற்றியமை ஆரம்பமானது.

றிஷாத் அரசினை கடுமையாக விமர்சித்து கருத்துத் தெரிவித்திருந்தார். அரசு அடக்கத்துக்கு அனுமதி வழங்காவிடின் நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்தப் பின்னணியில் வார இறுதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் உயர் பீடக்கூட்டம் நீண்ட இடைவெளிக்கு பிறகு கொழும்பில் றிஷாத் பதியுதீன் தலைமையில் நடைபெற்றது.

20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது மற்றும் ஜனாஸாக்கள் எரிப்பு உட்பட நாட்டின் அரசியல் நிலை பற்றி இங்கு ஆராயப்பட்டுள்ளது. இருபதுக்கு கையை உயர்த்திய பாராளுமன்ற உறுப்பினர்களான இசாக் றஹ்மான், அலி சப்றி, எஸ். எம்.எம். முஷாரப் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். மும்மூர்த்திகளும் 20க்கு கையை உயர்த்துவதற்கு உயர்பீட உறுப்பினர்கள் பலரும் தமது கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.

குறைந்த பட்சம் ஜனாஸாக்களை அடக்கும் உரிமையையாவது பெற்று தமது ஆதரவினைத் தெரிவித்திருந்தால் எமக்குத் திருப்திப்பட்டிருக்கலாம் என்று உறுப்பினர்கள் பலரும் தெரிவித்தனர். தலைவர் றிஷாத் பதியுதீன் தான் ஒரு போதும் 20க்கு ஆதரவாக ஆதரவளிக்குமாறு எவரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை என்று உறுதியாக தெரிவித்துள்ளார். கையை உயர்த்திய இசாக் மற்றும் அலி சப்றி தமது தனிப்பட்ட நன்மைகளை முன்னிட்டே வாக்களித்தார்கள் என குற்றஞ்சாட்டிய போதும் அவர்கள் தெளிவான பதில்களைத் தெரிவிக்கவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் நடந்ததற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். மூன்று எம்.பீ.க்களதும் செயற்பாடு குறித்து விளக்கம் கோருவதற்கு உயர்பீடம் தீர்மானித்துள்ளது.

Previous articleஅஸாத் சாலி தற்கொலை குண்டுதாரியாக மாறப் போகிறாரா? விமல் வீரவன்ச கேள்வி
Next articleஎமது நாட்டில் முஸ்லிம்கள் அடிப்படைவாத ஆடை, உணவுப் பழக்கங்களைக் கடைப்பிடித்து வருகின்றனர்! -அத்துரலியே ரதன தேரர்